Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்கு எவைகள் தேவன் அளிக்கும் ஆசீர்வாதங்கள்.?
உங்கள் சிந்தனைக்கு:
புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்கு எவைகள் தேவன் அளிக்கும் ஆசீர்வாதங்கள்.?
தேவனுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்,அவருடைய கட்டளைகளை மீறக்கூடாது என்பது பொதுவான விதி. ஆனால் இந்தக் தேவனுடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படியும்போது உபாகமம் புத்தகம் 27 முதல் 30 வரை உள்ள அதிகாரங்களில் சொல்லப்பட்ட அனைத்து ஆசீர்வாதங்களும் அல்லது லேவியராகம புத்தகத்தில் 26 வது அதிகாரத்தில் சொல்லப்பட்ட ஆசீர்வாதங்களும் நமக்கு சொந்தமாகும் என்பது அர்த்தமல்ல.
அவைகள் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள், ஆசீர்வாதங்கள் .
புதிய ஏற்பாட்டில் நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது ஆவிக்குரிய ஆசீர்வாதம். தேவன் நம்மை ஆவிக்குரிய நன்மைகளினால் நிறைத்திருக்கிறார் என்பது தான் (எபே1:3)
புதிய ஏற்பாட்டில் நாம் அறிந்து கொள்ளும் சத்தியம்.
உலகத்த்திற்கடுத்த ஆசீர்வாதங்களை மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களுக்கு வாக்குதத்தங்களாக கொடுக்கவில்லை.
மத்தேயுஎழுதின நற்செய்தி நூலில் ஐந்தாவது அதிகாரம் ஒன்று முதல் 12 வரை உள்ள வசனங்களை பார்க்கும் பொழுது இந்த சத்தியம்
இன்னும் தெளிவாக புரியும்.
ஆவியில் எளிமை உள்ளவர்கள்,
துயரப்படுபவர்கள்,
சாந்தகுணம் உள்ளம் உள்ளவர்கள்,
நீதியையும் நேர்மையையும் நிலைநாட்ட தாகம் உள்ளவர்கள் ,
இரக்கம் உள்ளவர்கள்,
உள்ளத்தில் தூய்மை உள்ளவர்கள்,
சமாதானம் செய்கிறவர்கள்,
நேர்மையினிமித்தம் பாடுபடுகிறவர்கள்
இவர்கள்தான் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தெளிவாக சொல்லியிருக்கிறார்.
உலக செல்வத்தை உடையவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று நமது ஆண்டவர் ஒருபோதும் சொன்னதில்லை.
கடவுளுடைய பார்வையில் இவைகள்தான் உண்மையான ஆசீர்வாதம் என்று
சொல்லியிருக்க யூதர்களுக்கு பழைய ஏற்பாட்டில் தேவன் அளித்த இந்த மண்ணுக்குரிய ஆசீர்வாதங்களை நாம் உரிமை பாராட்டி கேட்பதற்கு நமக்கு வேதத்தில் அனுமதி இல்லை.
தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்களில் திருப்தியாக வாழ்வதே வேதம் நமக்கு போதிக்கும் பாடம்.
நம்முடைய தேவைகள் எவை என்று அறிந்த தேவன் அவைகளை ஏற்ற காலத்தில் நமக்கு அளித்து நம்மை மகிழ்ச்சியாக்குவார்.
நம்முடைய கடமை தேவனை தேடுவது மட்டும்தான் யாருக்கு எந்தெந்த ஆசீர்வாதங்களை கொடுக்க வேண்டும் என்பது அவருடைய உரிமை .
நாம் சண்டை போட்டுக் கொண்டு போராடி எந்த ஒரு உலக நன்மைகளையும் பெற முயற்சிப்பது தேவனுடைய வசனத்தின் பார்வையில் சரியில்ல.
We must not read into this an assurance that obedient saints
today will automatically experience all the special blessings
mentioned in God’s covenant with Israel, such as freedom
from sickness, guaranteed material wealth, and a long peaceful life . No such benefits are promised under the new covenant, for our wealth is primarily spiritual and not material.W.W.Wiersbe