Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

கானான்-நில பகிர்வு-யோசேப்பின் குமாரரின் முறையீடு-காலேபின் விசுவாசம்-ஒரு ஒப்பீடு.

படிக்க யோசுவா 17வது அதிகாரம்.
யூதா கோத்திரத்திற்கு நிலம் பிரித்துக் கொடுக்கப்பட்ட பிறகு அடுத்தது யோசேப்பின் புத்திர்களுக்கு பிரித்தளிக்கப்பட்டது.

ரூபன் மூத்த மகன் என்கிற உரிமையை இழந்த காரணத்தினால் அந்த உரிமையை யாக்கோபு யோசேப்புக்கு அளித்தார்.

யோசேப்பின் இரண்டு பிள்ளைகளையும் தன்னுடைய பிள்ளைகளாக தத்தெடுத்துக் கொண்டார்.
இப்பொழுது சீட்டு போட்டு யோசேப்பின் பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தில் அவர்கள் திருப்தி அடையவில்லை.
அவருடைய வாதம் என்னவென்றால் எங்களுடைய மக்களின்
எண்ணிக்கைக்கு ஏற்றபடி நிலம் வழங்கப்படவில்லை என்பது .17-14-18.

மேலும் அந்த இடம் மலைகளால் சூழப்பட்ட இடம்.
அதே சமயத்தில் சமவெளியில் வாழ்கின்ற மற்ற இனத்தார் இரும்பு இரதங்களை கொண்டிருக்கிறார்கள் என்பதாகும்.
அவர்கள் வைத்த வாதம் 'நாங்கள் மலை தேசத்தை பயன்படுத்திக் கொள்ள மாட்டோம். அதே சமயத்தில் சமவெளியில் வாழ்கின்றவர்கள் இரதங்களை வைத்திருக்கப்படியால் அவர்களை மேற்கொள்ள எங்களால் முடியாது, எனவே எங்களுக்கு கூடுதலான இடத்தை கொடுங்கள்' என்று கேட்டார்கள்.
அதற்கு யோசுவா சரியான பதிலை 17:15,17,18.ல் பார்க்கலாம்.
அதாவது மலைநாட்டை வெட்டி பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள்மக்கள் பெருக்கத்தை கொண்டு இரதங்களை வைத்துள்ள அவர்களை மேற்கொள்ள உங்களால் முடியும் என்று சொல்லி அவர்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டான்.
இந்த இடத்தில் காலேபின் விருப்பத்தையும் யோசேப்பின் குமாரரின் முறையீட்டையும் ஒத்துப் பார்க்க வேண்டும். ஏனாக்கின் வம்சத்தில் வந்த ராட்சதர்களை மேற்கொள்ள மலை தேசமான எபிரோனை எனக்குத் தாருங்கள் என்று இன்று சவாலிட்ட காலேபு எங்கே? பெருங்கூட்ட ஜனமாக இருந்தாலும் இரதங்களை வைத்துள்ள புற இனத்தாரை வெற்றி கொள்ள முடியாது என்கிற அவிசுவாச வார்த்தைகள் கூறும் இவர்கள்எங்கே?

காலேபு கர்த்தருக்கு இதயசுத்தியோடு உத்தமமாக நடந்தான் என்று வேதத்தில் ஆறு தடவை வருகிறது.

அவன் வித்தியாசமான ஆவி உடையவனாக காணப்பட்டான்.எண்ணா14:24.
உலகத்தோடு சமரசம் செய்து கொள்ளாமல் உலகம் பார்க்கின்றபடி பார்க்காமல் தேவனுக்கு உத்தமமாய் நடந்து வேறு ஆவி உடையவர்களாக வாழ்கின்ற விசுவாசிகளே இந்த உலகத்தில் மக்கள் முன்பாக ஒரு பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

"Those who talk the most accomplish the least"Wiersbe .
Practical man says," Seeing is believing!".
But the man of faith replies, "Believing is seeing!”

நாமும் எந்த நிலையில் இருந்தாலும் நம்முடைய நிலையில் தேவனுக்கு உண்மையாக நடந்து உலகத்தின் ஆவியை பெறாமல் வேறு ஆவியை உடைய மக்களாக மாறும் பொழுது நாமும் ஒரு காலேபாக மாற முடியும்
சகோ.எசேக்கியல் சண்முகவேல்