Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஓட்டத்தை ஜெயமாக முடித்த யேசுவா.
நான் ஆவிக்குரிய போராட்டத்தை நன்றாகப் போராடினேன். எனக்கு ஒப்புவிக்கப்பட்ட ஓட்டத்தை ஓடி முடித்தேன். என் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
2 தீமோத்தேயு 4:7.

இப்படி பவுலைப் போல பழைய ஏற்பாட்டில் தேவன் கொடுத்த பணியை முழுவதுமாக நிறைவேற்றிய ஒரு சில தேவனுடைய மனிதர்களில் யோசுவாவும் ஒருவர்.

எகிப்தில் அடிமையாக பிறந்து பின்பு மோசேயின் வேலைக்காரனாக இருந்து அதற்குப் பிறகு மோசே மரித்த பிறகு தலைமை பொறுப்பை ஏற்று லட்சக்கணக்கான யூதர்களை வழிநடத்தி யோர்தானை கடந்து கானான் பிரதேசத்தில் அநேக இடங்களை வெற்றிகொண்டு அவர்களுக்கு தேவனுடைய சித்தத்தின் படி இடங்களை பிரித்துக் கொடுத்து தன்னுடைய ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தவர் இந்த யோசுவா.

He was a god's prepared servant for a prepared place.

ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேலாக மோசேயின் கீழ் பணிபுரிந்து மோசேனுடைய தலைமைத்துவ பண்புகளை அனைத்தும் கற்றுக் கொண்டு அதற்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தக்கூடிய கிருபையை தேவனிடத்தில் இருந்து பெற்ற ஒரு மனிதர்.
யோசுவாவிடம் காணப்பட்ட சில முக்கிய குணங்கள்.
1. தாழ்மையுள்ள மனிதன்.

கடைசி மட்டும் மோசேக்கு உண்மை உள்ள வேலைக்காரனாக, கீழ்ப்படிதல் உள்ளவராக தேவன் தன்னை உயர்த்தும் வரைக்கும் கீழ்ப்படிந்த மனிதர். மிகப் பிரம்மாண்டமான வெற்றிகளை கண்டாலும் பெருமை கொள்ளாமல் இறுதி மட்டும் கர்த்தருடைய சித்தத்திற்கு அடிபணிந்து வாழ்ந்த மனிதர்




2. விசுவாசம் உள்ள மனிதர்.

12 பேர்களை கானான் தேசத்தை வேறு பார்க்க அனுப்பிய போது அவர்கள் திரும்பி வந்து அவர்களில் பத்து பேர்கள் கூறிய அவிசுவாச வார்த்தைகளினால் ஜனங்கள் கலக்கமடைந்த போது அதை எதிர்த்து நின்ற 2 மனிதர்களில் யோசுவாவும் ஒருவர்.

யெகோவா எங்களில் பிரியமாயிருந்தால், பாலும் தேனும் வழிந்தோடும் அந்த நாட்டிற்கு எங்களை வழிநடத்தி அதை எங்களுக்குத் தருவார் என்று விசுவாசத்தோடு காலேபோடு சொன்னவர்
(எண்ணாகமம் 14:8)..
விசுவாசத்தை செயலில் காட்டியவர்.

3. இவர் சிறந்த தைரியம் உள்ள போர் தளபதி.


இவர் அமலேக்கோடு நடத்திய முதல் போரிலேயே வெற்றி பெற்றவர். பின்பு போர் பயிற்சி எதுவும் பெறாத அடிமைகளான யூதர்களை கொண்டு கர்த்தர் துணையோடு கானானில் உள்ள புற இன மக்களை துரத்தினார்.

,லட்சக்கணக்கான யூதர்கள் இவருடைய தலைமையில் யோர்தானைக் கடந்தார்கள்.
எரிகோவின் மதில்கள் விழுந்தது. இவருடைய விண்ணப்பத்திற்கு தேவன்செவி கொடுத்து சூரியனும் சந்திரனும் நடுவானத்தில் தரித்து நின்றது.. இதுபோல் ஒரு நிகழ்வை இதற்குப் பிறகு இந்த உலகம் கண்டதில்லை.

4 தோல்விகள் வரும்போது பிழைகளை ஒப்புக்கொண்டு முன்னேறிய மனிதர்.
ஆயி பட்டணத்தில் ஏற்பட்ட தோல்வியிலும், கிபியோனின் குடிகளோடு தேவனுக்கு சித்தமில்லாமல் சமாதான உடன்படிக்கை செய்த காரியத்திலும் தன் தவறை ஒத்துக் கொண்டு பயணத்தை தொடங்கியவர்
He didn't quit...

யோசுவா சிறந்த நிர்வாகி.

யோர்தானுக்கு அப்புறம் உள்ள இடங்களை ரூபன், காத், மனசேயின் பாதி கோத்திரத்துக்கும் பிரித்துக் கொடுத்தார்.
கானான் தேசத்தில் கைப்பற்றிய இடங்களை லேவி கோத்திரத்தை தவிர‌ மற்ற கோத்திரங்களுக்கும், லேவி கோத்திரத்துக்கு‌ 48 பட்டினங்களையும் குழப்பம் இல்லாமல் பிரித்துக் கொடுத்தார்.
பலவித கிருபைகளைக் பெற்ற யோசுவா தேவன் தன்னை அழைத்த அழைப்பில நின்று ஓட்டத்தை ஜெயமாக முடித்தார்..
எகிப்தில் அடிமையாக வாழ்க்கையை ஆரம்பித்த யோசுவா இவ்வளவு மிகப்பெரிய சாதனையை பெற்றார் என்றால் அது தேவனுடைய கிருபை
When God ordains our service He is morally obligated to see us throughm. Oswald Sanders.

Ezekiel Shanmugavel