Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஆபிரகாம் சந்தித்த ஏழு சோதனைகள்
உங்கள் சிந்தனைக்கு :
ஆபிரகாம் சந்தித்த
ஏழு சோதனைகள்
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க விசுவாசத்தால் நிறைந்த போராட்டங்களை கொண்டது
.
நாம் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து நம்மை ஆண்டவர் எடுத்துக்கொள்ளும் நாள் வரைக்கும் அந்த வாழ்க்கை முழுக்க முழுக்க விசுவாச போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும்.
வயதாகிவிட்டதே, முதிர்ச்சி அடைந்து விட்டோமே என்று விசுவாச போராட்டங்கள் நம்மை விட்டு விடாது.
அந்த போராட்டங்களை தேவன் அனுமதித்துக்கொண்டே இருப்பார்.
போராட்டங்கள் இருந்தால்தான் ஆவிக்குரிய வாழ்க்கை உயிர்த்துடிப்பு உள்ளதாக இருக்கும்.
இல்லாவிட்டால் அது ஒரு மந்த நிலைக்கு சென்றுவிடும் .
எனவே போராட்டங்களை கண்டு நாம் பயப்படக்கூடாது.
நாம் போராட்டங்களை சந்தித்து தான் ஆக வேண்டும் .
அது தேவன்நமக்கு நியமித்த ஓட்டம்
ஆபிரகாமின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் 75 வயதில் ஆண்டவர் அவனை அழைத்தார்.
அவனது ஆவிக்குரிய வாழ்க்கை வெற்றிகளையும் தோல்விகளையும் கொண்ட மிகப் பெரிய ஒரு போராட்ட வாழ்க்கை ஆகும்.
அவன் சந்தித்த
7 மிகப்பெரிய போராட்டங்களை இப்பொழுது பார்க்கலாம்.
1.FAMILY TEST
ஆதி 12;1
தேவனின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து தன் இனத்தையும், நாட்டையும், தன் வீட்டையும் விசுவாசத்தினாலே பிரிந்து தேவன் சொன்ன இடத்திற்கு புறப்பட்டுப் போனன். இது அவனின் முதல் விசுவாச பரிட்சை.
இதில் ஆபிரகாம் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றுவிட்டான்
2.FAMINE TEST
ஆதி12:10
தேவன் அழைத்து வந்த கானான் தேசத்தில் பஞ்சம் வந்தபோது பஞ்சத்தில் தேவன் தன்னைக் காப்பாற்றுவார் என்று நம்பாமல் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் எகிப்துக்கு ஓடிப் போனன்.
இதில் முழுக்க முழுக்க இந்த சோதனையில் ஆபிரகாம் தோல்வி அடைந்தான்
3.Fellowship Test
ஆதி12:8-10
லோத்துவுக்கும் ஆபிரகாமுக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது விசுவாசத்தினாலே, லோத்து தான் விரும்பிய இடத்துக்கு போகலாம் என்று அனுமதித்த போது தேவன் தன்னை ஆசீர்வதிப்பார் என்று முழுக்க முழுக்க நம்பியிருந்தான்.
இதில் ஆபிரகாம் நூறு சதவீதம் வெற்றி பெற்றான
4.Fight test
ஆதி14:14-16
தன் வழியில்சென்ற லோத்து வாழ்ந்த சோதோம் நகரத்தை நான்கு அரசர்கள் கைப்பற்றிய போது அவர்களோடு போராடி லோத்துவை மீட்டெடுத்தான்.
இந்த காரியத்தில் ஆபிரகாம் முழுமையான வெற்றி பெற்றான்
5.Fatherhood test
தேவன் குறித்த காலம் வரைக்கும் காத்திராமல் சாராளின் பேச்சைக் கேட்டு ஆகாருடன் உறவு கொண்டு இஸ்மவேலை பெற்றெடுத்த அந்த காரியத்தில் விசுவாச பரீட்சையில்மிகப்பெரிய தோல்வியை சந்தித்தான்.
6.Farwell Test
முதல் மகனான இஸ்மவேலை தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவனை அனுப்பி புறம்பே தள்ளிய அந்த காரியத்தில் தேவனுடைய சித்தம் செய்து விசுவாச சோதனையில் பெற்றான்
7. Final Test தேவன் வாக்குத்தத்தம் பண்ணின ஈசாக்கை பலியிட சொன்னபோது அதற்குக் கீழ்ப்படிந்து அதை நிறைவேற்ற முயற்சித்தபோது விசுவாசபரிட்சையில்100% வெற்றி அடைந்தான்.
இப்படியாக ஆபிரகாம் சில தோல்விகளை சந்தித்தாலும் முக்கியமான விசுவாச பரிட்சைகளில் அவன் முழுமையாக தேவ சித்தத்தை செய்து இருக்கின்றான்
என்பதுதான் நாம் அறிந்துகொள்ளக் கூடிய ஒரு காரியம்.
நம்முடைய வாழ்க்கையிலும் சில சில தோல்விகள் தேவன் தம்மில் வைத்திருக்கும் திட்டத்தை ஒருபோதும் தடை செய்ய முடியாது.
தேவன் நம்மேல் கொண்ட நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் தடுக்கும் சக்தி உலகத்தில் எங்கும் கிடையாது.
தேவன் நினைத்த காரியம் நம்முடைய வாழ்க்கையில் ஒரு போதும் தடைபடாது.
எனவே தோல்விகளைக் கண்டு பின் வாங்காமல் வெற்றி பயணத்தை நோக்கி தொடர நமக்கு தேவன் கிருபை தருவாராக