. *உங்கள் சிந்தனைக்கு.* *எஸ்தர் புத்தகம் — வேதபாடம் 5* *Expository Commentary on the Book of Esther.* *எஸ்தர் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை எது.* ? கடவுள் அல்லது யெகோவா என்ற பெயர் குறிப்பிடப்படாத ஒரு புத்தகம் எஸ்தரின் புத்தகம். கடவுள
.
*உங்கள் சிந்தனைக்கு.*
.
*உங்கள் சிந்தனைக்கு.*
*எஸ்தர் புத்தகம் — வேதபாடம் 5*
*Expository Commentary on the Book of Esther.*
*எஸ்தர் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை எது.* ?
கடவுள் அல்லது யெகோவா என்ற பெயர் குறிப்பிடப்படாத ஒரு புத்தகம் எஸ்தரின் புத்தகம்.
கடவுள் கட்டளையிடாத புரீம் பண்டிகை இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது;
அது இன்றுவரை யூதர்களால் கொண்டாடப்படுகிறது.
இப்படிப்பட்ட ஒரு புத்தகம் பழைய ஏற்பாட்டில் இடம் பெற்றிருப்பதற்கான முக்கிய காரணம், தேவன் முன்குறித்த யூத மக்களை அழிக்கும் திட்டத்தை எஸ்தர், தேவனுடைய தீர்மானத்தின் படி முறியடித்ததுதான்.
இது தேவனுடைய தீர்மானமாக இருந்தாலும், எஸ்தர் அந்தத் தீர்மானத்திற்கு முழு ஒத்துழைப்பையும், தேவனுக்குக் கீழ்ப்படிதலையும் வழங்கினாள்.
தேவ சித்தம் இந்த உலகத்தில் நிறைவேறுவதில், தேவனுடைய இறையாண்மையும் மனிதனுடைய கீழ்ப்படிதலும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
எஸ்தரின் வாழ்க்கை பல திருப்புமுனைகளை கொண்டது. அந்தத் திருப்புமுனைகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கலாம்
1. வஸ்தி பதவி நீக்கம் செய்யப்பட்டு எஸ்தர் அரசியாக்கப்பட்டாள்
2. ஏகாயின் தயவு
அவனிடத்தில் எஸ்தர் தயவு பெற்றாள். அவன் உடனடியாக அவளுக்கு அழகுப்படுத்தும் பொருட்களையும் விசேஷ உணவையும் கொடுத்தான். மேலும், அரசனுடைய அரண்மனையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு தோழிகளையும் அவளுக்குக் கொடுத்து, அவளையும் அவளது தோழிகளையும் அந்தப்புரத்தின் சிறந்த இடத்துக்கு மாற்றினான்.
3. “யூதப் பெண்மணி” என்ற அடையாளத்தை மறைத்தது
4. ஆமானின் யூத அழிப்புத் திட்டம் (எஸ்தர் 3:8–13)
5. மொர்தெகாயின் சமயத்திற்கேற்ற வார்த்தைகள் — “இந்த நேரத்திற்காகவே...” (எஸ்தர் 4:14)
“இந்தக் காலத்திற்காகவே நீ ராணி பதவிக்கு வந்தாயோ என்னவோ?” என்ற மொர்தெகாயின் வார்த்தைகள், எஸ்தர் தான் ராணியாக்கப்பட்டதன் நோக்கத்தை உணர வைத்தது..
6. அழைக்கப்படாமல் ராஜாவிடம் சென்றது (எஸ்தர் 5:1–2)
உயிரைப் பணயம் வைத்து, மூன்று நாள் உபவாசத்திற்குப் பிறகு எஸ்தர் அகாஷ்வேரோஸிடம் சென்றாள். ராஜா செங்கோலை நீட்டினான்; மரணம் தவிர்க்கப்பட்டது. தேவனுடைய கரம் தெளிவாகத் தெரிந்தது.
7. அந்தச் சந்திப்பில் தன் அடையாளத்தை வெளிப்படுத்தியது
“என் உயிரையும் என் ஜனத்தையும் காப்பாற்றும்படி கேட்கிறேன்” என்று கூறி, தன் இனத்தை வெளிப்படுத்தி ஆமானை அம்பலப்படுத்தினாள். இதுவே ஆமானின் வீழ்ச்சிக்கும் யூதர்களின் இரட்சிப்பிற்கும் வழிவகுத்தது.
8. புரீம் பண்டிகையின் நிறுவல் (எஸ்தர் 9:20–32)
யூதர்கள் இரட்சிக்கப்பட்டதை நினைவுகூரும் புரீம் பண்டிகை நிறுவப்பட்டது.
எஸ்தரின் வாழ்க்கை வெறும் தனிப்பட்ட கதையாக இல்லாமல், ஒரு தேசத்தின் விடுதலையின் கதையாக மாறியது.
*இவை அனைத்தும் முக்கியமான நிகழ்வுகளாகவும் திருப்புமுனைகளாகவும் கருதப்பட்டாலும்* ,
*அதைவிட முக்கியமான ஒரு நிகழ்வை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.*
அந்த நிகழ்வை இந்த புத்தகத்தின் இரண்டாம் அதிகாரம் 20ஆம் வசனத்தில் காணலாம்:
“மொர்தெகாய் தனக்குச் சொன்னபடியே எஸ்தர் தனது குடும்ப விபரத்தையும், தான் எந்த நாட்டைச் சேர்ந்தவள் என்பதையும் இரகசியமாக வைத்திருந்தாள். ஏனெனில், *மொர்தெகாய் தன்னை வளர்க்கும்போது செய்தபடியே அவள் அவனுடைய அறிவுறுத்தல்களைக்* *கைக்கொண்டாள்.”*
— எஸ்தர் 2:20
*அதாவது, தான் அரசியாக்கப்பட்ட பிறகும், பெர்சிய* *சாம்ராஜ்யத்தின் பேரரசனுக்கு மனைவியான உயர்ந்த நிலையை* *அடைந்த பிறகும், தன்னை அந்த நிலைக்கு உயர்த்திய வளர்ப்புத் தகப்பன்* *மொர்தெகாயின் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் எப்போதும் போலக் கேட்டு நடந்தாள். இதுவே இந்த புத்தகத்தின் மிக முக்கியமான திருப்புமுனையாகும்* .
*தன்னை வளர்த்து ஆளாக்கிய, அறிவுரைகள் கூறி அரசியாக்கிய வளர்ப்புத் தகப்பனை* *மறக்காமல், “நான் அரசி” என்ற அகந்தையின்றி, அவனுடைய* *ஆலோசனையைக் கேட்டு நடந்தாள். இதுவே எஸ்தரின் வாழ்க்கையின் மிக* *முக்கியமான திருப்புமுனையாகும்* .
*ஒரு பேரரசனுடைய மனைவி என்கிற பொறுப்பையும் விசுவாசத்தை ஒருபுறமும்* *தன்னை வளர்த்த வளர்ப்புத் தகப்பனுக்குக் கொடுக்க வேண்டிய அன்பையும்* *மரியாதையை மறுபுறத்திலும்* *சமநிலைப்படுத்தி அவள் தன் கடமையை நிறைவேற்றினாள்* .
தன்னுடைய நிலையை முன்னிறுத்தி, “நான் *பேரரசி” என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் மட்டுமே இருந்து, வளர்ப்புத் தகப்பனுடைய ஆலோசனையைக்* கேட்காமல் *இருந்திருந்தால், யூதர்களின் வரலாற்றில் அவளுடைய பெயர் இடம்பெற்றிருக்காது.* எஸ்தர் புத்தகமும் இவ்வளவு முக்கியத்துவம் பெறாமல் இருந்திருக்கும்.
இதன் மூலம் தேவனுடைய இறையாண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
தேவனுடைய இறையாண்மை என்பது, தேவன் முன்குறித்த நபர்கள் தம்முடைய அழைப்பை நிறைவேற்றுவார்கள் என்பதை முன்னறிந்து, அவர்களை அழைத்திருக்கிறார் என்பதாகும்.
*We must rightly understand the sovereignty of God. In His sovereignty, God has called those whom He foreknew would fulfill His calling and purpose.*
எஸ்தரின் தாழ்மை, கீழ்ப்படிதல், தேவ சித்தத்தைப் புரிந்துகொண்ட தன்மை போன்ற அவளுடைய சிறந்த பண்புகளை நாமும் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.
1.உயர்வு வரும் போது நம்மை நாமே உயர்த்திக்கொள்ளக்கூடாது.
2.எப்போதும் தாழ்மையுடன் இருக்க வேண்டும்.
3.பழைய வாழ்க்கையையும் உதவியவர்களையும் மறந்துவிடக்கூடாது.
4.நமக்கு ஏணியாக இருந்தவர்களை எட்டி உதைக்கக்கூடாது.
5.நாம் தேவனுடைய பிள்ளைகள் என்ற அடையாளத்தை எந்த உயர்விற்காகவும் சமரசம் செய்யக்கூடாது.
6.குடும்ப உறவுகளையும் ஊழியத்தையும் சமநிலையுடன் பார்க்க வேண்டும்; ஒன்றிற்காக மற்றொன்றை சமரசம் செய்யக்கூடாது.
7.இறுதியாக, தேவனுடைய இறையாண்மையை நம்முடைய வாழ்க்கையில் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும்.
எசேக்கியேல் சண்முகவேல்