நியாயாதிபதிகள் புத்தகம் ஐந்தாவது அதிகாரம்.
*தெபோராள், பாராக்கு பாடிய பாடலின் சிறப்புகள்.*
1. *கர்த்தரை புகழ்ந்து பாடிய இந்தப் பாடலில் இரண்டு தாய்மார்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.*
ஒன்று தேவனுடைய வழிகளில் நடந்த இஸ்ரவேலின் தாயாக சொல்லப்பட்ட தெபோராளை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரவேல் ஜனங்களின் தீர்க்கதரிசியாக இருந்து அவள் நடப்பித்த செயல்களை ப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.5: 7,12
தெபோராள், பாராக்கை குறித்து சொன்ன கர்த்தருடைய வார்த்தை எப்படி நிறைவேறியதுஎன்பதையும் இந்த பாடலில் பார்க்கலாம் 5:19-22
மற்றொன்று தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக கிரியை செய்த *சிசெராவின் தாய் தன்* மகனின் முடிவை குறித்த புலம்பலையும் இங்கு பார்க்கலாம் 5:28-31
கடவுளுக்கு பயந்த *இஸ்ரவேல் ஜனங்களுடைய தாய் தெபோராள்* மற்றும் *கடவுளுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக செயல்பட்ட சிசெராவின்* *தாய்* . இவர்களை ஒப்பிட்டு இந்தப் பாடல் பாடப்பட்டுள்ளது
2. பாராக்கு அவிசுவாசத்தினால் செய்ய முடியாத காரியத்தை யாகேல் என்னும் பெண்மணி செய்து முடித்து பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவளாக குறிப்பிடப்படுகிறாள்.5:24.
*இயேசு கிறிஸ்துவை தன் வயிற்றில் சுமந்த மரியாள் மட்டுமே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று பாராட்டப்படுகிற இன்னொரு பெண்மணி.*
லூக் 1:42
*எவ்வளவு மகிமையான காரியம் பாருஙநாகேஷ் *வேதத்தில் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்ட இரண்டு பெண்மணிகளில் யாகேல் இருப்பது ஆம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட காரியம்.*
3. இன்னொரு முக்கியமான குறிப்பு என்னவென்றால் இஸ்ரவேல் ஜனங்களில் உள்ள 12 கோத்திரங்களில் இக்கட்டான காலகட்டங்களில் கடவுளுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக எழுந்த கானான் தேசத்துக் குடிகளுக்கு எதிராக நடந்த போர்க்களத்தில் எந்த கோத்திரங்கள் ஆதரவாக இருந்தது எந்த கோத்திரங்கள் அந்தப் போர்க்களத்தில் கலந்து கொள்ளவில்லை என்கிற தகவல்களும்இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.5:14-18
*ஆறு கோத்திரங்கள் இந்த போர்க்களத்தில்* *இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்*
பென்யமின்,செபுலோன்,
இசக்கார்,எப்பிராயிம், நப்தலி,மனாசே கோத்திரங்கள் போர்க்களத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
ஆனால் ரூபன்,தான்ஆசேர்.
கிலேயாத் ஆகிய நான்கு கோத்திரங்கள் *கடவுளுடைய பிள்ளைகளோடு இணைந்து நிற்கவில்லை*
இந்தக் குறிப்பு சாதாரணமாக காணப்பட்டாலும் *கடவுள் எல்லா காரியங்களையும் மனதில் வைத்து குறிப்பிடுகிறார் என்பதை மறந்து போகக்கூடாது.*
நம்முடைய சபையிலோ இயக்கத்திலோ அல்லது கடவுளுடைய பிள்ளைகளுக்கு ஆபத்து வரும் பொழுது தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அவர்களுக்காக போராடுகிற மக்களை கடவுள் ஒருபோதும் மறப்பதில்லை.
1கொரி 3:10-15 ஐ இந்த இடத்தில் நாம் தியானிக்க வேண்டியது அவசியம்.
நம்முடைய ஊழியங்கள் சேவைகள் தேவனால் சோதிக்கப்படும் பொழுது நாம் எப்படியாக இருப்போம்.
ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான். அவனோ இரட்சிக்கப்படுவான். அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.
1 கொரிந்தியர் 3:15
இறுதியாக
*பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளை ஒரு கதையாக படிக்க கூடாது.*
*நம்முடைய எச்சரிப்புக்காக, ஆலோசனைக்காக, படிப்பினைக்காக எழுதப்பட்டுள்ளது என்பதை உணரும்* *பொழுது நாம் பழைய ஏற்பாட்டில் உள்ள ஒவ்வொரு பக்கத்தையும் சாதாரணமாக கடந்து போக மாட்டோம்.*
எந்த ஒரு அதிகாரத்தையும் ஏனோ தானோ என்று படிப்பதை விட்டுவிட்டு நேரமெடுத்து நாம் வேத வசனங்களை தியானிக்கும் போது அவர் நம்முடைய மன கண்களை திறப்பார்.
இவைகளெல்லாம் (. பழைய ஏற்பாடு)திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது. உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.
1 கொரிந்தியர் 10:11
எசேக்கியேல் சண்முகவேல்