தேவனின் அழைப்பு
உங்கள் சிந்தனைக்கு!
தேவனின் அழைப்பு
தேவன் தம்முடைய பிள்ளைகளை ஊழியத்திற்கு தெரிந்துகொள்ளும் விதத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது .பவுலுடைய வாழ்கையை பார்க்கும் போது அவர்
எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்;
யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டவன், தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவனாயிருந்த வன்
பிற மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில்ஒப்புவித்து,மரணபரியந்தம் துன்பப்படுத்தின வன்.
பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன். ஆனால் அதே வேளையில் ஆண்டவர் அவரை சந்தித்த போது இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே அவரது இருதயத்தின் விருப்பமும் தேவனை நோக்கிச்செய்யும் விண்ணப்பமுமாயிருந்து. மாம்சத்தின்படி தன் இனத்தாராகிய தன் சகோதரருக்குப் பதிலாக தானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்றுவிரும்பினவன், வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத் த கிருபை பெற்றவன்
இந்த பின்புலத்தில் இருந்து பார்க்கும்போது பவுல் யூதர்களுக்கு அப்போஸ்தலனாக இருக்க எல்லா தகுதியும் பெற்றவனாக காணப்படுகிறான்.
ஆனால் அவனை ஆண்டவர் யூதர்களுக்கான அப்போஸ்தலனாக அழைக்கவில்லை. அவனை புறஜாதிகளுக்கும்., ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அவருடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக தெரிந்துகொண்டார்.
தாயின் வயிற்றிலிருந்தது முதல் அவரை பிரித்தெடுத்து தம்முடைய கிருபையினால் அழைத் தார்.
அவருடைய குமாரனை புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை தெரிந்துகொண்டார்
ஆனால் பேதுருவை பொறுத்தளவில் பிரதான கட்டளையை நேரடியாக பெற்றுக்கொண்ட மக்களில் ஒருவன் ." உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" என்ற ஆண்டவரது கட்டளையை பெற்றவர்களில் ஒருவன்
" நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை." என்று ஆண்டவர் சொன்னதை நாம் எண்ணி பார்க்கவேண்டும் ஆனால்யாக்கோபும்,கேபாவும்,யோவானும், விருத்தசேதனமுள்ளவர்களுக்கும்,பவுலை புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, தேவன் தெரிந்துகொண்டார் , இது தேவனுடைய ELECTION ,CALLING AND PREDESTINATION
நம்முடைய வாழ்வில் கூட நாம் விரும்பும் ஊழியம் நம்முடைய திறமைகள் வரங்கள்.அனுபவங்கள் இவைகளை சார்ந்து தேவன் கொடுப்பதில்லை .அவருடைய அனாதி தீர்மானத்தின் படி ஊழியங்களை தேவன் நமக்கு தருகிறார். தேவன் நமக்கு கொடுத்த ஊழியத்தில் முழுமனதோடு நிறைவேற்றுவோம், தேவன் நமக்கு கொடுக்காத ஊழியத்தை எண்ணி, எண்ணி ஏங்குவதைவிட பெற்ற ஊழியத்தை சிறியதாக இருந்தாலும் மனமகிழ்ச்சியோடு செய்ய ஆண்டவர் கிருபை செய்வாராக