Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

பழைய ஏற்பாட்டை எப்படி தியானிக்க வேண்டும்.

பழைய ஏற்பாட்டை நாம் தியானம் செய்வதற்கும் புதிய ஏற்பாட்டை தியானம் செய்வதற்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு என்று நான் கருதுகிறேன்.
புதிய ஏற்பாட்டை பொறுத்த அளவில் அவைகள் அனைத்தும் இயேசு கிறிஸ்தவின் பாடுகள் மரணத்தோடு நேரடியாக சம்பந்தப்படுத்தி எழுதி இருப்பதால் விசுவாசிகளா கிய நமக்கு அதை புரிந்து கொள்ள ஓரளவுக்கு தேவனுடைய வெளிச்சம் இருந்தால் போதும்.

ஆனால் பழைய ஏற்பாட்டை பொருத்த அளவில் அதில் சொல்லப்பட்ட காரியங்களை வெறும் சரித்திர குறிப்புகளாக, நிகழ்வுகளாக ஒரு கதையை போல் படிப்பதனால் நமக்கு எந்த ஆவிக்குரிய பயனும் கிடையாது.

அல்லது அந்த நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டும் அதில் சொல்லப்பட்ட ஆறுதலான வார்த்தைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை மையமாக வைத்து படித்தாலும் கூட தேவன் அவைகளை எழுதி வைத்த நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது.

பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்ட பல நிகழ்வுகளுக்கும் ஒரு ஆவிக்குரிய அர்த்தம்,பார்வை உண்டு.
அவைகள் உணர்த்தும் ஆவிக்குரிய அர்த்தத்தை இன்றைய வாழ்க்கையோடு நாம் இணைத்து பார்க்க வேண்டும்.

அப்பொழுதுதான் ஆவியானவர் அவைகளை எழுதி பாதுகாத்து வைத்த நோக்கம் நமக்குள் நிறைவேறும்.
கடமைக்காக ஒரு நாளைக்கு இவ்வளவு அதிகாரம் படிக்க வேண்டும் என்கிற ஒரு கட்டுப்பாட்டோடு நாம் பழைய ஏற்பாட்டை படித்தால் அந்த நிகழ்வுகள் மூலமாக தேவன் நமக்கு சொல்ல விரும்பும் சத்தியங்கள் நம்முடைய கண்களுக்கு மறைந்துவிடும்.

இதுதான் அநேக விசுவாசிகளின் வாழ்க்கையில் நடக்கிறது.
தேவன் ஒரு காரணம் நோக்கம் இல்லாமல் இந்த நிகழ்வுகளையும் பிழைகள் இல்லாமல் நமக்கு எழுதி வைத்திருக்கிறமாட்டார் அவைகளைப் படிக்கும் போது அவைகளை புதிய ஏற்பாட்டுடன் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

அந்த சரித்திர நிகழ்வுகள் நமக்கு கொடுக்கும் எச்சரிக்கை என்ன! அறிவுரை என்ன? ஆறுதல் என்ன? என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி தியானித்தால் மட்டுமே பழைய ஏற்பாட்டை தேவன் எழுதி வைத்து, பாதுகாத்த நோக்கம் நம்முடைய வாழ்க்கையில் நிறைவேறும்.
வெறும் கதை புத்தகமாக நாம் படித்தால் அதனால் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு எந்த பயனும் கிடைக்காது. புதிய ஏற்பாட்டை கருத்துடன் படிப்பது போல பழைய ஏற்பாட்டு நூல்களையும் ஏனோதானோ என்று படிக்காதபடி அக்கறையோடு சிரமம் எடுத்து கவனத்தோடு பல்வேறு வேத விளக்கவுரைகளோடு ஒப்பிட்டு பார்த்து அவைகள் என்னுடைய வாழ்க்கைக்கு அந்த நிகழ்வு என்ன சொல்ல வருகிறது என்கிற உணர்வோடு படிக்க வேண்டும்.
பழைய பாட்டை இந்த சிந்தனையோடு படிக்கும் போது தான் அவைகள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் இல்லையென்றால் வெறும் ஆறுதலான வசனங்களை மட்டுமே படித்து அவைகளை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் நாம் திருப்பி போடாத அப்பத்தை போலிருப்போம்.

இறுதியான ஒரு வேண்டுகோள் அன்பு சகோதரர்களே பழைய ஏற்பாட்டை ஒரு கதையாக நிகழ்வாக படிக்க வேண்டாம் அவைகளை புதிய ஏற்பாட்டு நிகழ்வோடு ஒப்பிட்டு இன்றைக்கு பழைய ஏற்பாட்டு வீரர்கள் நமக்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கண்டு கொள்ள வேண்டும்.
எசேக்கியேல் சண்முகவேல்