Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

கிறிஸ்தவம் மறந்த வேத வார்த்தை
உங்கள் சிந்தனைக்கு!
கிறிஸ்தவம் மறந்த வேத வார்த்தைகள்
" நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்தில் நிறைவேற்றுகிறேன்"( கொலோ 1:24)
புதிய ஏற்பாட்டில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பல வேத வார்த்தைகளில் இதுவும் ஓன்று.
மேலெழுந்தவாரியாக இந்த வார்த்தையை பார்த்தால் கிறிஸ்துவின் பாடுகளில் குறையிருப்பதை போலவும், அதை பவுல் தன் பாடுகளினால் பூரண படுத்துவதாக பொருள் கொள்ளலாம்.
ஆனால் அது அப்படியல்ல பவுல் சொல்லும் இந்த பாடுகள் இயேசுகிறிஸ்து நமக்காக சிலுவையில் அறையப்பட்ட பாடுகளோடு சம்மந்த பட்டது அல்ல.
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து மட்டுமே.
இயேசு கிறிஸ்து சபையாயிருக்கிற சரீரத்திற்கு தலையாயிருக்கிறார். இந்த சரீரமாயிருக்கிற சபை தன் வளர்ச்சிக்காக . பாடுகளை சகிக்க வேண்டும் . எப்படி இயேசு கிறிஸ்து பாடுகளின்
மூலமாக வும், தம்முடைய சுயரத்தத்தினாலேயும் சபையை சம்பாதித்து கொண்டாரோ
சபையும் பாடுகள், உபத்திரவங்கள் மூலமாக சபையை கட்ட வேண்டும்.
அதற்கு பவுல் தன் பங்கை பாடுகள் மூலமாக சரிக்கட்டுகிறார் . இதுதான் அதன் உண்மையான அர்த்தம்.
கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடு படவேண்டும். அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும் நாம் படுபடவேண்டியது அவசியமாயிருக்கிறது.
கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியாய் இருப்பது அவசியம்.
இதை புரிந்து கொண்ட புதிய ஏற்பாட்டு விசுவாசிகள்அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமான பட்டத்தை பாத்திரராக எண்ணினார்கள்
எனவே பாடுகள் இல்லாத விசுவாச வாழ்கை தன்னில் தாமே முரண்பட்டது. (Self contradictory )
புதிய ஆண்டில் ஆசீர்வாத கனவுகளோடு அடியெடுத்து வைக்கும் நாம் பாடுகளையும் எதிர்நோக்கி( விசுவாசத்தோடு ) வாழ்வதுதான் சமநிலை கிறிஸ்தவம். ஆசீர்வாத செய்திகளை மட்டும் புதிய ஆண்டின் முதல் நாளில் பேசுவது சம நிலை பிரமாணம் அல்ல
படிக்க ரோம 8:17 ,5:3, 2 கொரி1:5, 2 தீமோ 2:11, பிலி 3:10, 1 பேது 5:1


ON THIS DAY