Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

*எஸ்தர் புத்தகம் — வேதபாடம் 8.* *Expository Commentary on the Book of Esther*
*உங்கள் சிந்தனைக்கு.*

*எஸ்தர் புத்தகம் — வேதபாடம் 8.*

*Expository Commentary on the Book of Esther*

தியானிக்க வேண்டிய வேத பகுதி: எஸ்தர் 6:13

இந்த வசனத்தை இரண்டு வகையில் அர்த்தம் கொள்ளலாம்.

முதல் பார்வை: ஆமானின் ஆலோசகர்களும், அவனுடைய மனைவி சிரேஷும் விடுத்த எச்சரிப்பின் அர்த்தம் என்ன?
அவர்கள் கொடுத்த எச்சரிப்பு என்ன?
“மொர்தெகாய்க்கு முன்பாக உமது வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது. அவன் ஒரு யூத ஜனத்தைச் சேர்ந்தவன் என்பதால், அவனுக்கு விரோதமாக உம்மால் நிற்க முடியாது. நீர் நிச்சயமாகவே வீழ்ச்சியடைவீர்.” — எஸ்தர் 6:13
ஆமானின் மனைவி உரைத்த இந்த வார்த்தைகளின் வரலாற்றுப் பின்னணியை பார்க்க வேண்டும். தானியேல் என்ற யூதன் பாபிலோன் சாம்ராஜ்யத்தில் உயர்ந்த நிலையில், அதாவது பாபிலோன் மாகாணத்தின் ஆளுநராக பதவி வகித்தான் என்று கருத முடிகிறது. அதேபோல், பாரசீக அரசனான தரியுவின் கீழ் உயர்ந்த அதிகாரியாக செயல்பட்டான். அதாவது, அரசனுக்கு அடுத்த நிலையில் இருந்த மூன்று பிரதானிகளில் ஒருவனாக பதவி வகித்தான்.
இவ்வாறு அடிமைகளாக வந்த யூதர்கள் இரண்டு அரசாங்கங்களிலும் உயர்ந்த நிலையை அடைந்தார்கள் என்பதை அவள் உணர்ந்திருக்கக்கூடும். ஓரளவுக்கு யூதர்களுடைய வரலாற்றை அறிந்திருக்கவும் கூடும். 400 ஆண்டுகால அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, *ஒரு புதிய ராஜ்யத்தை நிறுவிய காரியங்களில் ஏதோ* *ஒரு சக்தி அந்த மக்களோடு இருந்திருப்பதை அவள் உணர்ந்திருக்கக்கூடும். அதன் அடிப்படையிலேயே* இந்த வார்த்தைகளை அவள் சொல்லியிருக்கக்கூடும்.
*ஆமானின்* *மனைவிக்குத் தெரிந்த வரலாறும் ஆன்மீகப் புரிதலும்* , *அவளுடைய கணவனுக்கு இல்லை என்பது வருத்தமான காரியம்* .
இன்றைக்கும் யூதர்களோடு கடவுள் இருக்கிறார் என்பதை உணர்ந்து, அவர்களை ஆதரிக்கிற இனக்குழுக்களையும் நாடுகளையும் கடவுள் ஆசீர்வதித்திருக்கிறார் என்பது உண்மையான காரியம். நம் தேசத்தில் கூட, முதல் முதலாக யூதர்களுக்கு குரல் கொடுத்த கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். முதல் முதலாக அந்த நாட்டோடு தூதரக உடன்படிக்கை செய்து கொண்ட அரசாங்கமும் அந்த அரசாங்கம்தான் என்பதை மறந்து விடக்கூடாது.
இஸ்லாமிய நாடுகளோடும் இஸ்ரவேலோடும் உள்ள ராஜரிக உறவில்ஒரு சமமான நிலையை அவர்கள் ஏற்படுத்தினார்கள் என்பதையும் மறந்துவிட முடியாது

(என்னுடைய இந்த விளக்கத்தை சரியான அர்த்தத்தில், சரியான கோணத்தில் புரிந்து கொள்ளவும். இதற்காக அவர்களை நான் ஆதரிக்கிறேன் என்பது அர்த்தம் அல்ல.).

*எனவே, யூத ஜனங்கள் என்பவர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனம்* . *அந்த ஜனங்களுக்காக நாம் ஜெபிப்பது நம்முடைய கடமை* .
This is the literal meaning of the word.
இன்னொரு பார்வையும் உண்டு.
மொர்தெகாய் ஒரு உண்மையான அரசு ஊழியன். அரசனின் உயிரை எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்து காப்பாற்றியவன். கடவுளுக்காகவும் தன்னுடைய ஜனங்களுக்காகவும் வைராக்கியமாக இருந்தவன். போலியான பாராட்டுகளை விரும்பாதவன். ஆமானுக்கு அடிபணியாதவன். கடவுளுக்காக வைராக்கியமாக இருந்தவன். ஏற்ற நேரத்தில் எஸ்தருக்கு அறிவுரை வழங்கியவன். யூதர்களை அழிவிலிருந்து காப்பாற்றிய நிகழ்வில் மிகப் பெரிய பொறுப்பை வகித்தவன்.
இப்படிப்பட்ட ஒருவன் மீது எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும், அவர்களை எதிர்த்தவர்கள் வீழ்ந்து போவது நிச்சயம்.
அரசு ஊழியனாக இருந்தாலும், அல்லது எந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியனாக இருந்தாலும், அவர் தன்னுடைய பணிகளை வைராக்கியமாகச் செய்யும்போது, அவருக்கு எதிராக யார் எழும்பினாலும் அவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பதும் இந்த வசனத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய இன்னொரு பாடம்.
கடவுளுக்காக வைராக்கியமாக நிலைத்து நிற்பவர்களை உலகத்தில் எந்த சக்தியும் வீழ்த்த இயலாது. அவர்களை கடவுள் கைவிடமாட்டார்; உயர்த்துவார் என்பது நிச்சயம்.
கடவுளுக்காக, மொர்தெகாய் போல நாமும் நம்முடைய வேலை பார்க்கும் இடங்களில் சாட்சியாகவும் வைராக்கியமாகவும் இருப்போமாக.