*எபிரோன்: காலேபின் விருப்பமா? தேவனுடைய சித்தமா?*
*உங்கள் சிந்தனைக்கு:*
*எபிரோன்: காலேபின் விருப்பமா? தேவனுடைய சித்தமா?*
“இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்”
யோசுவா 14:12
எகிப்து தேசத்தை வேவு பார்க்க அனுப்பப்பட்ட 12 பேரில், 10 பேர் கானான் தேசத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி பயமூட்டும் அறிக்கை கூறினார்கள். அங்கே வாழ்ந்த ஏனாக்கின் குமாரர்கள் ராட்சதர்கள் என்றும், அந்த தேசத்தை கைப்பற்ற முடியாது என்றும் அவர்கள் மக்களின் விசுவாசத்தை பலவீனப்படுத்தினார்கள்.
ஆனால் யோசுவாவும் காலேபும் மட்டும் விசுவாசத்தோடு, “தேவன் நம்மோடு இருக்கிறார்; நாம் அந்த தேசத்தை சுதந்தரித்துக் கொள்ளலாம்” என்று அறிவித்தார்கள்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சந்ததி கானான் தேசத்துக்குள் நுழைந்தது. அவர்கள் தேவனுடைய உதவியால் முக்கிய ஜாதிகளை தோற்கடித்தார்கள். பின்னர் அந்த தேசம் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் பங்கிடப்பட்டது.
எண்ணாகமம் 26:55-ன் படி, ஒவ்வொரு கோத்திரத்துக்குமான
நிலத்தின் அளவு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் எந்த இடம் யாருக்குக் கிடைக்க வேண்டும் என்பது சீட்டு (Lot) மூலம் தீர்மானிக்கப்பட்டது.
“Size was determined by number, but location was determined by lot.”
இவ்விதமாக எல்லா கோத்திரங்களுக்கும் இடங்கள் பிரிக்கப்பட்டன.
காலேபு யூதா கோத்திரத்தைசச் சேர்ந்தவன்.
கானான் தேசத்தைப் பிரிக்கும் பணியில் முதலாவது அழைக்கப்பட்ட கோத்திரமும் யூதா கோத்திரமே.
ஆனால் யூதா கோத்திரத்துக்கான நிலப்பகுதி அதிகாரப்பூர்வமாகப் பிரிக்கப்படுவதற்கு முன்பாகவே காலேபு எபிரோன் மலைநாட்டை விரும்பிக் கேட்டான்.
இந்த எபிரோன் பகுதியில் இன்னும் ஏனாக்கியர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 40ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரவேல் ஜனத்தின் முன்னிலையில் தாம் சொன்ன விசுவாச அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஆவலோடு காலேபு அந்த இடத்தை கேட்டான்.
அதுமட்டுமல்ல, எபிரோன் யூதர்களின் வரலாற்றில் மிகவும் முக்கியமான இடமாகும்.
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய பிதாமகர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய இடம் இதுவே. சாராளின் கல்லறையும் அங்கேயே இருந்தது.
(ஆதி 13:18; 23:17-20; 35:27)
அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் இன்னும் ஏனாக்கியரின் கட்டுப்பாட்டில் இருப்பதை காலேபு விரும்பாமல் இருந்திருக்கலாம். இதுவும் எபிரோனை விரும்பி கேட்டதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.
யூதர்களின் வரலாற்றில் காலேபு ஒரு சிறப்பான மனிதன். “அவன் முழுமனதோடு கர்த்தரைப் பின்பற்றினான்” என்று வேதம் பலமுறை சாட்சியமாகக் கூறுகிறது. அவன் விசுவாசமுள்ளவனாக மட்டுமல்ல, தன் ஜனத்தின் வரலாறும் தேவனுடைய வாக்குத்தத்தங்களும் நிலைத்திருக்க வேண்டும் என்ற வைராக்கியமுள்ள மனிதனாகவும் காணப்பட்டான்.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் உள்ளது.
யோசுவா 15-ஆம் அதிகாரத்தில் தான் யூதா கோத்திரத்துக்கான நிலப்பகுதிகள் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் அதற்கு முன்பாகவே காலேபு எபிரோனை கேட்டதாக யோசுவா 14:12-ல் வாசிக்கிறோம்.
இந்த எபிரோன் பின்னால் யூதா கோத்திரத்துக்கு கிடைக்கப் போகும் அந்த நிலப்பரப்பில் இருந்தது.
அதாவது யூதா கோத்திரத்துக்கு கிடைக்க போகிற அந்த இடத்தின் ஒரு பகுதியான எபிரோனை
முன்னதாகவே காலேபு பெற்றுக்கொண்டான்
*இது இன்னொரு வகையிலும் நாம் பார்க்கலாம்* .
*காலேபு தெரிந்து கொண்ட இடத்தை கடவுள் lot மூலம்* *யூதாவுக்கு கடவுள் கொடுத்தாரா* ?
*அல்லது* *யூதாவுக்கு முன்குறித்த இடத்தை* *பெற்றுக்கொள்ள கடவுளுடைய இறையாண்மை அவனுக்கு உதவி* செய்ததா.
எப்படியோ *தேவனுடைய இறையாண்மையை மறுக்க முடியாது*
இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளக்கூடிய இன்னொரு காரியம் என்னவென்றால், தேவனுடைய
யோசுவா 14:6-15-ல் பதிவான இந்த சம்பவம் ஒரு சாதாரண வரலாறு அல்ல; விசுவாசத்தோடு நிலைத்திருக்கும் மனிதனை தேவன் கைவிடமாட்டார் என்பதற்கான சாட்சியாகும்.
காலேபு சொன்னதுபோலவே ஏனாக்கின் குமாரரை வெளியேற்றினான் என்பதை யோசுவா 15:13-14-ல் பார்க்கலாம். அவன் வெறும் வார்த்தைகளால் பேசவில்லை; விசுவாசத்தோடு சொன்னதை செயலால் நிறைவேற்றினான்.
ஆம், காலேபு ஒரு செயல்வீரன்.
நாமும் தேவனுக்கு உத்தமமாய் நடக்கும்போது, காலங்கள் கடந்தாலும் விசுவாசத்தில் சொல்லப்பட்ட காரியங்களை தேவன் தக்க நேரத்தில் நிறைவேற்ற வல்லவர்.
இன்றைய உலக சூழ்நிலையில் ஒவ்வொரு விசுவாசியும் தங்கள் வேலைஸ்தலங்களில், குடும்பங்களில், சமூகத்தில் “தேவன் நம்மோடு இருக்கிறார்” என்பதை வெளிப்படுத்துகிற காலேபுகளைப் போல வாழ தேவன் நமக்கு கிருபை தருவாராக.
—
பயன்படுத்தப்பட்ட நூல்கள்
Devotional Commentary — Lawrence O. Richards
Believer’s Bible Commentary — William MacDonald
South Asia Bible Commentary
The Bible Exposition Commentary — Warren Wiersbe
Wilmington’s Bible Handbook — Harold Wilmington.