Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

போலியான பாவ அறிக்கை . போலிகளை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்
" அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நான் இந்த முறை பாவம் செய்தேன். "
யாத்திராகமம் 9:27

இப்படி பார்வோனைப் போல் "நான் பாவம் செய்தேன்" என்று சொல்லியவர்கள் பிலேயாம், ஆகான், சவுல், யூதாஸ், மற்றும் தாவீது.


எண்ணா22:34(பிலேயாம்),யோசு7.20(ஆகான்)1சாமு15:24,30,26:11,2சாமு19:20,மத்27:4. ஆகிய இந்த வசனங்களை தியானிக்கவும்.

ஆனால் இப்படி சொன்னவர்களில் தாவீதைத் தவிர மற்றவர்கள் உண்மையான மனம் திரும்புதலோடு(True repentance)இந்த வார்த்தையை சொல்லவில்லை.

அவர்களுடைய பாவ அறிக்கையும், அதற்கு பின்னால் அவர்களுடைய‌வாழ்க்கையும் நேர்கோட்டில் பயணிக்கவில்லை.

பார்வோன் இறுதி வரை மனம் திரும்பவே இல்லை.

யூதஸ் தற்கொலை பண்ணிக் கொண்டான்.பிலேயாம் கொலை செய்யப்பட்டான்.ஆகான். கல்லெறிந்து கொல்லப்பட்டான்.
ஆனால் தாவீது மட்டும் உண்மையான மனம் திரும்பதலோடு கர்த்தரோடு ஒப்புரவாகி புது வாழ்வு பெற்றான்.

நம்முடைய பாவ அறிக்கைகள்‌ போலியாக, மாய் மாலமாக வெளி வேசத்திற்காக இருக்க கூடாது.
உண்மையான மனந்திரும்புதல் பரிசுத்த ஆவியானவரின் கிரியை. போலியான மனம் திரும்புதல் சாத்தானின் செயல்பாடு. போலியான மனந்திரும்புதல், *போலியான அர்ப்பணிப்பு போலியான மன்னிப்பு போலியான* *பாராட்டுக்கள் மற்றவர்களின் ஆவிக்குரியவாழ்க்கைக்கு இடறலாக இருக்கும்.*
*போலிகள் சாத்தானின் வேலையாட்கள்* .
அவர்கள் விசுவாசிகளாகவும் இருக்கலாம், முழு நேர பணியாளர்களாகவும் இருக்கலாம். இவர்களை அவ்வளவு எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியாது.

இன்றைய காலகட்டங்களில் இந்த போலிகள் தலைமை மட்டத்தில் அதிகமாக காணப்படுகின்றது.
உண்மை என்கிற ஆயுதம் மிகச் சிறந்த ஆயுதம்.

என்ன செய்வது இப்பொழுது உள்ள ஆவிக்குரிய உலகம் போலிகளை தான் அதிகமாக நம்பி இருக்கிறது.

ஒரு சில நேரங்களில் இவர்கள் கடைசி வரைக்கும் மற்றவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் போய்விடுவார்கள். இவர்களின் போதித்தனம் நியாயத்தீர்ப்பின் நாளில் தான் வெளிப்படும். இப்படி போலியான மனந்திரும்புதலை உடைய நபர்களால் நம் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க கர்த்தர் நம்மை பாதுகாத்துக் கொள்வாராக.
சகோ.எசேக்கியல் சண்முகவேல்