ராகாப், கிபியோனியர் ஒரு ஒப்பீடு.
ராகாப் எரிகோ பட்டணத்தில் வாழ்ந்த ஒருன் விலை மகள்.
ஆனால் இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு செய்த அதிசயங்களை கேள்விப்பட்டு அந்த கடவுள் மீது நம்பிக்கை வைத்து அவர்களின் தேவனே உண்மையான தேவன் என்று நம்பி அந்த மக்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தங்கள் நாட்டை வேவு வாக்கு வந்த இஸ்ரவேலர்களை தன் உயிரை பணயம் வைத்து பாதுகாத்து அனுப்பினாள். (யோசுவாவின்2 வது அதிகாரம்)
அதனால் அவள் பாதுகாக்கப்பட்டாள். அவள் இஸ்ரவேல் ஜனங்களோடு இணைக்கப்பட்டாள் இயேசு கிறிஸ்துவம்ச வரலாற்றில் அவள் பெயர் காணப்படுகின்றது.மத் 1:5
கிபியோனியர் இஸ்ரவேலின் தேவனின் வல்லமையை நம்பினார்கள். ஆனால் தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள தந்திரமாக தங்கள் அந்நிய தேசத்திலிருந்து வந்தவர்கள் போல் அடையாளப்படுத்திக் கொண்டு இஸ்ரவேல் ஜனங்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இவர்கள் இதயபூர்வமாக இஸ்ரவேலின் தேவனை தங்கள் இதயத்தில் கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை. தங்கள் உயிருக்காக மட்டும் தந்திரமாக இஸ்ரேல் மக்களோடு இணைந்து கொண்டார்கள். யோசு 9:24
அந்தத் தந்திரம் வெளிப்பட்டபோது அவர்களுக்கு தங்கள் தவறுக்கு வருந்தினார்கள்.. ஆனாலும் அவருடைய தந்திரமான செயலுக்காக தண்டனையாக வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு அடிமைகளாக வாழ்ந்தார்கள்.
ராகாபை போல் இஸ்ரவேல் ஜனங்களோடு சுதந்திரமாக இணைக்கப்படவில்லை. இருவருமே உயிர் பாதுகாப்புக்காக இஸ்ரவேல் தேவனிடம் அண்டினாலும் ராகாப் கர்த்தர் மீது வைத்த விசுவாசம் உண்மையானது.
இது போல்தான் இன்றைக்கும் இயேசு கிறிஸ்துவை இரண்டு தரப்பட்ட மக்கள் அணுகி வருகிறார்கள். ஒரு கூட்ட மக்கள் உண்மையான இரட்சிப்புக்காக, ஆன்மீகத் தேவைகளுக்காக வருகிறார்கள். இன்னொரு கூட்டம் உலக நன்மைகளுக்காக ஆசிர்வாதங்களுக்காக சரீர பாதுகாப்புக்காக தேவனிடம் வருகிறார்கள்.
முதல் கூட்டம் தேவனுடைய பிள்ளைகளாக மாறிவிடுகிறார்கள். இரண்டாவது கூட்டம் உலக நன்மைகளைப் பெற்று வாழ்நாள் இறுதிவரை அவருடைய பிள்ளைகளாக மாறாமல் பிசாசின் அடிமைகளாகவே வாழ்ந்து விடுகிறார்கள்.
நாம் என்ன நோக்கத்திற்காக இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறோம் என்பது தான் முக்கியம்.
கீழ்காணும் வேத பகுதிகள் நமக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிப்பை தருகின்றன.
"இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்."
1 கொரிந்தியர் 15:19
அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பிக்க வேண்டும்
யோவான் 6:27
இந்த செய்திக்கு நான் பயன்படுத்திய நூல்கள்
1. Devotional commentary by
Lawrence O. Richard
2. Believer's commentary
By William McDonald
3.South Asia Bible commentary
4.The Bible exposition commentary.W.W.Wiersbe. எசேக்கியல் சண்முகவேல்