Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

பணியை முடித்து பலனை இழந்த பாராக்கு.
படிக்க நியாயாதிபதிகள் புத்தகம் நான்காவது அதிகாரம் .

இந்த அதிகாரத்தில் பாராக்
*தேவனுடைய அழைப்பை தயக்கத்துடன் ஏற்றுக்* *கொண்டார்* .
*முழுமையாக  தேவனுடைய திட்டத்தை நம்பவில்லை* .
தேவனுடைய திட்டம் என்னவென்றால்

“நான் யாபீனின் படைத்தளபதி சிசெராவையும், அவனுடைய இரதங்களையும், அவனுடைய படையையும் கீசோன் ஆற்றண்டையில் வரும்படி தூண்டி உன்னுடைய கையில் ஒப்படைப்பேன்"என்பதாகும்
நியாயாதிபதிகள் 4:7.

*ஆனால் இந்த வாக்குறுதியை அவன் முழுமையாக விசுவாசிக்காமல்* தெபோராளை உதவிக்கு அழைத்தார்.

அப்பொழுது தெபோராள் சொன்ன தீர்க்கதரிசனம்

“ நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன். ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது. கர்த்தர் சிரெசாவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார்". என்பதாகும்.
நியாயாதிபதிகள் 4:9

இந்த தீர்க்கதரிசனத்தின் படி பாராக் சிசெராவின் படைகளை தோற்கடித்தான்.

சிரெசா கால்நடையாய் தப்பி ஓடி கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்.

அந்த நேரத்தில் சிரேசாவின் ராஜாவான யாபீனுக்கும் கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் நல்ல உறவு இருந்தது.
நியாயாதிபதிகள் 4:17

இதுவே சிசெரா யாகேல் தன்னைக் காப்பாற்றுவாள் என்று நம்பி அவளிடம் அடைக்கலம் புகுந்தான்.

அவளும் முதலில் அவனைக் காப்பாற்ற நினைத்தாள், ஆனால் சிசேரா சொன்ன இந்த வார்த்தை அவள் மனதை மாற்றியது.

சிசெரா அவளிடம், " நீ கூடாரவாசலில் நின்றுகொள். யாராவது வந்து, ‘இங்கு யாரேனும் இருக்கிறார்களா?’ சொல்"
என்கிற இந்த வார்த்தை அவன் தோல்வி முகத்தில் இருக்கிறான் என்பதை உணர்த்தியது.

எனவே அவனை காப்பாற்றினால் யூதர்களை பகைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி தேவனுடைய தீர்க்கதரிசன நிறைவேறும்படியாக அவளே அவனை கொன்றாள்.
நியாயாதிபதிகள் 4:20.

*பாராக் செய்ய வேண்டிய வேலையை யாகேல் செய்து விட்டாள்.*

பாராக் அரை மனதோடு தயக்கத்தோடு தேவனுடைய வார்த்தையின் மீது முழுமையான விசுவாசம் வைக்காமல் தேவனுடைய பணியில் ஈடுபட்டான். அவன் பணியை முடித்தான் ஆனால் பலன் கிடைக்கவில்லை. சிசெராவை கொன்ற புகழை அவனால் பெற முடியவில்லை.


*நாமும் கூட அநேக நேரங்களில் தேவனுடைய பணிகளை அரை மனதோடு, தேவன்* மீது *முழு விசுவாசம் வைக்காமல் ஏதோ கடமைக்காக செய்யும்போது பணியை முடித்து விடுவோம் .ஆனால் அதற்கான பலனை வேறு யாரோ பெற்று விடுவார்கள்.*
மன மகிழ்ச்சியோடு விசுவாசத்தோடு, நம்பிக்கையோடு தேவனுடைய பணியை நாம் நிறைவேற்றும் பொழுது அதனுடைய முழுமையானபலனை நாம் பெற முடியும்.

இல்லையென்றால் பாரக்கை போல பணியை செய்வோம் பலனை இழந்து விடுவோம்..

நாமும் நமக்கு அழைக்கப்பட்ட பணியை சிறிதானதோ பெரிதானதோ மனமகிழ்ச்சியோடு செய்ய, தேவன் மீது முழு நம்பிக்கையோடு செய்ய கர்த்தர் நமக்கு கிருபை தருவாராக.
எசேக்கியேல் சண்முகவேல்