நம்முடைய தேவன் ஈசாக்கின் தேவனும் கூட.
யூத வம்சம் என்பது ஆபிரகாமில் இருந்து தொடங்குகிறது. அது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ,யோசேப்பு என்று தொடரோட்டமாக சென்றது.
ஆபிரகாமை எடுத்துக் கொண்டால் அவன்தான் விசுவாசத்தின் தகப்பன். ஆனாலும் அவனிடத்தில் பலவீனங்கள் தோல்விகள் இல்லாமல் இல்லை.
கர்த்தருக்கு சித்தம் இல்லாமல் எகிப்துக்கு சென்று, அதன் விளைவாக ஆகாரை திருமணம் செய்து கொண்டது, தன் மனைவியை சகோதரி என்று சொல்லச் சொன்னது என்று பலவித பலவீனங்கள் கொண்டிருந்தாலும் இறுதியில் அந்த தொடர் ஓட்டத்தின் முடிவில் தன் மகனுக்கு ரெபேக்காளை திருமணம் செய்து வைத்து ஓட்டத்தை முடித்தான்.
ஈசாக்கை எடுத்துக் கொண்டால் அவனுடைய ஆரம்ப ஓட்டம் பிரம்மாண்டமாக இருந்தது. ரெபேக்காளை திருமணம் செய்து கொண்டது, பின்பு குடும்பத்திற்காக ஜெபித்தது என்று பிரகாசமாக சென்று கொண்டிருந்தது.
ஆனால் முடிவில் தேவனுடைய சித்தத்தை அறியாமல் உணவிற்காக ஏசாவை ஆசீர்வதிக்க நினைத்தது, ஒரு மிகப்பெரிய ஆவிக்குரிய வீழ்ச்சி.
*நீண்ட நாட்கள் வாழ்ந்திருந்தாலும் அவனைப் பற்றிய குறிப்புகள்** *மிகவும் குறைவு.*
யாக்கோபை எடுத்துக் கொண்டால் தகப்பனையும் சகோதரனையும் ஏமாற்றியவன். வெகுமதிகள் மூலமாக எதையும் சாதிக்கலாம் என்று முயற்சித்தவன். பெனியேலில் தேவன் சந்திக்கும் வரை அவனுடைய வாழ்க்கை மேடு பள்ளங்கள் உள்ள வாழ்க்கை. ஆனால் அதற்குப் பிறகு சீரான வாழ்க்கை.
ஓட்டத்தை ஜெயமாக முடித்தான்.
யோசேப்பை பொறுத்த அளவில் மிகவும் வெற்றிகரமான ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை .
வெளிப்படையான பாவங்கள் எதுவும் காணப்படாமல் ஓட்டத்தை ஜெயத்தோடு முடித்தவன்.
*இப்படி ஆபிரகாம், ஈசாக்கு, இந்த யாக்கோபு ,*
*யோசேப்பு என்று நான்கு பேரும் ஒவ்வொரு* *நிலைகளில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றினார்கள்* . ஈசாக்கிடம் பலவீனங்கள் காணப்பட்டாலும் அவனும் தன்னுடைய பங்கிற்கு தேவ சித்தத்தை நிறைவேற்றினான். எல்லோரும் யோசேப்பை போல் பிரகாசமாக ஆவிக்குரிய ஓட்டத்தை முடிப்பார்கள் என்று சொல்ல முடியாது .ஆண்டவர் தன்னை ஆபிராமின் தேவன் என்று மட்டும் சொல்லவில்லை தன்னை ஈசாக்கின் தேவன் என்றும் யாக்கோபின் தேவன் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
அதே போல் தான் நம்முடைய சபைகளிலும் யாக்கோபுகளும் உண்டு யோசேப்புகளும் உண்டு. ஆபரகாம்களும் உண்டு. ஈசாக்குகளும் உண்டு. எல்லா விசுவாசிகளும் ஒரே நிலையில் ,ஒரே ஆவிக்குரிய முதிர்ச்சியில் இருக்க மாட்டார்கள். இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களும் பல்வேறு தரப்பு நிலைகளை சார்ந்தவர்கள். அவர்களை வைத்துதான் தேவன் இந்த உலகத்தை கலக்கினார். இந்த ஆவிக்குரிய சத்தியத்தை நாம் புரிந்து கொண்டால் ஆவிக்குரிய வாழ்க்கையில் *வெற்றி பெற்றவர்களை நாம் அதிகமாக கொண்டாடவும் மாட்டோம்.பலவீனமான விசுவாசிளை அற்பமாக எண்ணவும் மாட்டோம்.*
*ஒருவனுடைய ஓட்டம் சிறந்ததா சிறப்பில்லாததா என்பதை நாம் அறிய முடியாது.*
உலகம் கொடுக்கும் மதிப்பெண்கள் பல நேரங்களில் தவறாக போய்விடும்.
இந்த உலகத்தில் தம்முடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கடவுளுக்கு ஆபிரகாமும், தேவை ஈசாக்கும் தேவை.
இந்த செய்திக்கு நான் பயன்படுத்திய நூல்கள்
1.W.W.Wiersbe 's The Bible Exposition commentary
2. Believer's Bible commentary
William McDonald
Ezekiel Shanmugavel.