விசுவாசத்தை செயலில் காண்பித்த யோசுவாவும் காலேபும்.
மோசே கானான் தேசத்தை வேவு பார்க்க 12 நபர்களை அனுப்பிய போது அவர்களில் 10 பேர் கானான் தேசத்தில் வாழ்ந்த ஏனாக்கியரை பார்த்து பயந்தார்கள். அவர்கள் இராட்சதர்கள். அவர்கள் முன்பு இஸ்ரவேல் ஜனங்கள் வெட்டுக்கிளியை போல் இருப்பார்கள், என்று சொல்லி இஸ்ரவேல் ஜனங்களை பயமுறுத்தி முழு இஸ்ரவேல் ஜனங்களையும் தேவனுக்கு நேராக கலகம் செய்ய தூண்டி விட்டார்கள்.
அதன்விளைவு அவர்கள் கானானை நெருங்கி வந்த போதிலும் கானானுக்குள் நுழைய முடியாமல் போய்விட்டது.
ஆனால் அந்தப் 12 பேரில் காலேபும் யோசுவாவும் மட்டும்" கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்." என்றார்கள்.
எண்ணாகமம் 14:8.
அந்த விசுவாச வார்த்தைகளை அவர்கள் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தினார்கள்.
40 வருட வனாந்தர வாழ்க்கைக்குப் பிறகு யோசுவா கானானில் வாழ்ந்த எல்லா மக்களையும் (கிபியோனியரை தவிற) விரட்டி அப்புறப்படுத்தினான். அப்படி யோசுவா விரட்டிய ஜனங்களில் எந்த மக்களை பார்த்து இஸ்ரவேல் ஜனங்கள் பயந்து நடுங்கினார்களோ அந்த மக்களான ராட்சதகர்களான ஏனாக்கியரும் அடங்கும்.யோசே 11:21-22.
அதே போல் காலேபும் தனக்கு வழங்கப்பட்ட மலைப் பிரதேசமான எபிரோனில் வாழ்ந்த ஏனாக்கியரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.யோசு 14:11-26.
40 வருடங்களுக்கு முன்பு சொன்ன விசுவாச வார்த்தைகளை தங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றி காட்டியவர்கள்தான் யோசுவாவும் காலேபும். தேவன் நமது பட்சத்தில் இருக்கும் பொழுது காலங்கள் எவ்வளவு கடந்தாலும் நாம் சொன்ன விசுவாச வார்த்தைகளை நமக்கு வாய்க்கப் பண்ணுவார்.
விசுவாச வார்த்தைகளை பேசினால் மட்டும் போதாது அவர்களை செயல்படுத்த நாம் கர்த்தரோடு வாழ்கின்ற வாழ்க்கையும் அவசியம்.
நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் விசுவாசம்.
இந்த செய்திக்கு நான் பயன்படுத்திய நூல்
1. The Bible explosition commentary .W.W.Wiersbe.
எசேக்கியல் சண்முகவேல்