தகுதியற்ற முறையில் திருவிருந்தில் பங்கு பெறுவது என்றால் என்ன?
ஆனபடியால், யாராவது தகுதியற்ற விதத்தில் அப்பத்தைச் சாப்பிட்டாலோ, கர்த்தருடைய பாத்திரத்தைக் குடித்தாலோ, அவன் கர்த்தருடைய உடலுக்கும், அவருடைய இரத்தத்திற்கும் எதிராகப் பாவஞ்செய்யும் குற்றவாளியாகின்றான்.
1 கொரிந்தியர் 11:27
இதனாலேயே உங்களில் பலர் பலவீனத்திற்கு உள்ளாகி வியாதிப்பட்டும் இருக்கிறனர். உங்களில் சிலர் மரண நித்திரைக்கும் உள்ளானார்கள்.
1 கொரிந்தியர் 11:30
இந்தக் கருத்தை தியானிப்பதற்கு முன்பாக இந்த வார்த்தையை எதற்காக பவுல் பயன்படுத்துகிறார்? அதனுடைய சூழ்நிலை என்ன என்பதை நாம் முதலில் பார்க்க வேண்டும்.
.
கொரிந்து நகரத்து சபை ஆவிக்குரிய வரங்களை பெற்று ஜொலித்த சபையாக இருந்தாலும்
அந்த சபை மகிமை இழந்த கறை படிந்த பிளவுகள் நிறைந்த சபையாகும்.
உலக மக்களும் செய்ய தயங்குகிற விபச்சார பாவங்கள் நிறைந்த சபையாக காணப்பட்டது.
சபைக்குத் தலைவராக காணப்படுகின்ற இயேசுவை பின்பற்றாமல் விசுவாசிகள் சபைத் தலைவர்கள், அப்போஸ்தலர்கள் இவர்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களாக காணப்பட்டார்கள்.
இல்லாதவர்களை சிறுமைப்படுத்தி பிரிவினையோடு காணப்பட்ட சபை.
இப்படிப்பட்ட சபையில் தான் திருவிருந்தில் எப்படி பங்கு கொள்ள வேண்டும் என்று பவுல் இந்த இடத்தில் குறிப்பிடுகிறார்.
அதுவும் குறிப்பாக 11 வது அதிகாரத்தில் அவர் சொல்லிய வார்த்தைகளை கவனிக்கவும்
"சாப்பிடவும் குடிக்கவும் உங்களுக்கு வீடுகள் இல்லையோ? நீங்கள் இறைவனுடைய திருச்சபையை அவமதித்து, எளியவர்களை வெட்கப்படுத்துகிறீர்கள்.."
1 கொரிந்தியர் 11:22
இந்த வார்த்தைகளை சொல்லிவிட்டுதான் அவர் திரு விருந்தைப் பற்றி குறிப்பிடுகிறார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் பவுல் கூறியதை பார்க்கலாம்
எனவே, ஒவ்வொருவனும் அப்பத்தைச் சாப்பிட்டு, பாத்திரத்திலிருந்து குடிக்குமுன், தன்னை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
1 கொரிந்தியர் 11:28
ஒருவன் கர்த்தருடைய உடல் என்ற உணர்வு இல்லாமல், இதைச் சாப்பிட்டு குடித்தால், அவன் தன்மேல் நியாயத்தீர்ப்பை வருவித்துக்கொள்வதற்காகவே சாப்பிட்டுக் குடிக்கிறான்.
1 கொரிந்தியர் 11:28-29
சபை என்பது தேவனுடைய சரீரம். நம்மை அந்த சபையின் உறுப்புகளாக பகுதிகளாக நம்மை கடவுள் இணைத்து இருக்கிறார்.
சபை கிறிஸ்துவின் சரீரம் என்பதையும் நாம் அதன் உறுப்புகள் என்பதையும் கொஞ்சம் கூட சிந்திக்காமல் தேவன் இணைத்த நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் அதற்கு மாறான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே திரு விருந்தில் பங்கு பெறுகிறவன் தேவனுடைய சரீரத்தை பற்றி அக்கறை இல்லாமல் பங்கு பெறுவது என்பது தகுதி இல்லாமல் பங்கு பெறுவதற்கு சமம்..
இந்த இடத்தில் பவுல் வலியுறுத்தி சொல்கிற இரண்டு பாவங்கள்
1. பிரிவினைகள்
. இனத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையில் சமூக அந்தஸ்தின் அடிப்படையிலோ எப்படிப்பட்ட பிரிவினையாக இருந்தாலும் அந்தப் பிரிவினைக்கு காரணமானவர்கள் தங்களை உணராமல் திருவிருந்தில் பங்கு கொள்வதுதான் தகுதியற்ற பங்கேற்பு என்று நான் கருதுகிறேன்.
இந்த இடத்தில் இதே கடிதத்தில் மூன்றாவது அதிகாரத்தில் பவுல் சொல்லிய வார்த்தைகளை நாம் நினைவு கூற வேண்டும்.சபையில் காணப்படுகின்ற பிரிவினைகளை சுட்டிக்காட்டிவிட்டு இறுதியில்
பவுல் இப்படி எழுதுகிறார்
"யாராகிலும் ஒருவன் இறைவனுடைய ஆலயத்தை அழித்தால், இறைவன் அவனை அழித்துப்போடுவார். ஏனெனில், இறைவனின் ஆலயம் பரிசுத்தமானது; நீங்களே அந்த ஆலயம்'.
1 கொரிந்தியர் 3:17
தேவனுடைய சரீரமாகிய ஆலயத்தை கெடுப்பவர்களை தேவன் அழித்து விடுவார் என்று சொல்கிறார்.
எனவே சபைக்குள் பிரிவினையை உண்டாக்குபவர்கள் அடையப் போகிற தண்டனை என்பது மிகவும் கொடியது. பிரிவினை என்பது மொழி, இன, வர்க்க பேதங்களின் அடிப்படையில் அல்லது எந்த வகையில் இருந்தாலும் அது வேதத்தின்படி தவறு. தேவன் இந்த உலகத்தில் பிரித்தெடுத்து அவர்களை ஒரே சரீரமாக்கிய நோக்கத்தை இந்த பிரிவினைகள் கெடுத்து விடுகிற காரணத்தால் தேவன் இதை கடுமையாக இவர்களை நடத்துவார்.
2. அடுத்தது பாவம்
உலக மக்களும் வெறுக்கக்கூடிய பாவங்களை தொடர்ந்து செய்து கொண்டு நாம் தேவனுடைய சரீரத்தில் அங்கமாக உறுப்புகளாக இருக்கிறோம் என்கிற ஒரு பயமில்லாமல் கவனயீனமாக பொறுப்பற்ற முறையில் தேவனுடைய சரீரத்தை கணவீனம் பண்ணுகிற விதத்தில் அவருடைய சரீரத்தையும் அவருடைய இரத்தத்தையும் அலட்சியம் பண்ணி திருவிருந்தில் பங்கு பெறுபவர்கள் சரீர மரணத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்என்பதும் இங்கு சொல்லப்படக்கூடிய முக்கியமான கருத்து.
1கொரி 5:1-5
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்இந்த இடத்தில் தகுதி இல்லாமல் பங்கெடுப்பது என்று பவுல் சொல்லுவது சமூக அந்தஸ்தின் அடிப்படையில் பிரிவினைகளை ஏற்படுத்துவதையும் அஞ்ஞானிகளும் செய்ய நடுங்கும் பாவங்களை துணிகரமாக செய்வதையும் ஆகிய இரண்டு பாவங்கள் செய்து கொண்டு திருவருந்தில் பங்கெடுப்பதையுமே ஆகும்.
இதைக் குறித்து மூன்று வேத அறிஞர்களின் கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.
According to William MacDonald
Whoever eats this bread or drinks this cup of the Lord in an unworthy manner will be guilty of the body and blood of the Lord. We are all unworthy to partake of this solemn Supper. In that sense, we are unworthy of any of the Lord's mercy or kindness to us. But that is not the subject here. The apostle is not speaking of our own personal unworthiness. Cleansed by the blood of Christ, we can approach God in all the worthiness of His own beloved Son. But Paul is speak- ing here of the disgraceful conduct which characterized the Corinthians as they gathered together for the Lord's Supper. They were guilty of careless, ir- reverent behavior. To act thus is to be guilty of the body and blood of the Lord.
According to William Barclay
(i) It may mean that the man who eats and drinks unworthily does not realize what the sacred symbols mean. It may mean that he eats and drinks with no reverence and no sense of the love that these symbols stand for or the obligation that is laid upon him.
(ii) It may also mean this. The phrase the body of Christ again and again stands for the Church; it does so, as we shall see, in 1Cor.12. Paul has just been rebuking those who with their divisions and their class distinctions divide the Church; so this may mean that he eats and drinks unworthily who has never realized that the whole Church is the body of Christ but is at variance with his brother. Every man in whose heart there is hatred, bitterness, contempt against his brother man, as he comes to the Table of our Lord, eats and drinks unworthily. So then to eat and drink unworthily is to do so with no sense of the greatness of the thing we do, and to do so while we are at variance with the brother for whom also Christ died.
According to W.W.Wiersbe
The Supper should be a demonstration of the unity of the church—but there was not
much unity in the Corinthian church. In fact, their celebration of the Lord’s Supper was only a demonstration of their disunity.
The Lord’s Supper is a family meal, and the Lord oft he family desires that His children love one another and care for one another. It is impossible for a true Christian to get closer to his Lord while at the same time he is separated from his fellow believers. How can
we remember the Lord’s death and not love one
another? “Beloved, if God so loved us, we ought also to
love one another” (1 John 4:11)
Ezekiel shanmugavel