Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

கிறிஸ்தவர்களும் அரசியலும்

கிறிஸ்தவர்களும் அரசியலும்
Fear God .Honour the Kings
கடவுளுக்கு அஞ்சுங்கள்; அரசருக்கு மதிப்புக் கொடுங்கள் 1 பேது 2:17
நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.1 திமோ 2:1,2
தேவனனுடைய பிள்ளைகளுக்கு அரசியல் அறிவு மிக மிக அவசியம்.
அரசியலை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இதில் எந்த வித மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை ஆனால் எங்கு நான் மாறுபடுகிறேன் என்றால் விசுவாசிகள் அதிலும் முழுநேர பணி செய்யும் ஊழியர்கள் அரசியல்வாதிகளை போல சமூக வலைதளங்களில் எழுதுவதும் முகநூல்களில் கருத்துக்களில் பகிர்வதும் அதுவும் ஆளுகையில் உள்ள தலைவர்களை கனவீனம் செய்வதும், கேலி கிண்டல் செய்வதும் வேத வசனத்திற்கு ஏற்புடையதா?. சிந்திக்க வேண்டும்.
கிறிஸ்தவம் மிக கொடுமையான பாடுகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உட்பட்ட நீரோ மன்னனுடைய காலத்தில் கூட சபை, அதிகாரத்தில் உள்ளவர்களுக்காக விண்ணப்பிக்க தவறவில்லை.
சமூக வலைதளங்களில் நம்முடைய தலைவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களை குறித்து நாகரீகமான விமர்சனம் செய்தல் அது நல்ல கிருஸ்தவ பண்பாடாகும்.
எனவே அதிகாரத்தில் உள்ளவர்களை , ஆளுகை செய்பவர்களை மதிப்பு கொடுக்க கற்றுக்கொள்வோம். .இன்றைக்கு ஆளுகை செய்பவர்களும் தேவனுடைய நீண்ட கால திட்டத்தில்(Master Plan) ஒரு பகுதி என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
எனவே 1 பேது 2:17 மற்றும் 1 திமோ 2:1,2 பற்றிய தெளிவான புரிதலை தேவன் நமக்கு தருவராக .அப்படி செய்யும் போதுதான் தேவன் தேசத்தை குறித்து நாம்செய்யும் விண்ணப்பத்திற்கு பதில் அளிப்பார்.