Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

பவுலின் நிருபங்களும் அப்போஸ்தலருடைய அதிகாரமும்.


பொதுவாக பவுல் தன்னுடைய நிருபங்களில் தன்னை அப்போஸ்தலனாக அறிமுகப்படுத்திக்கொண்டு சபைகளுக்கு எழுதுவதை பார்க்கலாம்.

பிலிப்பியருக்கும் தெசலோனிக்கியருக்கும் பிலேமோனுக்கும் எழுதிய நிருபங்களை தவிர மற்ற எல்லா நிரூபங்களிலும் தன்னை அப்போஸ்தலனாக அடையாளப்படுத்திக்கொள்கிறார்.

தான் நிறுவிய சபைகளிலே பவுலுக்கு பிடித்தமான அவருடைய இதயத்தில் இடம் பிடித்த ஒரே சபை பிலிப்பிய பட்டணத்து சபைதான் (2 கொரி 11:9,பிலி 4:1,16)

மேலும் இங்கு அறிவுரை கூற வேண்டிய சூழ்நிலை இல்லை.

அவர்கள் தானாகவே மிகுந்த அன்புடன் அவரின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள கூடியவர்கள்.

தெசலோனிக்கிய சபையை பொறுத்தவரையில் காலத்திய, கொரிந்து ,ரோமாபுரி, கொலோசிய சபைகளை போல பற்றிஎரியும், சரி செய்ய வேண்டிய காரியங்கள் ஒன்றும் இங்கில்லை.
எனவே தெசலோனிக்கிய சபையைலும் அப்போஸ்தல அதிகாரத்தை பயன் படுத்த வேண்டிய தேவை எழவில்லை.


*ஆனால் மற்ற ** *எல்லா இடங்களிலும், ஏன் தான் நிறுவிய கலாத்திய* *கொரிந்து* , *எபேசிய சபைகளில்*
*கூட தன்னை அப்போஸ்தலன்என்று* *அறிமுகப்படுத்தி தன் அதிகாரத்தை பயன்படுத்தி கிறிஸ்துவ உபதேசத்தை நிலைநிறுத்துகிறார்.*

அந்த சபைகளின் சூழ்நிலைகள், உபதேச குழப்படிகள் இவைகளை சரி செய்ய தனக்கு தேவன் அளித்த அப்போஸ்தல அதிகாரத்தை பயன்படுத்துகிறார்.

*எங்கே அதிகாரத்தை பயன்படுத்த வேண்டுமோ அங்கே பயன்படுத்துகிறார். எங்கே தேவை இல்லையோ அங்கே அவர் சாதாரணமாக தன்னை அடிமையாகவே அடையாள . படுத்திகொள்கிறார்.*
*தன் அதிகாரத்தை ஒருபோதும் இறுமாப்பாக பவுல் பயன்படுத்தவில்லை.*

*Right application of authority in right place is the need of the hour for ministers* of God *today* .

மிக பெரிய அப்போஸ்தல அதிகாரத்தை நிரூபங்களில் கூட தேவை இல்லாமல் பயன்படுத்த விரும்பாத பவுலையும் இன்று உள்ள நிலையையும் ஒப்பிட விரும்புகிறேன்.
தங்களுக்கு தேவன் கொடுத்த ஊழிய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறதை நாம் கண்ணால் பார்க்கமுடிகிறது

ஆவிக்குரிய பெருமை, இறுமாப்பு விவாசிகளிடம் காணப்படுவதை விட பன்மடங்கு நட்சத்திர பிரசங்கிகளிடம் காணப்படுகிறது.

.
லூசிபர் சாத்தனாக மாற காரணம் பெருமை தான் என்பதை மறந்து விடகூடாது
“ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது”1கொரி 15:10
Ezekiel Shanmugavel