அவிசுவாசம்
உங்கள் சிந்தனைக்கு:
பரலோகத்தில் இருந்து தேவனே இறங்கி வந்து ஆபிரகாமிடம் அடுத்த வருடம் இதே நாளில் சாராளுக்கு குழந்தை பிறக்கும் என்று சொன்ன செய்தியை சாராள் நம்பாமல் சிரித்தாள். ஆனாலும் அவளுடைய அவநம்பிக்கையை தேவாதி தேவன் பொருட்படுத்தாமல் அவள் மூலமாக சந்ததியை உருவாக்கி தேவன் தம்முடைய திட்டத்தை நிறைவேற்றினார்.
சில வேளைகளில் நம்முடைய அவிசுவாசத்தை பொருட்படுத்த மாட்டார். தேவன் எதை செய்ய நினைத்தாரோ அதை நம்முடைய அவிசுவாசம் ஒரு காலம் தடை செய்யாது.
எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்து நிற்பது தேவனுடைய இறையாண்மையே..
பல நேரங்களில் விசுவாசம் ஜெயித்தை கொடுத்தாலும் அவைகள் தேவனுடைய இறையாண்மைக்கு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிட முடியாது.
தேவன் நினைத்த காரியத்தை நம்முடைய விசுவாசம் மாற்றவும் முடியாது நம்முடைய அவிசுவாசம் தடை செய்யவும் முடியாது.
இறுதியில் அதே சாராள் கற்பந்தரிக்க பெலனடைந்து குழந்தை பெற்றாள் என்று பார்க்கிறோம்.
அதுபோல் சில நேரங்களில் நாம் உதிர்க்கும் அவிசுவாச வார்த்தைகள் தேவனை பொருட்படுத்தாது. இறுதியில் நிலை நிற்பது தேவனுடைய செயலே, சித்தமே ,திட்டமே.