யோவா 1:1-5 விளக்கம் பாகம்3
உங்கள் சிந்தனைக்கு.
யோவா 1:1-5 விளக்கம் பாகம்3
யோவான் இந்த நற்செய்தி நூலில் ஏன் குமாரன் என்று குறிப்பிடாமல் வார்த்தை என்று குமாரனை அழைக்கிறார்?
இதற்கான வரலாற்று பின்னணியை பார்க்க வேண்டும்.
ஆதித் திருச்சபையில் முதலில் யூதர்கள்தான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள்.
அதற்குப் பிறகு கிரேக்கர்கள் பெருந்திரளில் ஆண்டவரை ஏற்றுக் கொண்டார்கள்.
அவர்களுக்கு மற்ற நற்செய்தி நூல்களில் சொல்லப்பட்டபடி நற்செய்தியை சொன்னால் விளங்காது.
அவர்களுக்கு மேசியா, பழைய ஏற்பாடு பஸ்கா போன்ற யூதர்களுடைய நிகழ்வுகளை குறித்து சொன்னால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
கிரேக்கர்கள் ஏற்றுக் கொள்கிறபடி ஆண்டவருடைய வார்த்தைகளை சொல்ல வேண்டும்.
இதற்காகத்தான் குமாரன் அல்லது இயேசு என்பதற்கு பதிலாக கிரேக்க வார்த்தையான Logos என்கிற பதத்தை யோவான் பயன்படுத்துகிறார்.
இந்த லோகோஸ் என்கிற சொல்லுக்கு reason speech, principle why என்கிற பல அர்த்தங்கள் உண்டு.
கிரேக்கர்கள் தர்க்கத்தில் சிறந்தவர்கள்.
உலகத்தில் நடக்கின்ற நிகழ்வுகள் எல்லாமே எதோ ஒரு நோக்கத்தோடும், காரணத்தோடும் இருப்பதாக எண்ணுகிறவர்கள். .
"logos is ‘the reason why’.
John, realizing that Jesus
is the ultimate reason ‘why’ everything happened, took up this idea and called
Jesus the logos, ‘the Word".David Pawson
எனவே யோவான் கிரேக்க மொழியில் "ஏன்" அல்லது "காரணம் "என்கிற அர்த்தமுடைய லோகோஸ்( Logos ) என்கிற சொல்லை குமாரன் அல்லது இயேசு என்கிற வார்த்தைக்கு பதிலாக இங்கு பயன்படுத்தினார்.
அது மாத்திரமல்ல பழைய ஏற்பாட்டை கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கும் பொழுது யூத மதத்தை சேர்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் இந்த லோகோஸ் என்ற வார்த்தையை நூற்றுக்கணக்கான இடங்களில் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
(.Septuagiant verson.)
எபிரேய மொழியில் தேவனுடைய வார்த்தையை குறிக்கக்கூடிய "davar"என்கிற பதம் வருகின்ற பல இடங்களில் கிரேக்க மொழிபெயர்ப்பில் லோகோஸ் என்கிற வார்த்தையை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த லோகோஸ் என்ற கிரேக்க வார்த்தை தான் ஆங்கிலத்தில் Word என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இதனுடைய அடிப்படையில் பார்க்கும் பொழுது யோவான்
"குமாரன்" என்கிற சொல்லுக்கு பதிலாக "வார்த்தை" என்கிற சொல்லை பயன்படுத்தியதற்கான காரணங்கள்.
1. லோகோஸ் என்கிற சொல் ஏற்கனவே கிரேக்க மொழியில் "வார்த்தை" "ஏன்"என்கிற அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டது.
2.எனவே தேவகுமாரன் என்ற வார்த்தைக்கு பதிலாக லோகோஸ் என்கிற கிரேக்க வார்த்தையை பயன்படுத்தினால் கடவுளைப் பற்றி கிரேக்கர்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள் என்று யோவான் கருதினார்
3. பழைய ஏற்பாட்டு கிரேக்க மொழிபெயர்ப்பில் தேவனுடைய வார்த்தை என்று வருகிற பல இடங்களில் லோகோஸ் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எண்11:23,உபா13:14, 32:45-46
"In examining the Septuagint we find that the Greek word “logos” was a commonly used word, used hundreds of times, and was translated from the Hebrew “davar”. It is often translated “word” in our English versions:
And Jehovah said unto Moses, Is Jehovah’s hand waxed short? now shalt thou see whether my word (logos) shall come to pass unto thee or not. (Numbers 11:23)
then shalt thou inquire, and make search, and ask diligently; and, behold, if it be truth (logos), and the thing certain, that such abomination is wrought in the midst of thee, (Deuteronomy 13:14)
And Moses made an end of speaking all these words to all Israel; And he said unto them, Set your heart unto all the words (logous) which I testify unto you this day, which ye shall command your children to observe to do, even all the words of this law. (Deuteronomy 32:45-46)"
4. ஆதி1:3ல் உலகம் தேவனுடைய வார்த்தையினாலே உருவாக்கப்பட்டது என்கிற கருத்தையும் இங்கே இணைத்து இருக்கிறார்.
இந்த நான்கு காரணங்களின் அடிப்படையில்தான் யோவான் "குமாரன்" அல்லது இயேசு என்கிற வார்த்தைக்கு பதிலாக Logos என்கிற கிரேக்க வார்த்தையை பயன்படுத்தினார் .
இந்த கிரேக்க வார்த்தை தான் ஆங்கிலத்தில் Word என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்த Word என்கிற ஆங்கிலச் சொல் தமிழில் "வார்த்தை" என்று மொழியாக்கம் பண்ணப்பட்டுள்ளது.
சுருக்கமாக செல்ல வேண்டுமென்றால்
Logos. இது வார்த்தையைக் குறிக்க கூடிய கிரேக்கச்சொல்.
இது ஆங்கிலத்தில் Word மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இது தமிழில் "வார்த்தை" என்கிற சொல்லாக மாறி உள்ளது..
Ref1. Expository thoughts on The Gospels.By John charles Ryle
2. New testament commentary
The gospel of John.
By William Hendrickson
3. Believer's Bible commentary
By William McDonald
4. Unlocking the Bible.David Pawson.