Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

மோசேயை ஆண்டவர் அழைத்த போது அந்த அழைப்புக்கு கீழ்ப்படியாமல் அவன் சொன்ன காரணங்கள்.

1 தனக்கு திறமை இல்லை.Lack of capability‌
"நான் எம்மாத்திரம் "
யாத்3:11

2.தன்னிடம் இஸ்ரவேலுக்கு சொல்ல வேண்டிய செய்தி ஒன்றும்  இல்லை.
Lack of messages
"நான் என்ன சொல்லுவேன்"    யாத்  3:13

3..தனக்கு அதிகாரம் இல்லை . Lack of authority
யாத் 4:1

4.பேச்சில் வல்லவன் இல்லை. Lack of eloquence.

“நான் வாக்கு வல்லவன் அல்ல”    யாத்  4:10

5. பழைய தோல்வி
Lack previous success 6:12

என்று சொல்லி  தேவனின் அழைப்பை நிராகரிக்கிறான்.
இது மேலெழுந்த வாரியாக பார்த்தால் மோசேயின் மீது நமக்கு ஒரு எரிச்சல் வரும்.
ஆனாலும் அவன்  மறுத்த காரணங்களில் அர்த்தங்கள் இல்லாமல் இல்லை.

அவனுடைய வாழ்க்கையை நாம் சற்று கவனித்துப் பார்ப்போம் என்றால்
இது புரியும்.

பார்வோனுடைய அரண்மனையில் இருந்தாலும் அவனுடைய பாரம் தன் சொந்த ஜனங்களை பற்றியதாக இருந்தது. எவ்வளவு பாரம் உள்ளவனாய் இருந்திருந்தால்  எகிப்தியரோடு போராடி அவர்களை கொலை செய்திருப்பான்.
சொந்த ஜனங்கள் அன்றைக்கு அவனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை .
தான்  யூதர்களோடு பேசி அவர்களை சம்மதிக்க வைக்க கூடிய வார்த்தை அல்லது அதிகாரம்தன்னிடம் இல்லையே என்கிற ஒரு வருத்தம்.

தான் எவ்வளவுதான் மிகப்பெரிய இடத்திலிருந்து வந்தாலும் அதை யூதர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அவனை அங்கீகரிக்க மறுத்த காரியம்.

யூதர்களின் புறக்கணிப்பு.

பார்வோன் அவனைப் பிடிக்க வந்தபோது  மீதியான் தேசத்திற்கு தப்பி ஓடிய காரியம் .

40 வருடங்கள் வனாந்தரத்தில் வெறுமையாக வாழ்ந்த காலங்களில் .
வசதி வாய்ப்புகளை இழந்து ஜனங்களுக்காக வைராக்கியமாக இருந்தாலும் அவர்கள்  தன்னை    ஏற்றுக் கொள்ளவில்லையே என்கின்ற வருத்தம். இந்த விரக்தியின் அடிப்படையில் தான் அவன் இந்த மாதிரி ஒரு காரணங்களை சொல்லி அழைப்பை  மறுத்திருக்கிறான்.
தன்னை முழுமையாக அறிந்திருந்தான்.
எனவே மோசேயின் மீது நாம் மேலிருந்து வாரியாக குற்றம் சுமத்த‌ முடியாது. அதையும் ஆண்டவர் உணர்ந்திருந்த காரணத்தினால் தான் அவனை அப்படியே புறந்தள்ளி விடாமல், கோபம் கொண்டாலும் அவனுடைய வாயாகஆரோனை நியமித்தார் .அவனைக் கொண்டு தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றினார்

J.Oswald  Sanders என்கிற தேவ மனிதர் இந்த ஒரு தாழ்மைதான் மோசேயை கர்த்தர் தேர்ந்தெடுக்க காரணம் என்று சொல்லுகிறார்.
ஆம் உண்மையாகவே தன்னை முழுவதுமாக
உணர்ந்த, தன் நிலைமை அறிந்த தாழ்மையுள்ள மனிதனை இன்றும் தேவன் தேடிக் கொண்டிருக்கிறார்.
எசேக்கியல் சண்முகவேல்