Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

He took flesh for an official purpose
" *அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை* மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து", எபி 5:6

*இந்த வாக்கியத்தில் "அவர் மாம்சத்திலிருந்த நாட்களில்* , " *என்கிற பதத்தை முக்கியப்படுத்தி வேண்டுகிறேன்.*

அவர் தேவனுடைய குமாரனாகிய இருந்தும்  நம்முடைய பாவங்களுக்காக மாமிச சரீரத்தை ஏற்றுக்கொண்டார்.
*He took flesh for an official purpose.*

அதனால் மாமிசத்தில் ஏற்படக்கூடிய தாகம் பசி களைப்பு தூக்கம் எல்லாம் அவருக்கு ஏற்பட்டது 
அந்த பெலவீன மாமிச சரீரத்தில்,அவர்  கெத்சமனே தோட்டத்திலும்  கல்வாரியிலும்  அடைந்த வேதனை, பாடுகளில் வெளிப்பட்ட  ஜெபங்களை, விண்ணப்பங்களை  மாத்திரம் கணக்கில் கொள்ளாமல் அவர் வாழ்ந்த *காலம் முழுவதிலும் அவர்*  *கண்ணீரோடும் சத்தத்தோடு ஏறெடுத்த அத்தனை  ஜெபங்கள், விண்ணப்பங்கள்* , *கதறல்கள்  அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.*

It *means the whole time of His humiliation*

மார்க் 1:35 மத்தேயு 14:23,25 லூக் 6:12,22:39-42  இவைகளை தியானிக்க வேண்டுகிறேன்.1:35
இயேசுகிறிஸ்து வாழ்நாள் முழுவதும் பாடுகள் நிறைந்த மனிதராக மாத்திரம் காணப்படவில்லை, அவர் வாழ்நாள் முழுவதும்   கண்ணீரோடும், பலத்த சத்தத்தோடும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் ஏறெடுத்த  தேவ குமாரனாக காணப்பட்டார்.

அவர்  வாழ்ந்த நாட்கள் முழுவதும் இது அவருடைய  ஊழியத்தின் செயல்பாடாக காணப்பட்டது. அதுபோல் நாமும் நம்முடைய கஷ்ட நேரங்களில், இக்கட்டு நேரங்களில் தேவனை  நோக்கி பாரத்தோடும், கண்ணீரோடும், பலத்த சத்தத்தோடும்,   தேவ  சித்தத்தின்  மத்தியில் ஏறெடுக்கும்  எந்த ஜெபத்திற்கும் நிச்சயமாக பதில் உண்டு.

இன்றைக்கு மக்கள் மத்தியில் காணப்படும் ஆராதனை, துதி பற்றிய கருத்துக்கள்  ஜெப சிந்தனையை நீர்த்து போகப் பண்ணாமல் அவைகளை  உற்சாகப்படுத்தும்  முறையில் இருக்க வேண்டும்.
துதிகள் ஆரவாரங்கள் அவசியம் தான். ஆனால் அதை விட மக்களுக்காக, தேசத்திற்காக நாம்  கண்ணீரோடும் சத்தத்தோடும் ஏறெடுக்கக்கூடிய ஜெபங்கள் மிகுந்த பயனுள்ளது.

கண்ணீரோடு விதைக்கிற  மனிதன்தான் கெம்பீரமாய்  அறுவடை செய்ய முடியும்.
இயேசுகிறிஸ்து நமக்கு வைத்த முன்மாதிரி இதுதான்.
எசேக்கியல் சண்முகவேல்