Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

பவுலும்கொரிந்து சபையும் (1)

பவுல் உண்டாக்கிய சபைகளிலேயே அவருக்கு மிகவும் சவாலாக இருந்தது கொரிந்து சபைதான்.
சபையை ஆரம்பித்ததிலிருந்து அதை நிலைநிறுத்தியது வரை அவர் சமாளித்த சவால்கள் ஏராளம் ஏராளம்.
இங்கு சபையை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
கொரிந்து பட்டிணம் ஒரு மிக பெரிய வணிக நகரம்.
.கடற்கரை நகரமும் கூட.செல்வ செழிப்பில் ஊறின நகரம்.அதே வேளையில் விபச்சாரம் வேசித்தனம் குடி போதை போன்ற பாவங்களில் உச்சத்தை தொட்ட நகரம்.

சரீரத்தில் செய்யும் எந்த பாவமும் ஆவிக்குரிய காரியங்களை கட்டுப்படுத்தாது என்கிற கிரேக்க தத்துவத்தை பின்பற்றுகிற நகரம்.

This worst aspect of thinking of separation of the physical and spititual was prevalent in Corinth city.

இதன் விளைவாகத்தான் பவுல் "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? என்று கூறுகிறார்.

மேலும் இந்த நகரத்தில் ‘Aphroite” என்கிற கோயில் இருந்தது .
அதில் உள்ள 1000கும் மேலான கோவிலிலுள்ள (தேவதாசிகள்) sacred prostitutes தினமும் மலை நேரங்களில் விபசாரத்திற்காக வருகின்ற நிகழ்வுகளும் உண்டு.

"Paul would be forgiven for wondering if people so busy woud ever have time to listen to the Gospel."

இந்த சவாலான நகரத்தில் தேவனுடைய சபையை பவுல் உருவாக்கினதே ஒரு மிக பெரிய தேவனுடைய கிரியை.
கொரிந்து நகரத்தை சந்தித்த தேவன் எந்த நகரத்தையும் சந்திக்க வல்லமையுள்ள தேவனாயிருக்கிறார்.

இந்த நகரத்தில் 18 மாதங்கள் தங்கி ஊழியம் செய்து பலதரப்பட்ட மக்களை மந்தைக்குள் கொண்டுவந்தார் .
ஆனல் அவர் போன பிறகு சில ஆண்டுகளுக்குள் அந்த சபை பிரிந்து கறைபட்டு மகிமை இழந்த சபையாக மாறிவிட்டது.

It became divided, defiled, and disgraced Chruch.

தான் வளர்த்த, ஆதரித்த, இடைவிடாமல் ஜெபித்த அந்த சபை, தன்னுடைய தோற்றத்தை,பேச்சை, அப்போஸ்தல அதிகாரத்தை நேர்மையை கேள்விக்குள்ளாக்கியது.
நாம் 2 கொரிந்தியார் அதிகாரம் 10 முதல் 13 வரை படித்தால் பவுலுடைய கதறலை படிக்கலாம்.
வேறு எந்த சபையிலும் அவர் இங்கு போல் வேறு எங்கும் இவ்வாறு அவமானப்பட்டு மனம் உடைந்தது இல்லை .
இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்
எசேக்கியேல் சண்முகவேல்