Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

தொழுகை வீரனின்

*சரீரத்துக்கு யாருக்கும் கிடைக்காத அரசு* *மரியாதை* .   

வேதத்தில் யாக்கோபின் சரீரத்துக்கு கிடைத்த அரசு மரியாதையைப் போல, அதுவும் புற ஜாதி அரசாங்கத்தால் கிடைத்த மரியாதையை போல  வேறு யாருக்கும் கிடைத்ததாக  பார்க்க முடியாது.

மிகப்பெரிய எகிப்திய சாம்ராஜ்யம் யாக்கோபின் மரணத்திற்காக 70 நாட்கள் துக்கம் கொண்டாடியது.

*அவனுடைய அடக்க ஊர்வலத்தில் எகிப்து சாம்ராஜ்யத்தின் தேர்களும், குதிரை வீரர்களும்* *கொண்ட மிகப்பெரிய கூட்டம் காணப்பட்டது‌.*
*எகிப்திய மக்களால் அருவருக்கப்பட்ட மேய்ப்பர் குலத்தை சேர்ந்த ஒருவனுக்கு இப்படிப்பட்ட மரியாதையை கர்த்தர் பார்வோன்* *மூலமாக வழங்கினார்.*

தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட யூத குலத்தின் தகப்பனான யாக்கோபுக்கு கர்த்தர் கொடுத்த அங்கீகாரமாக இதை பார்க்கலாம்.

யாக்கோபும் தன்னுடைய இறுதி காலத்தை எகிப்தில் கழித்திருந்தாலும், தன்னுடைய சரீரம் தன்னுடைய முற்பிதாக்களின் கல்லறையில் வைத்து அடக்கம் செய்யப்படுவதை அவன் விரும்பினார் .
தேவன் தன் முன்னோர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின அந்த கானானில் தன் சரீரம் அடக்கம் பண்ணப்பட வேண்டும் என்பதில் அவன் மிக உறுதியாக இருந்தார்
.
அதை தன் பிள்ளைகளிடம் ஒப்படைத்து. அதை நிறைவேற்றும் பொறுப்பை யோசேப்பிடம் ஒப்படைத்தார்.என்னதான் எகிப்தில் வசதியாக வாழ்ந்தாலும் அவன் இருதயம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானை நோக்கியே இருந்தது  தன் சரீரம் தன் முன்னோர்கள் கல்லறையோடு அடக்கம் பண்ண வேண்டும் என்பதில் அக்கறையோடு இருந்தான்.
கர்த்தரும் அந்த ஆசையை பூர்த்தி செய்து அவருடைய சரீரத்திற்கு மிகப்பெரிய ஒரு அங்கீகாரத்தை கொடுத்தார். நாம் என்னதான் இந்த உலகத்தில் செழிப்பு உள்ளவர்களாக இருந்தாலும் நம்முடைய இருதயம் எப்பொழுதும் பரம கானானை, அதாவது நித்தியத்தை நோக்கியே இருக்க வேண்டும்.
யாக்கோபு தன்னுடைய வாழ்க்கையில் பலவிதமான தோல்விகள், ஏமாற்றங்கள், விரக்திகள் துன்பங்களை சகித்து இருந்தாலும், தன் அண்ணன் ஏசாவைப்போல் வழி விலகி கர்த்தருடைய சித்தத்தை விட்டு விலகாமல் தேவனுடைய அழைப்பில் உறுதியாக இருந்து அதை நிறைவேற்றிய மிகப்பெரிய விசுவாச வீரன் .

அது மாத்திரமல்ல என் சரீரம் அங்கேயே புதைக்கப் பட்டாலும்.. தேவன். தன் சந்ததியை.திரும்ப  கானானுக்கு  திரும்பகொண்டு வருவார் என்று உறுதியாக நம்பினான்
விசுவாச வீரர்கள் பட்டியலில் இவன் மட்டும்தான்   தொழுது கொண்டு மரித்தான்‌ என்றுப்படுகிறது.சொல்லப்படுகிறது..எபி11:21
இப்படிப்பட்ட தொழுகை வீரனுக்கு இந்த உலகத்தில்தேவன் கொடுத்த மரியாதை தான் அந்த அரசு மரியாதை என்று நான் கருதுகிறேன்.
எசேக்கியேல் சண்முகவேல்.