எஸ்தர் புத்தகம் — வேதபாடம்* 7
*உங்கள்* *சிந்தனைக்கு.*
*
எஸ்தர் புத்தகம் — வேதபாடம்* 7
*
*Expository Commentary on the Book of Esther*
*
*எஸ்தர் பெற்ற தயவுகள்.*
இஸ்ரவேல் ஜனங்களுக்கு வரவிருந்த ஆபத்திலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக, தேவன் எஸ்தரை ஒரு கருவியாக பயன்படுத்தினார். தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, பலருடைய தயவுகள் அவளுக்குக் கிடைக்கும்படி செய்தார். அந்த மனித தயவு, அவளை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது; அதன் மூலம் இஸ்ரவேல் ஜனங்களை காக்கும் மிகப்பெரிய பொறுப்பை அவள் நிறைவேற்றினாள்.
தேவன் அவளுக்கு *அந்த தயவை அருளாமல் இருந்திருந்தால், இஸ்ரவேல் ஜனங்களை* *காப்பாற்றும் முயற்சியில் அவள் தோல்வியடைந்திருக்கலாம்* . தேவன் அவளுக்குக் கொடுத்த தயவு, அவருடைய சித்தத்தை நிறைவேற்ற உதவியது.
*எஸ்தர் புத்தகத்தில் நான்கு இடங்களில் “தயவு பெற்றாள்” என்ற* *கருத்தை காண்கிறோம்* . *அந்த ஒவ்வொரு நிகழ்வும் அவளுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை* *ஏற்படுத்தியவை. அவற்றைப்* பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.
1. யேகாயின் தயவு
அரண்மனை பெண்களைப் பராமரித்த யேகாய், எஸ்தருக்கு விசேஷ அக்கறை காட்டினான்.
“அவள் அவன் கண்களில் தயவும் கிருபையும் பெற்றாள்.”
(எஸ்தர் 2:9)
இதன் விளைவாக:
சிறந்த பராமரிப்பு கிடைத்தது
சிறந்த இடம் வழங்கப்பட்டது
மற்ற பெண்களைவிட முன்னுரிமை கிடைத்தது
இது தேவன் திறந்த முதல் கதவாக இருந்தது.
2. அனைவரின் தயவு
எஸ்தர் ஒரு யூத அனாதைப் பெண்ணாக இருந்தாலும், அரச அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டாள்.
“எஸ்தர் அவளைப் பார்த்த அனைவரின்ம் கண்களிலும் தயவு பெற்றாள்.”
(எஸ்தர் 2:15)
அவளுடைய வெளிப்புற அழகு மட்டுமல்ல; பணிவு, அமைதி, கீழ்ப்படிதல் போன்ற குணங்களும் மக்களின் மனதை ஈர்த்தன.
3. அகாஸ்வேருவின் தயவு — அரசியாக உயர்த்தப்பட்டாள்
ராஜா மற்ற பெண்களைவிட எஸ்தரை அதிகமாக நேசித்தான்.
“ராஜா எஸ்தர்மேல் அன்புகூர்ந்து அவளுக்குத் தலைக்கிரீடம் சூட்டினான்.”
(எஸ்தர் 2:17)
ஒரு அடிமை இனத்தைச் சேர்ந்த பெண் பேரரசின் ராணியாக உயர்த்தப்பட்டதற்கு காரணம் தேவ தயவே.
4. ராஜாவின் சந்நிதியில் மரணத்திலிருந்து காப்பாற்றிய தயவு
அழைக்கப்படாமல் ராஜாவிடம் சென்றவர் மரண தண்டனைக்கு உட்படலாம். ஆனால் எஸ்தர் சென்றபோது ராஜா பொற்கோலை நீட்டினான்.
“எஸ்தர் ராஜாவின் கண்களில் தயவு பெற்றாள்.”
(எஸ்தர் 5:2)
இந்த தயவு:
அவளுடைய உயிரைக் காப்பாற்றியது
யூத ஜனங்களின் மீட்பிற்கு வழியாகியது
தன் ஜனங்களை இரட்சிக்கப் பயன்படுத்தப்பட்ட தயவு
எஸ்தர் தனக்காக மட்டுமல்ல; ஒரு ஜாதியின் இரட்சிப்பிற்காக தயவு பெற்றாள். மொர்தெகாய் கூறிய வார்த்தை இதை தெளிவாக்குகிறது:
“இத்தகைய காலத்திற்காகவே நீ ராஜ்யத்திற்கு வந்தாயோ?”
(எஸ்தர் 4:14)
அதாவது, தேவன் அவளை சரியான நேரத்தில் சரியான இடத்தில் வைத்தார்.
வேதத்தில் தயவு பெற்ற மற்ற மனிதர்கள்
வேதத்தில், தேவனுடைய தயவை பெற்ற மனிதர்கள் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
தானியேல்
தானியேலுக்கு பிரதானிகளின் தயவு கிடைத்தது. அது அவனுடைய பரிசுத்தமான வாழ்க்கையை உயர்த்த உதவியது.
யோசேப்பு
யோசேப்புக்கு போத்திபாரின் தயவு கிடைத்தது. பின்னர் நடந்த நிகழ்வுகள் அவனை எகிப்தில் பார்வோனுக்கு அடுத்த நிலைக்கு உயர்த்தின. அதன் மூலம் பஞ்ச காலத்தில் தன் குடும்பத்தையும் எகிப்து தேசத்தையும் காப்பாற்றினான்.
இயேசு கிறிஸ்து
தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து மனிதராக வாழ்ந்தபோது,
“ஞானத்திலும் வளர்ச்சியிலும் தேவனிடத்திலும் மனுஷரிடத்திலும் பிரியமுள்ளவராயிருந்தார்.”
(லூக்கா 2:52)
என்று வேதாகமம் கூறுகிறது.
மனித தயவின் அவசியம்
எனவே, மனிதர்களுடைய தயவு நமக்கு மிகவும் அவசியம். நம்மிடத்தில் எவ்வளவு திறமைகளும் தாலந்துகளும் இருந்தாலும், மனிதர்களின் தயவு வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
ஆனால் அந்த தயவை அளிப்பவர் தேவனே. *மனிதர்களைப் பிரியப்படுத்தி, முகஸ்துதி செய்து பெறுவது உண்மையான தயவு* *அல்ல* . தேவன் அருளும் தயவு, அவருடைய சித்தத்தை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்ற உதவுகிறது.
*தேவகுமாரனுக்கே இந்த உலகத்தில் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற மனிதர்களின்* *தயவு தேவைப்பட்டிருந்தால்* , *அது நமக்கும் அவசியமானதே.*
முடிவுரை
எனவே, *அனுதினமும் மனிதர்களுடைய தயவுக்காக நாம் தேவனிடம் மன்றாடுவோம்* . தேவன் அருளும் மனித தயவு, நாம் எண்ணிக்கூட பார்க்காத பெரிய காரியங்களை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்றும். அதே சமயம், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றவும் அது உதவும்.
எனவே, மனிதர்களுடைய தயவைப் பெற நாம் ஒவ்வொரு நாளும் இறைவனிடம் ஜெபிப்போம்; தேவ சித்தத்தை நிறைவேற்றுவோம்