Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

நியாயாதிபதிகள் புத்தகம் ஒரு பார்வை

யோசுவா உயிரோடு இருந்த நாட்களில் கானான் தேசத்தில் உள்ள எல்லா இடங்களையும் கைப்பற்றவில்லை.
யோசுவா மறைந்த பிறகு மீதம் உள்ள மற்ற இடங்களை இஸ்ரவேல் ஜனங்கள் கைப்பற்றி அங்கே உள்ள மக்களை வெளியேற்றி அவர்களோடு இஸ்ரவேல் மக்கள் கலக்காமல் இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய சித்தம்.
எனவே யோசுவா மறைந்த பிறகு கானானில் உள்ள கைப்பற்றப்படாத இடத்தை இவர்கள் கைப்பற்றியிருக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் அதற்கு பதிலாக அங்குள்ள மக்களோடு இணைந்து கலந்த காரணத்தினால் அவர்களை சத்துருக்கள் கையில் தேவன் ஒப்புக்கொடுத்தார்.
அப்பொழுது அவர்கள் தேவனை நோக்கி கூப்பிட்ட போது இந்த நீதிபதிகளை எழுப்பினார். இந்த புத்தகத்தின் பின்னணி இதுதான்.


இந்த புத்தகத்தில் சொல்லப்பட் 12 நியாயாதிபதிகளின் செயல்பாட்டை பார்க்கும் பொழுது அவர்களது பணி என்பது நியாயாதிபதிகள் என்பதை விட ராணுவ தலைவர்களாக இருந்தார்கள் என்பதைபுத்தகத்தை படிக்கும் போது நாம் இதை அறிந்து கொள்ளலாம் ‌

They were military leaders rather than simply jurists.

12 நீதிபதிகளுக்கு தேவன் கொடுத்த வல்லமையின் படி கானான் தேசத்தில் உள்ள பிற இன மக்களை வெற்றிகொண்டு தேவனுடைய நீதி சட்டங்களை செயல்படுத்தினார்கள்.

இராஜாக்கள்புத்தகத்தில் சொல்லப்பட்டஇராஜாக்களுக்கும் இங்கு சொல்லப்பட்ட நீதிபதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால் இந்த நீதிபதிகள் உள்ளூர் தலைவர்களாக காணப்பட்டார்கள் (. Local leaders or tribal leaders)யூத தேசம் முழுமைக்கும் அவர்கள் தலைவர்களாக காணப்படவில்லை.

எந்த ஒரு நீதிபதியும் முழுமையாக இஸ்ரவேல் தேசத்தை ஆண்ட
தாக குறிப்பு இல்லை.
.இவர்களுருடைய காலம் 325 ஆண்டுகள்
இந்தப் புத்தகத்தில் 12 நீதிபதிகளை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும் முக்கியமான நீதிபதிகள் கிதியோனும் சிம்சோனும்தான்.
கிதியோன் ஒரு பலவீனமான பயந்த நீதிபதி. தேவன் அவரை பராக்ரமசாலி என்று அழைத்தாலும் விசுவாசத்தில் வல்லவனாக காணப்படவில்லை.
சிம்சோன் தேவன் கொடுத்த வரத்தை தவறாக பயன்படுத்தியவர்..
இந்த நீதிபதிகள் தங்கள் ஜனங்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பெரிதாக எதையும் செய்து விட்டதாக குறிப்புகள் இல்லை.

ஆனாலும் இவர்கள் பெயர்கள் விசுவாச வீரர்கள் பட்டியலில் காணப்படுகிறது. எபி 11:32
இந்த 325 ஆண்டு கால வரலாற்றை பார்க்கும்பொழுது தேவன் எதிர்பார்த்த ஆவிக்குரிய வளர்ச்சி இவர்களிடம் காணப்படவில்லை.
யோசுவா மறைந்த பிறகு இவர்கள் மீதியுள்ள கானான் தேசத்தை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் தேவனுடைய நோக்கம்.
ஆனால் இதை இவர்கள் செய்யத் தவறி விட்டார்கள்.
இதற்கான காரணத்தை பற்றி ஒரு சில வேத பண்டிதர்கள் சொல்லுகின்ற கருத்து என்னவென்றால் இந்த யூத ஜனங்கள் 400 ஆண்டுகால எகிப்தின் அடிமைத்தனத்திலும் 40 ஆண்டு கால வனாந்தரத்திலும் வாழ்ந்த காரணத்தால் இவர்கள் கானான் தேசத்தில் வாழ்ந்த மக்களை விட ‌போர்யுக்தியிலும், ராணுவ தளவாடங்களிலும், இலக்கியத்திலும், நிர்வாகஅமைப்பிலும், பொருளாதார வளர்ச்சியிலும் இவர்கள் பின்தங்கி காணப்பட்டார்கள்.
எனவே இது அவர்களை சோதனைக்குt(Tempt) உட்படுத்தி அவர்களுடைய வழிகளைப் பின்பற்றி அவர்களோடு சமரசமாகி அவர்கள் தேவனை பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள்என்று சொல்கிறார்கள்..
தங்கள் தேவன் தங்களை எப்படி அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி கானானுக்கு அழைத்து வந்த மாபெரும் செயலை இவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கர்த்தரை விட்டு விலகி அவரை மறுதலித்து பின்வாங்கிப் போனார்கள்.

16 ஆவது அதிகாரத்திற்கு பிறகு சொல்லப்பட்ட நிகழ்வுகள் ஒரு தனிப்பட்ட நிகழ்வுகளாக தான் காணப்படுகின்றன.
இவைகள் இந்த புத்தகத்தில் 16ஆவது அதிகாரத்திற்கு முற்பட்ட காலத்தில்தான் நடந்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேத பண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.

இந்த புத்தகத்தில் நாம் கற்றுக் கொள்ளக்கூடிய சத்தியம் என்னவென்றால் என்றைக்கு தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தை புரிந்து கொள்ளாமல் உலகத்தோடு சமரசமாக்கிக் கொள்கிறோமோ, என்றைக்கு இருக்கிற ஆவிக்குரிய நிலைமையே போதும் என்று நினைக்கிறோமோ அன்றைக்கு நாம் நம்மையும் அறியாமல் பிசாசின் வலையில் விழுந்து விடுவோம்.

அனேக விசுவாசிகளின் வாழ்க்கையில் இரட்சிப்பிற்குப் பிறகு தேக்க நிலை தான் காணப்படுகின்றது.
salvation then next stagnationவாழ்க்கையில் முன்னேறி செல்லாமல் இருப்பதே பின்மாற்றத்திற்கான அறிகுறி.
விசுவாசிகள் எந்த ஊழியம் செய்தாலும் They should go up Judges 1:1 விசுவாசிகளை தேவன் silent spectator ஆக சபையில் இருக்கஅழைக்கவில்லை.
அவர்களுடைய செயல்பாட்டின் vibiration எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
அப்படி ஒவ்வொரு விசுவாசியும் தாங்கள் இருக்கிற இடங்களில் செயல்பட்டால் நிச்சயமாக சரீரமாகிய சபையின் உறுப்புகள் அனைத்தும் வேலை செய்யும் தேவனுடைய இராஜ்ஜியம் விரைவாக விருத்தி அடையும்.
இதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது . நியாயாதிபதிகள் புத்தகம் நமக்கு சொல்லும் பாடம்
இந்த வேத குறிப்புகளுக்கு நான் பயன்படுத்த புத்தகங்கள்
Willmington’s Bible Handbook
The Bible Exposition commentary W.W.Wiersbe
ESV Study Bible
South Asia Bible commentary
Dovotional commentray By Lawrence O Richards
The Nelson Study Bible
Bilievers Bible Commenray
Ezekiel shanmugavel