Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

பவுலும் பிலிப்பி பட்டணத்து சபையும்

பவுலும் பிலிப்பு சபையும்
ஊழியரும் விசுவாசிகளும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பவுலும் பிலிப்பி பட்டணத்து சபையும் ஒரு முன்மாதிரி.

பவுல் தன் வாழ்நாளில் 14 க்கும் மேலாக சபைகளை நிறுவியதாக சொல்லப்படுகிறது.

2ஆண்டுகளுக்கும் மேலாக எபேசு சபையில் மட்டும் தங்கி ஊழியம் செய்தார்.
ஆனால் பவுலின் மனதிலும், இதயத்திலும். ஜெபத்திலும் இடம் பிடித்த ஒரே சபை பிலிப்பி பட்டணத்து சபை மட்டும்தான்.
எந்த அளவிற்கு விசுவாசிகளும் பவுல் மீது அன்பையும் ஆதரவையும் பொழிந்தார்களோ அதே அளவிற்கு பவுலும் அந்த விசுவாசிகள் மீது ஒரு தனி பாசத்துடன் உறவு கொண்டுருந்தார்.
அந்த அன்பின் வெளிப்பாடு அவரது நிரூபங்களில் வெளியரங்கமாக தெரிகிறது .

எனவேதான் இந்த நிருபத்தை “ *Loveliest letter of Paul” or “ The epistle of Excellent Things” என்று அழைக்கிறார்கள்.*

*பிலிப்பு பட்டணத்து சபை பவுல் மீது காட்டிய அன்பு.*

பவுல் விசாரனை கைதியாக ரோமாபுரி பட்டிணத்தில் house arrestல் இருக்கும் போதுஒருவரும், ஏன் எந்த சபையும் பவுலோடு அடியாளப்படுத்திக்கொள்ள தயங்கிய வேளையில் எப்பாப்பிரோதீத்துவை வெகுமதிகளோடு பவுலிடத்திற்கு அனுப்பி அவரை மகிழ்வித்த சபைச இந்த நகரத்து சபை.( பிலி 2:25-28,4:18)

*பவுலின் பொருளாதார கஷ்டங்களில் ** *பிலிப்பு பட்டணத்து சபையை போல வேறு எந்த சபையும் பவுலுக்கு உதவி** *செய்ததில்லை.*

பவுல் எழுதிய வார்த்தைகளை பாருங்கள்
"ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது.
மேலும், பிலிப்பியரே, சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல், வேறொரு சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்
நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள்”...( பிலி4:14-15)

இப்படியாக பிலிப்பு பட்டணத்து சபை பவுலை விசாரித்த சபை, ஆதரித்த சபை, பாடுகளில் பங்கு பெற்ற சபை.

*பவுலும் பிலிப்பு பட்டணத்து சபையை நேசித்த விதம்.*



பிலிப்பு பட்டணத்து சபையை மனதில் பவுல் வைத்திருந்தார்.

பிலிப்பு பட்டணத்துசபைக்காக மகிழ்ச்சியுடன் வேண்டுதல் செய்தார்.
(“நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,”
நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
என் கட்டுகளிலும் --, நீங்கள் பங்குள்ளவர்களானதால்,” .( பிலி1:1-11)

பிலிப்பு பட்டணத்து சபை பவுலுக்கு சந்தோஷமும் கிரீடமுமான சபை. .( பிலி4:1)
இப்படியாக ஒவ்வொரு சபையும் விசுவாசிகளும் பிலிப்பிய பட்டணத்து சபையும் பவுலும் போல இருக்கவேண்டும்.
எசேக்கியல் சண்முகவேல்