“பாவத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவன் வேத வசனத்தோடு இணைந்து இருக்க வேண்டும்.”
*உங்கள் சிந்தனைக்கு!*
“ *The man who is separated from sin should be separated to the Scripture.”*
*“பாவத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவன் வேத வசனத்தோடு இணைந்து* *இருக்க வேண்டும்.”*
*உலகத்தின் பாவங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவன், வேத வசனத்தோடு இணைந்த வாழ்க்கைக்குள் செல்ல வேண்டும்.* பாவத்திலிருந்து விடுதலை பெற்றவன், வசனத்திற்குக் கீழ்ப்படிந்து வாழும் வாழ்க்கைக்குள் நேராகக் கடந்து செல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால், அவன் மீண்டும் பாவ வாழ்க்கைக்குள் சிறைப்பட்டுப் போகக்கூடும்.
வேதத்தின் மீது உள்ள அன்பும், வேத வாசிப்பும், வேத தியானமும் மூலமாகத்தான் பாவத்தின் அழுத்தத்திலிருந்து தொடர்ந்து விடுதலை பெற்று வாழ முடியும். *பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்குக்* *கிடைக்கும் வேத வெளிச்சம், நம்முடைய* *ஆவிக்குரிய வாழ்க்கையில் கிடைக்கும் மிகப்பெரிய ஆயுதங்களில்* *ஒன்றாகும்* . அந்த வெளிச்சத்தின் மூலம் பாவத்தை அடையாளம் கண்டு, அதை மேற்கொள்ளவும் வெற்றி கொள்ளவும் முடியும்.
*அனுதின வேத வாசிப்பும், வேத தியானமும் கிறிஸ்தவ* *ஆவிக்குரிய வளர்ச்சியின் அடிப்படையான மூலக்கூறுகள்.*
வேதத்தோடு இணைந்த மனிதன், தன் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும், எல்லா நேரங்களிலும், மற்றவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயனுள்ளவனாக இருப்பான். அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஏற்படும் தட்பவெப்ப நிலைகள், ஏற்றத் தாழ்வுகள், சோர்வுகள், ஏமாற்றங்கள் ஆகியவை ஒருபோதும் அவன் மற்றவர்களுக்கு பயனுள்ளவனாக இருப்பதைத் தடுக்க முடியாது.
ஏனென்றால், அவனுடைய வாழ்க்கையின் வேர் தேவனுடைய வார்த்தையில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
இதைத்தான் சங்கீதம் 1:1–3 நமக்கு உணர்த்துகிறது.
“அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரத்தைப்போலிருப்பான்; அது தன் காலத்தில் தன் கனியைத் தந்து, அதன் இலை உதிராதிருக்கும்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.”
*பாவத்திலிருந்து பிரிந்த வாழ்க்கை மட்டும் போதாது; வசனத்தோடு* *இணைந்த வாழ்க்கை அவசியம்*
.
*பாவத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை, தேவனுடைய வார்த்தைக்குள் வேரூன்றிய வாழ்க்கையாக மாறும்போதுதான் அது நிலையானதும்* , பயனுள்ளதுமானதும், கனிகொடுக்கும் வாழ்க்கையாகவும் மாறுகிறது.