நியாயாதிபதிகளின் புத்தகம் ஒரு முன்னுரை
உலகம் பொருட்டாகக் கருதுபவற்றை அவமாக்கும்படி, உலகத்தில் தாழ்ந்தவற்றையும், மக்களால் கீழ்த்தரமாக எண்ணப்பட்டவைகளையும், உலகத்தில் ஒன்றும் இல்லாதவைகளையும் அவர் தெரிந்துகொண்டார். இதனால், அவருக்கு முன்பாக ஒருவராலும் பெருமைபாராட்ட முடியாது.
1 கொரிந்தியர் 1:28-29.
வேதத்தில் உள்ள 66 புத்தகங்களில் இந்த வசனத்திற்கு பொருத்தமான ஒரே புத்தகம் நியாயாதிபதிகள் புத்தகம்தான்.
இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டவர்ளை நாம் கவனித்துப் பார்த்தால் இது நமக்கு நன்றாக புரியும் . அற்பமானவர்களை எளியவர்களை பலவீனமானவர்களை பெயர்கூட அறியப்படாதவர்களை தேவன் எப்படி பயன்படுத்தினார் என்பதற்கு இந்த புத்தகம் ஒரு சிறந்த உதாரணம்..
1.ஏகூத் இடது கை பழக்கம் உள்ளவன். அவன் இந்த இடது கையை பயன்படுத்திதான் மோவாபின் அரசனான எக்லோனை கொலை செய்தான் நியா 2:21
2.சம்கார் அவன் மாட்டை அடிக்கும் கம்பினால் அறுநூறு பெலிஸ்தியரை அடித்து வீழ்த்தினான். அவனும் இஸ்ரயேலைக் காப்பாற்றினான்.
நியாயாதிபதிகள் 3:31
3 பலவீனமான பாத்திரம் என்று கருதப்படும் பெண்மணியான தெபொராள் இஸ்ரேல் ஜனங்களை நியாயம் விசாரித்தாள்
4 பாராக் பத்தாயிரம் காலாட் படைகளை வைத்துக்கொண்டு சீசெராவின் 900 இரும்பு ரதங்களைக் கொண்ட படையை தோற்கடித்தான்
5.ஏபேரின் மனைவி யாகேல் சிசெரா களைத்துப்போய் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது, ஒரு கூடார முளையையும், சுத்தியலையும் எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் சென்று அவனுடைய நெற்றியில் முளையை வைத்து அடித்தாள். அது அவனுடைய மூளையைத் துளைத்துக்கொண்டு தரைவரை சென்றது. எனவே அவன் இறந்தான்.
நியாயாதிபதிகள் 4:21
6. கிதியோன் 300 நபர்களைக் கொண்டு மீதியானியரை தோற்கடித்தான்
.
7.ஒரு பெண் திரிகைக்கல்லை அபிமெலெக்கு தலைக்குமேல் எறிய அவனுடைய மண்டையோடு வெடித்தது.
நியாயாதிபதிகள் 9:53
8. பெயர் குறிப்பிடப்படாத மனோவாவின் மனைவி பெற்றெடுத்த பிள்ளை சிம்சோன் ஆயிரம் பெலிஸ்தயரை கொன்றான்.
நம்மில் மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.
ஆனால்
ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் நம்மை போன்ற பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்..
பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமான நம்மை தெரிந்துகொண்டார்.
மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.
1 கொரிந்தியர் 1:29
எனவே நம்முடைய அடையாளம் இயேசு கிறிஸ்து மட்டுமே. ஜாதி இனம் மொழி பணம் கல்வி. குலப் பெருமை ஊர் பெருமை ஆகியவைகளை கொண்டு தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறவன் தன் வாழ்க்கையில் ஒருபோதும் தேவனுடைய திட்டத்தை நிறைவேற்ற மாட்டான்.
*இந்தப் பதிவின் மையக்கருத்து Believer's Bible commentary.ஐ தழுவி* *எழுதப்பட்டது*
எசேக்கியல் சண்முகவேல் .