Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஈசாக்கு, யாக்கோபின் இறுதிக்கால வேதனைகள்.


வயதான பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளினால் ஏற்படக்கூடிய அவமானம் அல்லது பிள்ளைகளின் பிரிவு என்பது அவர்கள் அதுவரை அனுபவித்த கஷ்டங்கள் எல்லாவற்றிலும் மிகவும் கொடுமையானது.

இப்படிப்பட்ட பாடுகளை முதலில் அனுபவித்தவன் யார் என்றால் ஈசாக்கு தான்.
நேசித்த மகனுக்கு தான் விரும்பிய வண்ணம் ஆசீர்வதிக்க முடியாமல்
தன் இளைய மகன் யாக்கோபினால் வெள்ளாட்டுத் தோலினால் ஏமாற்றப்பட்டான்
.இதன் நிமித்தம் ஏசா தகப்பனை விட்டு வேறு இடத்திற்கு புறப்பட்டு சென்று விட்டான்.அதற்குப் பிறகு ஈசாக்கை ஏசா சந்தித்ததாக இல்லை.

கடைசியாகஏசாவும் யாக்கோபும் தன் தகப்பனை அடக்கம் செய்ததாக பார்க்கலாம்.

அப்படி என்றால் ஈசாக்கின் வேதனை எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை
நாம் உணரலாம்.

அதே வேதனையைத்தான் யாக்கோபு அனுபவித்தான். எப்படி தன் தகப்பனை ஆட்டு தோல் மூலமாக ஏமாற்றினானோ அதேபோல் தன்னுடைய பிள்ளைகள் ஆட்டு ரத்தத்தின் மூலமாக தான் பிரியமாக நேசித்த யோசேப்பு இறந்து விட்டதாக சொல்லி அவனை ஏமாற்றி மிகுந்த துக்கத்துக்குள் ஆளாக்கினார்கள். தான் நேசித்த ரேச்சலின் மூத்த மகனை அவள் மறைவுக்கு பின்பு அவன் அதிகமாக நேசித்தான். ஆனால் அவன் மரிதத்ததாக சொல்லப்பட்ட நிகழ்வு அவனை மிகவும் பாதித்தது. தான் தன் தகப்பனை எப்படி ஏமாற்றினானோ அதேபோல் தன்னுடைய பிள்ளைகள் தன்னை ஏமாற்றியதை அறிந்து அவன் எப்படி மனம் வருந்தி இருப்பான்? நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்
1.வயதான காலத்தில் பெற்றோர்களை சந்தோஷப்படுத்த வேண்டிய பொறுப்பு பிள்ளைகளுக்கு உண்டு.
2.அதேபோல் நாம் மற்றவர்களுக்கு எந்த துன்பத்தை தெரிந்தே
கொடுக்கிறோமோ அதே துன்பத்தை நாமும் பின் நாட்களில்
நிச்சயமாக சந்திப்போம்,
ஆதி37:33-35,35:29,36:6
எசேக்கியேல் சண்முகவேல்