Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

Religious lies
*உங்கள் சிந்தனைக்கு:*
*Tamil Bible study.*
*படிக்க. யோசுவாவின் புத்தகம் ஒன்பதாவது அதிகாரம்..*

*கிபியோனியரின் பொய்கள்.*
Religious lies
நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் தோல்வி அடைகிற இடம் எதுவென்றால் ஆவிக்குரிய பொய்களை அடையாளம் காண முடியாமல் அவைகளை உண்மை என்று நம்புகிற இடம்தான்
.
கிபியோனியரின் உண்மையைப் போல் தோன்றுகின்ற 4 பொய்களினால் ஏமாற்றப்பட்டது யாரென்றால் யோசுவாவும் அவனுடைய படைத் தளபதிகளும்தான். கானான் தேசத்தை வேவு பார்க்க அனுப்பிய 12 பேரில் 10 பேர் சொன்ன பொய்யான அறிக்கையை நம்பாதவர்களில் யோசுவாவும் ஒருவன்.
அப்படிப்பட்ட யோசுவா இந்த இடத்தில் ஏமாற்றப்பட்டு விட்டான்.
உபா20:10-20 வரை உள்ள வசனங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் யாரோடு உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும், யாரை அழிக்க வேண்டும் என்பதை பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

20:16ல் தேவன் வாக்குறுதி கொடுத்த கானான் தேசத்தில் உள்ள மக்களை முழுவதுமாக அழிக்க வேண்டும் என்பது தேவனுடைய கட்டளை.

கானான் தேசத்திற்கு வெளியே உள்ள மக்களோடு அவர்கள் விரும்பினால் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளலாம் .
இதை அறிந்து தான் கிபியோனியர் கனானுக்கு அப்பால் உள்ள தேசியத்திலிருந்து வந்ததாக பொய்யை சொல்லி ஏமாற்றினார்கள்.

இந்தப் பொய்யை யோசுவா நம்பி ஏமாந்தான்.
இதே போல் நம்முடைய வாழ்க்கையிலும் இந்த கிபியோனியர் போன்றவர்கள் பலவிதமான பொய்களை சொல்லுவார்கள்.

இவைகளை *Religious lies என்று அழைக்கலாம்* .

ஆறுதல் ,உபதேசம், உதவி ஐக்கியம் என்கிற பல பெயர்களில் இவர்கள் நம்மை சில நேரங்களில் தேவனுடைய சித்தத்தை விட்டு வழி விலக செய்து விடுவார்கள்.
பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அதைப்பற்றியுள்ள உண்மை நிலையை நாம் அறிந்து கொள்ள முடியும். அதற்குள்பல இழப்புகளை நாம் சந்திக்க நேரிடும்.

எனவே நம்முடைய வாழ்க்கையில் இந்த கிபியோனியர்களை குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
நல்லவைகள் போல தோன்றுகின்ற எந்த காரியமாக இருந்தாலும் நாம் முதலில் அவைகள் தேவனுக்கு சித்தமானதா என்பதை நம்மால் முடிந்த அளவுக்கு அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

அந்த விருப்பம் நம்மிடத்தில் காணப்பட வேண்டும்.
மற்றவைகளை தேவன் பார்த்துக்கொள்வார்.

நூற்றுக்கு நூறு தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ள அறிய முடியாவிட்டாலும் அந்த சிந்தனையோடு இருக்கும் பொழுது தேவன் நம்மை சாத்தானுடைய தந்திரத்தில் இருந்து காத்துக் கொள்வார்.
"We don’t seek God’s will like customers who look at
options but like servants who listen for orders.
“If any
of you really determines to do God’s will, then you will
certainly know” (John 7:17 tlb) is a basic principle for
victorious Christian living." W.W.WIERSBE

இந்த செய்திக்கு நான் பயன்படுத்திய நூல்கள்
1. Devotional commentary by
Lawrence O. Richard

2. Believer's commentary
By William McDonald

3.South Asia Bible commentary
4. The Bible exposition commentary.W.W.Wiersbe
எசேக்கியேல் சண்முகவேல்