Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

Our race and ministry
நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் இரண்டு பகுதிகள் உண்டு
ஒன்று நம்முடைய ஆவிக்குரிய தனிப்பட்ட ஓட்டம்.(Race)
மற்றொன்று நாம் தேவனிடம் பெற்ற ஊழியம்.(Ministry)
நாம் மரிக்கும் போது இந்த இரண்டையும் மகிழ்ச்சியாக முடிக்க வேண்டும்.
இதுதான் பவுலடியாரின் விருப்பம் 'என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்." அப்போ 20:24

முழுநேர ஊழியர்கள் இந்த இரண்டையும் நிறைவேற்றும் பாக்கியம் பெற்றவர்கள்.
ஆனால் விசுவாசிகளுக்கு தங்களுக்கென்று ஒரு ஊழியத்தை தேவன் வைத்திருக்கிறார் என்ற எண்ணம் துளி கூட இல்லை.
. நாம் கிறிஸ்துவினுடைய சரீரமாகிய சபையில் அங்கமாக இருக்கிறோம். ஒவ்வொரு அங்கத்திற்கும் சரீரத்தில் ஒரு வேலை (Function) உண்டு.
நாம் சரீரமாகிய சபையில் நாம் என்னவாய் இருக்க அழைக்கபட்டிருக்கிறோம் என்பதை முதலில் உணரவேண்டும். கட்டிடங்களை தாண்டி யோசிக்க வேண்டும்.
நம்முடைய அழைப்பு 4 சுவருக்குள் இருக்கும் கட்டிடத்திற்குள்ளேதான் இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. எனவே முதலில் தன்னுடைய அழைப்பை உணர்ந்து அதன்படி தேவனிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவேண்டும்.
ஓட்டத்தை நிறைவேற்ற நாம் செல்லும் சபை அவசியம். *VISIBLE CHURCH*
*அதைபோல்* ஊழியத்தை நிறைவேற்ற *சரீரமாகிய சபையை (Invisible Church)பற்றிய ஒரு வெளிப்பாடு அவசியம்.*
நம்முடைய ஓட்டமும் தேவன் நமக்கு தரும் ஊழியமும் ஆகிய இரண்டும், இரண்டு கண்கள் போன்றது.
*ஓட்டத்தையும், ஊழியத்தையும் ஒன்றுசேர நிறைவேற்றுகிறவனே வெற்றியுள்ள விசுவாசி.*
நமது தேவன் பட்சபாதம் உள்ளவரல்ல .மறுபடியும் பிறந்த எல்லோருமே ஓட்டத்தையும் ஊழியத்தையும் ஒருசேர நிறைவேற்ற அழைக்க பட்டிருக்கிறோம்.
எனவே விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய ஓட்டத்தில், தங்களுக்கு தேவன் அளிக்கும் ஊழியம் என்ன என்பதை அறிந்துகொள்ள ,தேவ சித்தம் தங்கள் அழைப்பில் நிறைவேற கருத்தாய் இருக்க வேண்டும் .அனுதின வேத தியானமும், ஜெபமும் தேவன் நமக்கு வைத்திருக்கும் ஊழியத்தை தெரிந்து கொள்ள உதவும் .
*தசமபாகம் கொடுப்பதும் ஞாயிறு ஆராதனைக்கு செல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஊழியத்தில் தன்னை குறித்த தேவ சித்தம் என்ன என்பதை விசுவாசிகள் கட்டாயம் அறிந்து செயல் படவேண்டும். வெறுமனே தன் *ஆவிக்குரிய ஓட்டத்தை மாத்திரம் ஓட தேவன்* *விசுவாசிகளை அழைக்கவில்லை.*
தேவனுடைய ஊழியத்தையும் சேர்த்தே ஓட விசுவாசிகளை முன் குறித்திருக்கிறார். .
மிகுந்த பலனுக்கேதுவான ஓட்டத்தை வீணடிக்க வேண்டாம்
EZEKIEL SHANMUGAVEL