யோவா 1:1-5 விளக்கம் பாகம்3
யோவா 1:1-5 விளக்கம் பாகம்3
இந்தப் பகுதியில் முதலாம் வசனத்தின் கடைசிப் பகுதியை பற்றி தியானிக்கலாம்.
"அந்த வார்த்தை தேவனாய் இருந்தது" (பவர் மொழிபெயர்ப்பு)
"அந்த வாக்கு கடவுளாய் இருந்தார்"
(ராஜரிகம் அவர்கள் மொழிபெயர்ப்பு)
திரித்துவத்தின் இரண்டாவது நபரான குமாரன்(வார்த்தை) கடவுளாக இருந்தார்.
வார்த்தை தேவனாக அல்லது இறைவனாக அல்லது கடவுளாக இருந்தது என்றால் என்ன அர்த்தம்?
அப்படி என்றால் அவர் கடவுளுக்கு சமமாக இருந்தார் என்பதுதான் அதன் உண்மையான அர்த்தம்.
இறைவனான பிதாவை போலவே குமாரனும் நித்தியமானவர்.They are co-equal ,co-eternal.
பிதாவுக்கு குறைவானவர் அல்ல. There is no inferiority in the Word to the God the Father.
தேவனாக அந்த வார்த்தை இருந்தது என்பதற்கு பதிலாக இந்த வார்த்தை தேவனாக இருந்தது என்று ஆவியானவர் எழுதி இருக்கிறார்.
இதற்குக் காரணம் கிறிஸ்துவினுடைய தெய்வீகத்தை வலியுறுத்தி சொல்வதுதான்.
The predicate in the original precedes the subject.
அடுத்ததாக நான் சிந்திக்க கூடிய பகுதி "அந்த வார்த்தை தேவனாக இருந்து" என்பதுதான்.
இதில் முக்கியமான பதம் "அந்த"என்கிற சொல். ஆங்கிலத்தில்"The Word "என்கிற சொல்.
. இதனுடைய அர்த்தம் என்னவென்றால் "அந்த" வார்த்தையாகிய தேவன் உலகத்தை படைத்த கடவுள் என்பதாகும்.
"அந்த" வார்த்தை ஆதியிலே இருந்தது.
உலகம் உருவாக்கப்பட்ட பொழுது "அந்த வார்த்தை"இறைவனோடு இருந்தது.
"அந்த வார்த்தை" இறைவனாக இருக்கிறது.
மிகவும் கருத்தாழம் பொருந்திய இந்த வார்த்தைகளை மிகுந்த கவனத்தோடு தியானிக்கும் போது பலவித ஆவிக்குரிய சத்தியங்கள் நமக்கு புரியும்.
இந்த பகுதிகளை சிறந்த வேத விளக்க நூல்களோடு , இணைத்து( Bible commentaries )படித்தால் நமக்கு இன்னும் நன்றாக புரியும் .
கர்த்தராமே இந்த வசனத்தைப் பற்றி உள்ள வெளிச்சத்தை நமக்கு தருவாராக.
தொடரும்
எசேக்கியேல் சண்முகவேல்
Expository thoughts on The Gospels.By John charles Ryle
2. New testament commentary
The gospel of John.
By William Hendrickson
3. Believer's Bible commentary
By William McDonald
4. Unlocking the Bible.David Pawson