Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

*சங்கீதப் புத்தகம்* *வேத பாடம் 15*
*உங்கள் சிந்தனைக்கு*

*சங்கீதப் புத்தகம்*
*வேத பாடம் 15*

*தியானப் பகுதி: சங்கீதம் 8 (2)*

எட்டாவது சங்கீதம் சிறிய சங்கீதமாக இருந்தாலும், அதில் சொல்லப்பட்ட கருத்துகள் மிகவும் ஆழமானவை. அதைக் குறித்து இப்பொழுது தியானிக்கலாம்.
இதுதான் சங்கீதப் புத்தகத்தில் *கடவுளைத் துதிக்கும் முதல் சங்கீதமாக இருக்கிறது.*
*அது மட்டுமல்ல, முழுக்க முழுக்கக் கடவுளை நோக்கியே கடவுளைத்* *துதித்துப் பாடப்பட்ட ஒரே* *சங்கீதமும் இதுதான்.*

"It *is the only praise psalm that is entirely addressed* *to the Lord."*

*முதல் வசனத்தின் சரியான மொழிபெயர்ப்பு*
“ *ஆண்டவரே, எங்கள் ஆண்டவரே” அல்லது “கர்த்தாவே, எங்கள்* *கர்த்தாவே” என்பதுதான்*
*சரியான மொழிபெயர்ப்பு* .

ஆனால், நமது பவர் மொழிபெயர்ப்பில் அப்படி மொழியாக்கம் செய்யப்படவில்லை.
*அதில் "கர்த்தாவே" என்று ஒரு தடவை மட்டுமே வருகிறது*

“ஆண்டவரே, ஆண்டவரே” என்று இரண்டு தடவை வந்தாலும், இரண்டும் ஒரே வார்த்தைகள் இல்லை என்று வேறு அறிஞர்கள் கருதுகிறார்கள். ஒன்று “யெகோவா” என்றும், மற்றொன்று “அதோனாய்” என்றும் மூல பாஷையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இதில் குறிப்பாகப் பார்க்க வேண்டிய காரியம் என்னவென்றால், “எங்கள் ஆண்டவரே” என்று கடவுளை அழைக்கும்பொழுது அதன் உண்மையான அர்த்தம் *என்னவென்றால், பிரம்மாண்டமான படைப்பை உருவாக்கிய அந்தக் கடவுள் எங்களுடைய கடவுள்; எங்களோடு உடன்படிக்கை செய்த* *கடவுள்; எங்களை கானானுக்குக் கொண்டு வந்த கடவுள்; எங்களைப்* *பாதுகாத்த கடவுள் என்று உரிமை பாராட்டிச் சொல்வதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.*
“ *எங்கள் ஆண்டவரே” என்று சொல்லும்பொழுது, அவர்களுக்குக் கடவுள் மீது உள்ள* *உரிமையைப் புரிந்துகொள்ளலாம். அவர்கள்* *வழிபடுகின்ற கடவுள் ஏதோ ஒரு பிராந்தியக் கடவுள்* *அல்ல* ; *இந்த உலகத்தைப் படைத்த கடவுள் என்பதை உலகத்திற்கு அறிவிக்கிறார்கள்.*
*இந்தச் சங்கீதத்தின் இரண்டாவது வாக்கியமும் மிக முக்கியமானது* .
“ *குழந்தைகள் மற்றும் பாலகர்களின் வாயினால் பலத்தை ஏற்படுத்தினீர்; உம்முடைய சத்துருக்களினிமித்தமும், பழிவாங்குகிறவனை அடக்கிப்போடவும்* *அப்படிச் செய்தீர்.”* — சங்கீதம் 8:2 (தமிழ் வேதாகம மொழிபெயர்ப்புகளின் கருத்து)
இதை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார்.
குழந்தைகள் என்று எழுத்தின்படியும் (literally) அர்த்தம் கொள்ளலாம்.
குழந்தையாக இருந்த மோசேயைக் கொலை செய்யப் பார்வோன் செய்த முயற்சி அவனுடைய வீழ்ச்சிக்கு அடித்தளமானது. குழந்தையாக இருந்த இயேசுவைக் கொல்ல ஏரோது அரசன் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
“குழந்தைகள்” என்ற வார்த்தையின் ஆவிக்குரிய பொருள்
இந்த வசனத்திலிருந்து சில ஆவிக்குரிய உண்மைகளைப் புரிந்துகொள்ளலாம்.
1. பலவீனமானவர்களைக்கூட தேவன் பயன்படுத்துகிறார்.
1 கொரிந்தியர் 1:27.
2. *தேவனைத் துதிப்பதில் குழந்தைகளுக்கும் இடமுண்டு.*
இதற்கான மிக முக்கியமான புதிய ஏற்பாட்டு ஆதாரம் மத்தேயு 21:15–16.
இயேசு எருசலேமில் இருந்தபோது, குழந்தைகள் அவரைத் துதித்து, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று சொன்னார்கள். இதைக் கண்ட பிரதான ஆசாரியர்களும் வேதபாரகர்களும் கோபமடைந்தார்கள். அப்போது இயேசு சங்கீதம் 8:2-ஐ மேற்கோள் காட்டினார்.
3. *கிறிஸ்தவ உலகில் மிகவும் இறையியல் படித்தவர்கள், வேத அறிஞர்கள்* *என்ற பெயரில் வேதத்தைக் கற்றறிந்தவர்கள் கூட, அடிப்படை இரட்சிப்பையும் மனந்திரும்புதலையும், பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்த வாழ்க்கையையும் புரியாமல் இருக்கின்ற வேளையில், ஆவிக்குரிய வாழ்க்கையில் குழந்தைகளாக இருப்பவர்கள் இதைப் புரிந்துகொண்டிருப்பதும் மிகப் பெரிய ஆச்சரியமே.*
*எல்லா இறையியல் வல்லுநர்களும் ஆவிக்குரியவர்கள் அல்ல. அதே வேளையில்* , *ஆவிக்குரிய மக்கள் இறையியல் கல்வியைக் கட்டாயம் புரிந்துகொண்டிருக்க* *வேண்டிய அவசியமும் இல்லை.*
*மிகப்பெரிய ஆவிக்குரிய சத்தியங்களை இறையியல் கல்லூரிகளுக்குச் செல்லாதவர்கள் அழகாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது நாம் கண்கூடாகப் பார்க்கக்கூடிய காரியம்.*
இப்படியாக, இந்த எட்டாவது சங்கீதத்தில் நான் கற்றுக்கொள்ளக்கூடிய காரியங்கள் அநேகம் *. ஒரு சங்கீதத்தைப் படித்துப் புரிந்துகொள்வதற்கு நாம் நேரம் எடுத்துச்* *செலவழிக்க வேண்டும்.* *தோண்டத் தோண்டப் பொக்கிஷங்கள் நமக்குக் கிடைக்கும்.*