நமது கானான் பயணம்
"அப்படியே யோசுவா, கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்னபடியெல்லாம் தேசமனைத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலருக்கு, அவர்கள் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சுதந்தரமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது."
யோசுவா 11:23.
இந்த தேவனுடைய வார்த்தையை நாம் சாதாரணமாக கடந்து போக முடியாது.
கானானை நோக்கிய இந்த பயணம்ஆதி12:1ல் ஆரம்பித்து யோசு 12:23 ல் முடிவடைகிறது.
ஆபிரகாமை தான் முன் குறித்த கானான்தேசத்திற்கு அழைத்த போது அவன் கீழ்படிந்து தேவன் காட்டின தேசத்திற்கு சென்றான்.
அந்த தேசத்தை அவனுடைய சந்ததிக்கு தருவேன் என்று வாக்களித்தார்.
அதற்குப் பிறகு அந்த பயணம் ஈசாக்கு, யாக்கோபு ,அவருடைய 12 குழந்தைகள் என்று இந்தப் பயணம் கடந்து சென்றது. அவர்கள் இறுதியில் 400 ஆண்டுகள் எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்தார்கள்.
பின்பு அவர்கள் மோசேயின் தலைமையில் எகிப்துவிட்டு கானானை நோக்கி புறப்பட்டார்கள். எகிப்து தேசத்தில் அடிமையாய் இருந்த இந்த ஜனங்களை தேவன் தம்முடைய ஓங்கிய புயத்தினாலும் பலத்த கரத்தினாலும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து அவர்களை வெளியேற்றினார்.
பின்பு அவர்கள் செங்கடலைக் கடந்தார்கள் கானானை நெருங்கி சேர வேண்டிய இறுதி காலகட்டத்தில் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்து தேவனுடைய தண்டனைக்கு ஆளானார்கள் அதன் விளைவாக எகிப்திலிருந்து புறப்பட்ட லட்சக்கானக்கான யுத்த புருஷர்கள் அனைவரும் வனாந்தரத்தில் மடிந்து போனார்கள். யோசுவாவும் காலேபும் இதற்கு விதிவிலக்கு.
பின்பு மடிந்து போன இவர்களின் சந்தததி யோர்தானை அடைந்தார்கள். இந்த நிகழ்வு இஸ்ரேல் ஜனங்கள் எகிப்தில் இருந்து புறப்பட்ட 40 வருடங்களுக்குப் பிறகு நடந்தது. யோர்தானை கடந்த பின்பு எரிகோவை கைப்பற்றினார்கள் ஆய் பட்டணத்தை கைப்பற்றினார்கள். இப்படியாக ஏழு வருடங்கள் கானானில் குடியிருந்த அத்தனை ஜனங்களையும் வெளியேற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகஆபிராமுக்கு தேவன் வாக்குத்தத்தம் பண்ணின இந்த கானானை கைப்பற்றினார்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் கானானை கைப்பற்றிய நிகழ்வு என்பது நம்முடைய இந்த ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நிழலாக இருக்கிறது. ஆவிக்குரிய கானான் போன்ற வாழ்க்கையில் தேவன் நமக்கு வைத்திருக்கும் இலக்குகள் நோக்கங்கள்போதும் அழைப்புகள் இவைகளை நிறைவேற்ற பல்வேறு நிலைகளைக் கடந்து செல்ல வேண்டும். அதற்கு நீடிய பொறுமை வேண்டும். நமக்கென்று நியமிக்கப்பட்ட ஓட்டம் என்று ஒன்று உண்டு.
அதில் தான் நாம் ஓட முடியும். நமக்கென்று ஒரு செங்கடல் ஒரு யோர்தான் ஒரு எரிகோ ஒரு ஆய்வு பட்டணம் மற்றும் பல்வேறு எதிரிகள் உண்டு இவைகளை மேற்கொள்ள நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் காணப்படும் செங்கடல் காதேஸ்பர்னேயா யோர்தான் எரிகோ ஆயி பட்டணங்கள் மற்றொரு வாழ்க்கையில் காணப்பட முடியாது.
அவர்களுடையயோர்தான் வேறு நம்முடைய யோர்தான் வேறு.
மற்றவர்களின் வெற்றிகளையோ தோல்விகளையோ ஆசிர்வாதங்களையோ நம்முடைய தோல்விகளோடு ஆசீர்வாதங்களோடு ஒப்பிட முடியாது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில்ஒப்பீடு செய்து முன்னேற வேண்டும் என்று எண்ணுகிறவர்கள் ஒருபோதும் நமக்கு தேவன் வைத்திருக்கும்இலக்கை அடைய முடியாது.
We have individual race and calling.
நம்முடைய வெற்றி தோல்வியை தீர்மானம் செய்து மதிப்பீடு செய்யக்கூடிய இடம் பரலோகம் மட்டுமே. நம்மை சூழ்ந்து இருப்பவர்களோ, நம்முடைய சபையோ, நம்முடைய தலைவர்களோ, நம்முடைய குடும்ப உறவினர்களோ நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் செயல்பாட்டை உண்மையாக நேர்மையாகமதிப்பிட முடியாது.
நமக்கென்று தனிப்பட்ட முறையில் ஒரு அழைப்பையும் ஒரு ஓட்டத்தையும் ஒரு ஊழியத்தையும் வைத்திருக்கிறார்.
அதை அறிந்து கொண்டு அதன் வழியில் நடந்து இந்த உலகத்தில் கானானை அடைவது தான் சிறந்த பாக்கியம். ஏறக்குறைய 600 ஆண்டுகள் கடந்த பிறகு தான் தேவன் வாக்குறுதி கொடுக்க கானானை ஆபிரகாமின் சந்ததி அடைய முடிந்தது.
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை என்பது மிக நீடிய பயணம். ஆயி பட்டணத்து தோல்விகளும் வரும். காதேஸ்பர்னேய போன்ற தண்டனைகளும் வரும். எரிகோ பட்டணத்து வெற்றிகளும் கிடைக்கும். யோர்தான் செங்கடல் போன்ற தேவனுடைய அதிசயங்களையும் பார்க்கலாம். கிபியோனியர் போன்ற ஏமாற்றுகின்ற நிகழ்வுகளையும் பார்க்கலாம்.. இறுதியில் நம்மை அழைத்தவர் நம்முடைய அழைப்பை நிறைவேற்றுவார் இதுவே நம்முடைய நம்பிக்கை.
எசேக்கியேல் சண்முகவேல்