Testing and training
கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும்,
இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும் அதற்குமுன் யுத்தஞ்செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும், கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் யாரென்றால்:
நியாயாதிபதிகள் 3:1&2
நாம் மறுபடியும் பிறக்கும்போது ஆவிக்குரிய குழந்தைகளாக இருக்கிறோம்.
. இந்த ஆவிக்குரிய குழந்தைகள் புருஷர்களாக வளர்வதற்கு தேவன் இரண்டு முறைகளை கையாளுகிறார்..
முதலாவதாக தேவன் கையாளும் முறை அவர் நம்மை சோதிப்பார்.
,God will test us
நாம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறோமா, அவரை
உண்மையிலேயே நேசிக்கிறோமா என்பதை அறிய நம்மை பாடுகளுக்குள்ளாக எதிர்ப்புகளுக்கு நேராக நடத்தி நம்மை சோதிப்பார்.
அதனால்தான் நாம் மறுபடியும் பிறந்தவுடன் நம்முடைய எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து விடாது.
சில பிரச்சனைகளின் வழியாக செல்ல நம்மை அனுமதிப்பார் .
அந்த சோதனைகள் நம் பின்னே தொடர்ந்து வரும்.
நாம் எவ்வளவு
ஜெபித்தாலும் சில பாடுகளுக்கு சில வேளைகளில் பதில் உடனடியாக கிடைப்பதில்லை காரணம் இதுதான்.
அடுத்தது பயிற்சி. ( **Training* )
*God will train us**
இப்படி சோதிப்பதின் மூலம் தேவன் நம்மை ஆவிக்குரிய யுத்தத்திற்கு பயிற்சி கொடுக்கிறார்.
பிற்காலங்களில் ஆவிக்குரிய போர்க்களத்தில் சிறந்த வீரர்களாக காணப்பட இந்த ஆரம்ப பயிற்சி நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எனவே சோதனைகளும் பயிற்சிகளும் நம்முடைய வாழ்க்கையில் பிரிக்க முடியாத தேவனுடைய திட்டங்களாக இருக்கிறது.
இந்ததிட்டங்களை தேவன் ஆதி முதல் செயல்படுத்தி வருகிறார்.
யோசுவா கானான் தேசத்தில் எல்லா இனங்களையும் விரட்டி விடவில்லை.. ஏழு இனங்களை கானான் தேசத்திற்கு உள்ளாகவே தேவன் வைத்திருந்து இஸ்ரேல் ஜனங்கள் தமக்கு கீழ்ப்படிந்து அந்த ஜனங்களோடு கலக்காமல் இருக்கிறார்களா என்பதை அறிய விரும்பினார்..(யோசு 3:10,24:11)
மேலும் ,யூத ஜனங்கள் போர்ப்பயிற்சி இல்லாத ஜனங்களாக காணப்பட்டார்கள்.
பின் நாட்களில் இவர்கள் வலிமையுள்ள போர் வீரரர்களாக காணப்பட இவர்களுக்கு போர் பயிற்சி அவசியம்.
எனவே புற ஜனங்களோடு போர் புரிந்து அவர்களை வெற்றி கொண்டு பின் நாட்களில் சிறந்த வீரர்களாக உருவாக தேவன் அந்த புற இனங்களை அவர்கள் அருகிலேயே வைத்திருந்தார். யூத ஜனங்கள் இந்த மக்களோடு போரிட்டு பின்னாட்களில் சிறந்த போர்வீரரர்களாக மாறுவதற்கு இந்த பயிற்சி தேவைப்பட்டது. தாவீது சாலோமன் போன்றவர்கள் பின் நாட்களில் யூத சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கு இப்படிப்பட்ட போர் வீரர்களை கொண்ட மக்கள் அவசியம். எனவே தேவன் அந்த ஏழு இன குழுக்களை அவர்கள் மத்தியில் வைத்திருந்தார்.
இதன் மூலம்
தேவன் நமக்கு சொல்லும் பாடம்.
சோதனைகள், பாடுகள், வேதனைகள் இவைகள் நாம் தேவனை உண்மையாக பின்பற்றுகிறோமா என்பதை உணர்த்தும் கருவிகளாக நாம் பார்க்க வேண்டும்.
அடுத்தது இந்தப் பாடுகள் நம்மை ஒரு சிறந்த ஆவிக்குரிய போர் வீரராக மாற்ற பயன்படும்.
சோதனைகளே இல்லை என்ற சூழ்நிலைக்கு நம்முடைய வாழ்க்கையில் ஒரு நாளும் இடமில்லை.
நம்முடைய ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவன் தமது திட்டத்தின் படி வாழ்க்கையில் சோதனைகளும் பாடுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
பாடுகளுடைய தன்மை, அதனுடைய காலம், அதனுடைய வேதனை எல்லா விசுவாசிகளுக்கும் ஒரே மாதிரி இருக்காது. இதை சரியாக புரிந்து கொண்டால் நம் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களை பற்றி நமக்கு சலிப்பு ஏற்படாது.
எசேக்கியே சண்முகவேல்