நம்முடைய பலவீனங்களையும் தோல்விகளையும்கூட தம்முடைய நோக்கத்திற்காக தேவன் பயன்படுத்துவார்.
யோசுவாவும், இஸ்ரவேலின் தலைவர்களும் தேவனுடைய சித்தத்தை அறியாமல் கானானில் வாழ்ந்த கிபியோனியரோடு அவர்கள் சொன்ன வார்த்தையை நம்பி சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்கள். ஆனால் நம் தேவன் அதையும் தம்முடைய நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்.
எரிகோ பட்டணத்தையும், ஆயி பட்டினத்தையும் தனித்தனியாக போரிட்டு இஸ்ரேல் ஜனங்கள் வெற்றி கண்டார்கள்.
கிபியோனியர் வாழ்ந்த பட்டினத்தை அருகில் உள்ள மற்ற எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக், எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக், யர்மூத் ராஜாவாகிய பீராமுக் லாகீசீன் ராஜாவாகிய யப்பியாவு, எக்லோனின் ராஜாவாகிய தெபீரு ஆகிய ஐந்து அரசர்கள் ஒன்று சேர்ந்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாக போரிட முன்வந்தார்கள்.
வனாந்தரத்தில் 40 வருடங்கள் சுற்றித்திரிந்து எந்த போர் அனுபவம் இல்லாத ஜனங்கள். இவர்கள்
எரிகோவை போரிடாமலே ஜெயித்தார்கள். ஆயி பட்டினத்தை தேவன் கொடுத்த போர் யுக்தியினால் ஜெயித்தார்கள்.
கிபியோனியர் இஸ்ரேல் ஜனங்களோடு சமாதான உடன்படிக்கைக்கு வராமல் இருந்திருந்தால் இந்த அரசர்கள் ஒன்று சேர்ந்து போரிட வந்திருக்க மாட்டார்கள். தனித்தனியாக போரிட முன் வந்திருப்பார்கள். ஆனால் புதிய அரசியல் சூழ்நிலை இந்த ஐந்து அரசர்களை ஒன்று சேர வைத்தது.
இந்தப் போரில் தேவன் தம்முடைய ஜனங்களை காக்க இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமைகளை வெளிப்படுத்தி தம்முடைய ஜனத்தை பாதுகாத்தார். ஐந்து அரசர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டார்கள்.
நம்முடைய வாழ்க்கையிலும் நமக்கு ஏற்படும் தோல்விகள் பலவீனங்கள் கீழ்ப்படியாமைகள் இவைகளையும் தேவன் சில நேரங்களில் தம்முடைய நீண்ட கால திட்டத்திற்காக பயன்படுத்துவார்.
God Instead of having todefeat these five city-states one by one, He would help Joshua conquer them all at one time! Just as God used the
defeat at Ai to form a battle plan for victory over Ai
(Josh. 8), so also He used Joshua’s mistake with the
Gibeonites to protect Gibeon and accelerate the conquest of Canaan.
*The mistakes we make embarrass us, especially*
those mistakes that are caused by our running ahead of
*the Lord and not seeking His will. But we need to*
*remember that no mistake is final for the dedicated*
*Christian* . God can use even our blunders to accom plish His purposes. W.W.Wiersbe.
எசேக்கியேல் சண்முகவேல்