Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

நம்முடைய தேவன் நம்முடைய பிதாவாக இருக்கிறார்

நம்முடைய தேவன் நம்முடைய இரட்சகர் என்பது பற்றிய புரிதல் எல்லோருக்கும் உண்டு.
அதே போல் நம்முடைய தேவன் வரங்களை அளித்து நம்மை பலப்படுத்துகிற பரிசுத்த ஆவியாய் இருக்கிறார் என்கிற புரிதலும் உண்டு.
ஆனால் நம்முடைய தேவன் நம்முடைய பிதாவாக இருக்கிறார் என்கிற சத்தியம் சபையில் அதிகம்
போதிக்கப்படாத ஒரு சத்தியம்.
என் தேவன் எனக்கு தகப்பன் .அவரேஎல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றுக்கண். யாக்கோ 1:17
இந்த வெளிப்படுதல் நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
வெறும் வாயினால் பிதா என்று சொல்வதைவிட அனுபவபூர்வமாக என் தேவன் என் இரட்சகர் மாத்திரமல்ல, அந்த இரட்சகரை அனுப்பிய அந்த தேவன் எனக்கு பிதாவாக இருக்கிறார்

'நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது'.
1 யோவான் 1:3