Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

எது தேவனுடைய கையில் உள்ள பலமுள்ள ஆயுதம்?

ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பினான். அவன் பெலிஸ்தரின் அறுநூறுபேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தான்( *மாட்டை அடிக்கும் கம்பினால்).* அவனும் இஸ்ரவேலை இரட்சித்தான்.
நியாயாதிபதிகள் 3:31

ஏகூத் *இடது கை பழக்கம் உள்ளவன்*
அவன் மோவாப் அரசன் எக்லோனை தன் வாளால் வெட்டி சாய்த்தான்
.‌
*இந்த தேவனுடைய வார்த்தைகள் வரங்களே இல்லை என்று தவறாக எண்ணிக்கொள்ளும்* *விசுவாசிகளுக்கு மிகவும் உற்சாகமான* *வார்த்தைகள்* .

கத்தி, வாள் ,ஈட்டி, குதிரைகள் என்று பலவிதமான கருவிகளை தங்களது வலது கையால் யுத்தத்தில் பயன்படுத்தயவர்கள்தான் பெரிய வீரராக கணித்த காலம் அது.
ஆனால் இந்த *சம்கார்* *சாதாரண விவசாயி பயன்படுத்தும் மாட்டை அடிக்கும் கம்பினால் எதிரிகள் 600 பேரை கொன்றான் இந்த வேதம் சொல்லுகிறது. விசுவாசிகளுக்கும் . ஏதாவது ஒரு வரத்தை* *தேவன் கொடுத்திருக்கிறார். அந்த வரத்தை உணர்ந்து அது சிறிய* *வரமோ பெரிய வரமோ அதை பயன்படுத்தும் பொழுது தேவன்* *நம்மில் பிரியப்படுகிறார்* . *நமக்கு ஒன்றும் இல்லை என்று விசுவாசிகள் முடங்கி* *கிடக்க கூடாது. விசுவாசிகள் தங்களுக்கு எதில் ஆர்வம்* *இருக்கிறதோ அந்த காரியத்தில் ஏதாவது ஒரு ஒன்றை ஆண்டவருக்காக செய்ய வேண்டும். மோசேயும் பவுலும் நன்கு கற்று அறிந்திருந்தாலும் அவர்கள் நாவன்மை உடையவர்கள் அல்ல* ஆனாலும் அவர்கள் தேவ சித்தத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்த போது தேவன் அவர்களை பயன்படுத்தினார்.
*நம்முடைய கைக்கு எது வாய்க்கிறதோ அதை* *முதலில் செய்ய பழக வேண்டும்.*
*தலைவர்கள் ஊழியர்கள் நம்மை தூக்கி விடுவார்கள் என்று கனவில் நினைக்க வேண்டாம்.*

நாம் எதையும் எதிர்பாராமல் கர்த்தரை நம்பி நாம் செய்கிற ஊழியம் சிறிய ஊழியமாக இருந்தாலும் நம்முடைய நோக்கங்கள் சரியாக இருந்தால் கடவுள் அதை நிச்சயமாக பெருக பண்ணுவார்.

*உலகத்தின் பார்வையில் பலவீனமான பாத்திரம் கருவி என்று* *கருதப்படுகிறவைகள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் கரங்களில் கூர்மையான பலமான ஆயுதமாக* மாறும் என்பது இந்த நிகழ்வின் மூலம் நாம் கற்றுக் கொள்ளலாம்.
*நம்மிடம் ஒன்றும் இல்லை என்று சொல்லி ஒன்றும் செய்யாமல்* *இருப்பதை காட்டிலும் நம்மிடம் உள்ளதை தேவன் கொடுத்ததாக* *நினைத்துக் கொண்டு ஆண்டவருக்காக செயல்படும்போது அந்த* *காரியத்தை தேவன் நமக்கு அந்த ஊழியத்தை வாய்க்கப்* *பண்ணுவார்* .
சம்காரைப் பற்றி வேதத்தில் ஒரே ஒரு வசனம் தான் இருக்கிறது.
நியா 3:31
ஆனால் அது நமக்கு போதிக்கும் பாடங்கள் பல.
“ *Give whatever tools you have to the Lord, stand your ground courageously* and trust *Godto use what’s in your hand to accomplish great* *hings*
for *His glory* .
.charles spurgen* ..
ஒவ்வொரு விசுவாசியும் ஒரு சம்காராக
ஏகூத்தாக மாற எந்த தடையும் இல்லை.

The world is looking
for better methods, but God is looking for better men
and women who understand the basics: the power of
the Holy Spirit, wise strategy, and steadfast courage..EM Bound.
Ezekiel Shanmugavel