பர்னபா, பவுல் பிரிவினை..
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
புதிய ஏற்பாட்டில் ஒரு பிரிக்கமுடியாத இணையாக இருந்தவர்கள் பர்னபாவும் பவுலும் தான்.
பர்னபா இல்லை என்றால் பவுல் இல்லை.
பவுலின் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு அஸ்திபாரம் இட்டவர் பர்னபா. பவுலின் அழைப்பை சரியாக புரிந்துகொண்டு அவரை தேடி கண்டுபிடித்து அந்தியோகியா சபைக்கு கொண்டு வந்து உலகுக்கு அடையாளம் காட்டியவர் பர்னபா.
முதலாவது மிஷினரி பயணத்தில் இருவரும் இணைந்து பணி செய்தனர். அந்த அளவுக்கு எந்தவித ego இல்லாமல் பயணம் செய்தனர்.
ஆனால் அவர்களுக்கிடையில் ஒரு சிறிய மனக்கசப்பு அந்தியோகியா சபையில் பேதுரு வந்தபோது நிகழ்ந்தது.
அதை இருவரும் அப்போதே சமரசமாயிருக்கவேண்டும் என்று சில வேத அறிஞர்கள் கூறுகிறார்கள்.
அப்படி இல்லையென்றால் இரண்டாவது மிஷினரி பயணத்தில் யாரை கூட்டிக்கொண்டு போகலாம் என்கிற பிரச்சனை எழுந்தபோது அவர்களுக்குள் இவ்வளவு பெரிய வாக்குவாதங்கள், அதுவும் பிரிந்து போகக்கூடிய அளவுக்கு நிகழ்ந்திருக்காது என்று கூறுகிறார்கள்
இதுபற்றி F F BRUCE என்கிற வேத பண்டிதர் இவ்விதமாக எழுதுகிறார்
Some Bible teachers maintains that Luke misrepresents the real cause of quarrel: that it actually arose out the incident at Antioch when Barnabas was inclined to follow Peter’s example of “Play –acting” to Paul’s great indignation (Gal.2”13).
It may be that on present occasion the friction between the two would not have been so sharp if it not had been for that earlier difference. We cannot say” . F.F Bruce
Some bitterness, if is not buried in time may lead to affect the great plan of God in our life.
(பவுல் கலாத்திய சபைக்கு எழுதிய கடிதத்தில் இரண்டாம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட நிகழ்வே இதற்கு அடிப்படை காரணம்.
இந்த நிகழ்வில் பேதுருவினுடைய வெளி வேடத்தை பர்னபா ஆதரித்தான் .கலா2:13.
இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தை இருவரும் சமரசம் செய்து கொண்டிருந்தால் இரண்டாவது மிஷினரி பயணத்தில் இந்த பிரிவினை வந்திருக்காது என்பது இவருடைய கருத்து)
பவுலும் பர்னபாவும் பிரிந்திருக்கக் கூடாது என்று பலரும் கருதலாம்.
ஆனாலும் தேவனுடைய அநாதி தீர்மானத்தின்படி அந்த பிரிவினையையும் தேவன் தம்முடைய நோக்கத்திற்காக பயன்படுத்தினார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பிரியக்கூடாதவர்கள் பிரிந்துவிட்டர்கள். ஒருவேளை அந்த நேரத்தில் திருச்சபைகள் இதை சபைக்கு பெரிய இழப்பாக கருதியிருக்கலாம். ஆனால் அப்படி நிகழவில்லை என்றால் யாரை பவுல் வேண்டாம் என்று நிராகரித்தாரோ பின்னாளில் அவன் (மார்க்) பவுலுக்கு பயன் உள்ளவனாக மாறினார் என்பது சபை சரித்திரம்.
அந்த மார்க்கு தான் ஒரு அருமையான
சுவிசேஷத்தை எழுதினார் என்பதையும் மறக்க முடியாது.
இதுபற்றி WARREN W .WIERSBE என்கிற இவ்வாறாக எழுதுகிறார்
’God changes His workmen, but his work goes right on. If God had to depend on perfect people to accomplish His work, He would never ever get anything done. Our limitations and imperfections are good reasons for us to depend on the grace of God, for our sufficiency is from Him alone ‘’.
(கடவுள் தம்முடைய வேலையாட்களை மாற்றிக் கொண்டே இருப்பார். ஆனால் அவரது வேலை தொடர்ந்து கொண்டே இருக்கும். தேவன் பூரண பட்ட மனிதரை தான் பயன்படுத்துவார் என்றால் தேவனுடைய ஊழியம் ஒரு காலம் இந்த பூமியில் நிறைவேறாது)
என்ன ஒரு அருமையான பாடம் தேவனுடைய ராஜ்யத்தில் Setback என்பதே கிடையாது எல்லாவற்றையும் தம்முடைய திருவுள சித்தத்தின்படி நன்மைக்கு ஏதுவாகவே செய்துமுடிக்கிற தேவன் நம் தேவன். இப்படி வேதத்தில் பல நிகழ்வுகளையும் பார்க்கலாம்.
யூதர்கள் கிபியோனியர்களோடு செய்த உடன்படிக்கையும் இப்படித்தான்.
Read Acts 15 cpt Gal 2:11-18,
2 Tim 4:11
எசேக்கியேல் சண்முகவேல்