புதிய உடன்படிக்கையின் சிறப்பு.
உங்கள் சிந்தனைக்கு:
புதிய உடன்படிக்கையின் சிறப்பு.
பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்தை உரிமையாக்கி கொண்டார்கள். இது அவர்களால் சம்பாதித்த காரியம் அல்ல .
அவர்கள் தங்கள் திறமையினாலோ, ராணுவ பலத்தினாலோ அங்குள்ள மக்களை விரட்டி கானான் தேசத்தை கைப்பற்றவில்லை.
இது முழுக்க முழுக்க பிதாவாகிய தேவன் இஸ்ரவேல் ஜனங்களின் முற்பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு இவர்களோடு பண்ணின உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த தேசத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள்.
உபா1:8,21,35
"இதோ, இந்த தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்,; நீங்கள் போய், கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக் கொடுத்த அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார்."
உபாகமம் 1:8
வாக்குறுதி கொடுத்த தேவனுக்கு அவர்கள் கீழ்ப்படிந்த போது தேவன் அந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.
அதுபோல புதிய ஏற்பாட்டில் விசுவாசிகளாகிய நமக்கு கிடைக்கும் எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் பிதாவாகிய தேவன் குமாரனாகிய கிறிஸ்துவோடு பண்ணின நித்திய உடன்படிக்கையினாலும் குமாரனாகிய தேவன் தம்முடைய ரத்தத்தினாலே நம்மோடு பண்ணின உடன்படிக்கையினாலும் இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்கிறோம். எபி 13:20,லூக் 22:20 மற்றும் 1கொரி11:25.
பழைய ஏற்பாட்டு ஆசீர்வாதம் உலகத்திற்கடுத்தது. (Material blessings)அது பிதா இஸ்ரவேல் மக்களின் முற்பிதாக்களோடு பண்ணின உடன்படிக்கையின் மூலம் கிடைப்பது
ஆனால் நமக்கு கிடைக்கும் ஆவிக்குரியஆசீர்வாதங்கள்
(Spiritual blessings) பல வகைகளில் சிறப்பு வாய்ந்தது.
இது பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின் மூலம் மட்டுமல்ல, குமாரன் தம்முடைய இரத்தத்தை சிந்தி நம்மோடு ஏற்படுத்தின அந்த உடன்படிக்கை நிமித்தமும் பெற்றுக்கொள்கிறோம்.
எனவே புதிய ஏற்பாட்டு உடன்படிக்கை என்பது எல்லா வகையிலும் மேம்பட்ட ஒன்று.