Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

"அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று."
"அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று."

*ஏன் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற* *பேர் வழங்கிற்று.?* *எருசலேம் சபை  இந்த பெருமையை ஏன் பெறவில்லை .?*

உலக சபைகளின் வரைபடத்தில் முதலில் இடம் பிடித்தது எருசலேம் சபைதான்.
எருசலேம் சபை பல பல சிறப்புகளை கொண்டது.

இயேசுவின் பிரதான கட்டளையை நேரிடையாக பெற்று கொண்டவர்களைத் தலைவர்களாக கொண்ட சபை.

பரிசுத்த ஆவியின் அருள்மாரியை பெற்ற முதல் திருச்சபை.

இயேசுவை மறுதலித்த பேதுரு பரிசுத்த ஆவியின் பலத்தினால் பேசின போது 3000 பேர்கள் சபையில் சேர்ந்த வரலாறு கொண்ட சபை,
அடையாளங்கள், அற்புதங்கள், அற்புத சுகம் ஆகியவற்றை நடப்பித்த சபை.
உபத்திரவங்களை சகித்த சபை, அனனியா, சப்பீராள் விவகாரத்தில் தேவனுடைய நேரடியான சந்திப்பை பார்த்த சபை.
அதற்கு பின் அந்த வகையான தேவனுடைய தெய்வீக தண்டனையை( Divine punishment) வேறு எந்த ‌சபையும் பார்த்தது இல்லை.

அப்போஸ்தல நடபடிகளின் புத்தகத்தில் முதல் அதிகாரத்திலிருந்து 6:7 வரை உள்ள நிகழ்வுகளை பார்க்கும் போது சபையின் பிரமாண்ட வளர்ச்சி தேவனுடைய கிரியையினால் ஏற்பட்டது என்று அறிந்து கொள்ளலாம்.
(Acts 2:41,4:4,5:14 and 6:7)

வேத அறிஞர்கள் சொல்லுகிறபடி அப்போஸ்தல நடபடிகளின் புத்தகத்தில் 1 வது அதிகாரம் முதல் 6:7 வரை உள்ள நிகழ்வுகள் சுமார் 10 ஆண்டு கால இடைவெளியில் நடந்திருக்கலாம்..
இவ்வளவு ஆசீர்வாதங்களை பெற்ற சபை சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் ஏன்  வழங்கப்படவில்லை?
எதோ தற்செயலாக நடந்த காரியம் இல்லை .

ஆனால்
அந்தியோகியா சபைதான் முதல் முதலாக எல்லா தரப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய  சபை  (யூதர்கள்  கிரேக்கர்கள்)

இந்தஅந்தியோகியா   சபை எருசலேம் சபையால் ஆரம்பிக்கப்பட்ட சபையும் அல்ல.
12  அப்போஸ்தலர்களால் ஆரம்பிக்க பட்டதும் அல்ல

ஆனால் அதே வேலையில்    பவுலையும் , பர்னபாவையும் உலகத்தின் பல இடங்களுக்கு அனுப்பியது இந்த சபைதான் .

இந்த அந்தியோகியா சபையில் இருந்துதான் தேவ அரசு பூமியின் கடைசிபரியந்தமும் பரவியது. 
" நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் ' என்ற   தேவனுடைய  கட்டளையை   தரிசனமாக கொண்ட சபை பெயர் குறிப்பிடப்படாத   ஒரு சில தேவ பிள்ளைகளால் உண்டாக்கப்பட்டது.
.அப்11:20

இந்த சபை மொழி சாதி இனங்களுக்கு அப்பாற்பட்ட சபை,

இந்த சபைதான் பஞ்சத்தில் வாடிய யூத மக்களுக்கு உதவி செய்தது.(Acts 11:29).

தேவனுடைய பிரதான கட்டளையை நிறைவேற்ற முடியாமல் எல்லா அப்போஸ்தலர்களும் எருசலேமில் முடங்கி கிடந்த போது அந்தியோகியா திருசபை புற இனத்தார்க்கு சுவிசேஷத்தை கொண்டு சென்று. புரட்சியை சரித்திரத்தில் உண்டாக்கியது.அப் 13:1-3

உலகளாவிய சிந்தையை உள்வாங்கிய சபை.

எந்த சபை மொழி,  வட்டார, சாதி நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து பிரதான கட்டளையை புறக்கணிக்கின்றதோ அவர்கள்  "கிறிஸ்தவர்கள்" என்று அழைக்கபட தகுதி இழந்தவர்கள் ஆகி விடுகிறார்கள்.

எவ்ளவு பெரிய காரியங்களை சாதித்தாலும், எவ்வளவு பெரிய சபையாய் இருந்தாலும். தேவனின் பிரதான கட்டளையை நிறைவேற்ற தவறினால் தேவன் அந்த சபைகளை எருசலேம்  சபையை போல் கடந்து போய் விடுவார்
.
இது உண்மை . தமிழக திருச்சபை வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு.
Ezekiel Shanmugavel.