Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

எது உண்மையான வீரம்
சாத்தானின் எதிர்ப்புகள், ஆபத்துகள், நாச மோசங்கள் வரும் என்று அறிந்த பின்னும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முனைவதும், தேவனுக்கடுத்த காரியங்களில் ஈடுபடுவதும்தான் வீரத்தின் உச்சக்கட்டம்.
இயேசு கிறிஸ்துவும் பவுலும் எருசலேமுக்கு போனால் ஆபத்துகள் நாசமோசங்கள் இழப்புகள் வரும் என்று அறிந்தும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற எருசலேமுக்கு தைரியமாக சென்றார்கள்,பாடுகள் அனுபவித்தார்கள் (அப்போஸ் 21:8-13,லூக்கா 9:51).
தைரியம் அல்லது வீரம் என்பது அதிகமாக சத்தமிட்டு பேசுவதனாலோ கூச்சலிடுவதினாலோ, நடனமிடுவதினாலோ நாம் வீரமுள்ள நபர்களாக மாறிவிட முடியாது. முக்கியமான காலகட்டங்களில் நெருக்கமான நேரங்களில் எல்லாமே இழக்க வேண்டிய நேரங்கள் சூழ்நிலைகள் வந்தாலும் ஆண்டவரை மறுதலிக்காமல் ஆண்டவருக்காக சாட்சியாக வைராக்கியமாக இருப்பதே வீரம்.

இமைப்பொழுது மறுதலிப்பு நம்மை சாத்தான் உயர்ந்த இடத்தில் கொண்டுவந்து உயர்த்தி வைத்து விடும்.

இமைப்பொழுதும் ஆண்டவரை மறுதலிக்காமல் இருந்தால் நாமே கிறிஸ்துவுக்குள் வெற்றி வீரராக விண்ணகத்தில் காணப்படுவோம்.
தேவனுடைய பிள்ளைகளாகிய நாமும்கூட இயேசுவைப்போல,பவுலை,போலஅதே தைரியம் ,வீரம் உடைய மக்களாக காணப்படுவோம்.
*The man who has peace of God in his heart can meet all life’s perils unafraid*.. எசேக்கியல் சண்முகவேல்*