அங்கீகாரம் என்னும் சிலை வழிபாடு
"அன்பான பிள்ளைகளே உங்கள் இருதயங்களில் இறைவனின் இடத்தைப் பிடித்துக் கொள்ளும் விக்கிரக வழிபாட்டில் இருந்து உங்களை விலக்கிக் கொள்ளுங்கள்"
இது யோவான் 5:21ன் சரியான மொழிபெயர்ப்பு.
*இறைவனுக்கு கொடுக்க வேண்டிய இடத்தை எடுத்துக்* *கொள்ளும் எதுவுமே சிலை வழிபாடு தான்.*
அது பண ஆசையாக இருக்கலாம், பெண்ணாசையாக இருக்கலாம், மண்ணாசையாக இருக்கலாம்,
வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையாக இருக்கலாம்,
புகழாசையாக இருக்கலாம்,
சில வேளைகளில் நம்மை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்கிற ஆசையாகக்கூட இருக்கலாம்.
நாம் மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று எண்ணுவது தவறல்ல.
ஆனால் அது ஆண்டவருடைய ஊழியத்தில் அந்த சிந்தை மரமாகி வளரும்போது நம்முடைய நோக்கம் ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறோம் என்கிற சிந்தனையை தாண்டி பிறருடைய அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்கிற மிகப்பெரிய ஒரு ஆசை அல்லது வெறி நம் உள்ளத்தில் தோன்றும்.
இதுவும் ஒரு உருவ வழிபாடு தான்
.
நம்முடைய உள்ளத்தில் தேவன் குடியிருப்பதற்கு பதிலாக அங்கீகாரம் பெற வேண்டும் என்ற சிலை ஆட்கொண்டு விடும்.
இவ்வளவு உழைத்தும் நமக்கு அங்கீகாரம் இல்லையே, இவ்வளவு தியாகம் பண்ணியும் நம் தியாகங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையே, நம்முடைய பரிசுத்தம் , ஒழுக்கம் கவனிக்கப்படவில்லையே, நம்முடைய ஊழியங்களை மற்றவர்கள் ஒரு பொருட்டாக கருதவில்லையே,
நாம் இயக்கத்திற்கும்
தலைவருக்கும் காட்டிய விசுவாசத்திற்கு ஏற்ற அங்கீகாரம் நமக்கு இல்லையே என்கிற பல ஆதங்கங்கள் உழைக்கின்ற ஒவ்வொரு விசுவாசிக்கும் ஏற்படும்.
இது இயற்கை.
ஏனென்றால் பணம், ஜாதி, குடும்பம் இவற்றை முதலீடாக வைத்து முன்னேறுபவர்கள் ஒரு சிலர்.
வேலையே செய்யாமல் மற்றவர்களை காக்கா பிடித்து முன்னேறுபவர்கள் இன்னொருபகுதி.
திறமை இல்லாதவர்கள், வேத அறிவு இல்லாதவர்கள் ,சரியான உபதேசத்தை போதிக்காதவர்கள், பண ஆசையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள் சபை தலைவர்களால் அங்கீகரிக்கப்படும் பொழுது
நம்மை அறியாமலேயே அங்கீகாரம் என்கிற சிலைக்கு ஆராதனை செய்ய தூண்டும் சாத்தானுடைய வலையில் விழுந்து விடுகிறோம்.
*தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் , என்கிற சிந்தனை* *மறைந்து நாம் மற்றவர்களால் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற சிந்தனை* *வளரும் பொழுது அது மிகப்பெரிய ஒரு சிலை வழிபாடாக* *மாறிவிடுகிறது.*
இது ஒரு சிலை வழிபாடு என்பதை புரியாமல் நாம் அதில் மூழ்கி இருக்கிறோம்.
My
எனவே அங்கீகாரம் என்கிற சிலையை நம் இதயத்தில் இருந்து எடுத்துவிட்டு கிறிஸ்துவில் உள்ள சிந்தை நம்மில் வளர தேவன் நமக்கு கிருபை தருவாராக
*யோவான் சபைக்கு சொல்லும் இறுதி எச்சரிப்பு இதுதான் "விக்ரகங்களுக்கு* *விலகி இருங்கள்.*
எசேக்கியல் சண்முகவேல்