Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

சாத்தானுக்கு நாம் தினசரி சொல்ல வேண்டிய செய்தி
அவனிடம்(எக்லோனிடம்) ஏகூத் கிட்டவந்து, “என்னிடம், *உமக்குக் கொடுக்கவேண்டிய இறைவனிடமிருந்து* *பெற்ற ஒரு செய்தி இருக்கிறது"*

”Ehud ,, approached him and said, ‘I *have a message from God* for you.

இந்த வார்த்தை ஏகூத்
எக்லோனை பட்டயத்தால் கொல்வதற்கு முன்பாக சொன்ன வார்த்தை.


சாத்தான் எப்போதுமே நம்மை ஒரு பலவீனமான போர் வீரனாக காண்பிப்பான்
தோல்விகளையே சந்திக்கிற மனிதனாக உலகத்துக்கு அறிமுகப்படுத்துவான்.
நம்முடைய பாடுகள் சோர்வுகள் இழப்புகள் இவைகளையே சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பான்.
எனவே
அவனுக்கு நாம் சொல்ல வேண்டிய செய்தி என்னவென்றால்,

சாத்தானே நீ உன் பெருமையினால் பரலோகத்தில் இருந்து தள்ளப்பட்டு விட்டாய்.

நீ மேன்மையை இழந்தவன்
அழிவுக்கென்று முன் குறிக்கப்பட்டவன்.

சாத்தானே உன்னை தேவ குமாரனாகிய கிறிஸ்து கல்வாரியில் வெற்றி கொண்டு விட்டார்.

சாத்தானே நீ தோற்கடிக்கப்பட்டவன்
உன்னுடைய நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது.

உனக்கென்று ஒரு நரகம் ஆயத்தமாக இருக்கிறது.

உன்னால் இரத்த சாட்சியாக மரித்த‌ தேவப் பிள்ளைகளின் குரல் உனக்கு எதிராக பரலோகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களை நீ பறிக்க முடியாது.

நான் சபையாக உலக தோற்றத்திற்கு முன்பாக முன் குறிக்கப்பட்டவன்.

தேவன் எனக்கு அளித்த இரட்சிப்பு நித்தியமானது மாறாதது அழியாதது.
அவர் என்னை வழுவாதபடி பாதுகாக்க வல்லவர்.

தேவன் என் மீது வைத்த அன்பை நீ பிரிக்க முடியாது
தோற்கடிக்கப்பட்ட நீ தேவன் என் மீது கொண்டிருக்கும் நோக்கத்தை தோற்கடிக்க முடியாது..
*_You are a defeated foe.*
*You cannot defeat God's purpose in my life*

நான் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு உறுப்பாக இணைக்கப்பட்டுள்ளேன். என்னுடைய பணியை நீ தடுக்க முடியாது.

இறைவன் எனக்கென்று ஒரு இடத்தை பரலோகத்தில் ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

சாத்தானே
நித்தியத்தில் நீ நரகத்தில் இருப்பாய்.
நானோ மிகப்பெரிய பரிசுகளோடு கடவுளோடு நீடித்த நாட்களாக வாழ்வேன்.

இந்த பூமியில் நான் வாழும் கொஞ்ச காலத்தில் தேவன் என் மீது வைத்த அநாதி திட்டத்தை நீ தடுக்க முடியாது.

நான் இந்த உலகத்தில் மறுபடியும் பரிசுத்த ஆவியினால் பிறந்தவன்

. எனவே எனக்கு இந்த பூமியில் ஆவிக்குரிய மரணம் இனி எனக்கு கிடையாது
தேவகுமாரனுடைய பிள்ளையாக‌ பிதாவினுடைய குடும்பத்தில் நான் காணப்படுவேன்.

உன்னுடைய முடிவு அப்படி அல்ல.

இப்படி நாம் சாத்தானை பார்த்து சொல்லக்கூடிய செய்திகள் அநேகம்.

இந்த காரியங்களை சாத்தானை நோக்கி சொல்லிக் கொண்டே இருங்கள் .
அப்பொழுதுநமக்குள் ஒரு புதிய வல்லமை, வெளிப்படுத்தல், ஒரு சந்தோசம் ஒரு மகிழ்ச்சி ஏற்படும்.
அன்றைக்கு ஏகூத் எக்லோனை பட்டயத்தாள் குத்தின மாதிரி தினமும் நாம் தேவனுடைய வசனமாகிய பட்டயத்தால் அவனை குத்திக் கொண்டே இருப்போம்.
Ezekiel Shanmugavel.