WILLIAM TYNDALE
*கர்த்தர் எனக்கு ஆயுசு நாட்களை கூட்டித்தருவாரென்றால் நான் இந்த தேசத்தில் ஏர் ஓட்டுகின்ற சிறுவன்* கூட *உங்களை (priest) விட வேதத்தை அதிகம் தெரிந்தவர்களாக மாற்றமுடியும்* ” If God spare my life ere many years, I will cause a boy that driveth the plough, shall know more of the scriptures than thou dost (priest).-Tyndale
இங்கிலாந்து தேசத்தை சேர்ந்த WILLIAM TYNDALE வேதத்தை தன்னுடைய தாய் மொழியான ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததற்க்காக அப்போதைய பாதிரியார்கள் இவரை தீயிட்டு கொளுத்தினார்கள். காரணம் அந்த காலத்தில் வேதம் என்பது போதகர்கள், மேய்ப்பர்கள் இறையியல் படித்தவர்கள் கைகளில் மட்டுமே காணப்பட்டது.
வேத புத்தகங்கள் இலத்தின் மொழியில் எழுதப்பட்ட வேத புத்தகங்கள்தான் பழக்கத்தில் இருந்தது .
இன்றைக்கு ஆங்கிலம் எப்படி கருதப்படுகிறதுதோ அதுபோல் இலத்தின் மொழி உயர்தர மக்களின் மொழியாக கருதப்பட்டது.
வேதத்தை படிப்பது என்பது பாமர, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. சாதாரண எளிய மக்கள் பேசுகின்ற ஆங்கில மொழியில் வேத மொழியாக்கம் செய்யப்படவில்லை. வேதத்தை பாமர மக்கள் படித்தால் எங்கே தாங்கள் போதிக்கிற தவறான உபதேசங்களை, பழக்கவழக்கங்களை, சம்பிரதாயங்களை சாதாரண பாமர மக்கள் அறிந்து கொள்வார்களோ என்கிற பயம் அன்றைய மத குருமார்கள் *மத்தியில் காணப்பட்டது. எனவே அன்றைய மத குருமார்கள் வேதத்தை சாதாரண பாமர* *மக்கள் பேசும் ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பதை எதிர்த்தார்கள். அதன் விளைவு டிண்டேல் எரித்துக்* *கொல்லப்ப்பட்டார்.* அதற்கு அவர்கள் கூறிய காரணம் வேதம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் கறை பட்டு விடும், மொழியாக்கம் சரியாக இருக்காது என்கிற வாதத்தை வைத்தார்கள்
ஆனால் இன்று நமது கைகளில் வேதாகமம் தவழ்கிறது.
ஆனால் இன்றைய சபைகளில் காணப்படுகின்ற இன்னொரு மாறுபட்ட சூழ்நிலை என்னவென்றால் போதகர்கள் தாங்கள் கற்றுக் கொள்கிற அரிய சத்தியங்களை, இலக்கியங்களை, வேத விளக்க உரைகளை, ஆராய்ச்சி நூல்களை, ஆராய்ச்சி வேத புத்தகங்களை
விசுவாசிகளுக்கு அறிமுகம் செய்து வைக்க மாட்டார்கள்.
Plain Bible ஐ தவிர வேறு எதையும் அறிமுகப்படுத்த மாட்டார்கள்.
விசுவாசிகள் தாங்களாகவே முயற்சி செய்து பிற நண்பர்கள் மூலம் இந்த தகவல்களை பெற்றால் ஒழிய அவர்களுக்கு இதைப் பற்றியுள்ள எந்த தகவலும் கிடைப்பதில்லை.
தமிழில் இப்பொழுது மிக சிறந்த Study Bible Bibles, Commentaries வெளிவந்துவிட்டன. அவைகளை சபை மேய்ப்பர்கள் விசுவாசிகளுக்கு கட்டாயம் அறிமுகப்படுத்த வேண்டும். அவர்களை படிக்க ஊக்குவிக்க வேண்டும்.
எங்கே விசுவாசிகள் படித்தால் தங்களை விட அதிகம் கற்றுக் கொள்வார்களோ என்கிற ஒரு insecurity மேய்பர்கள் போதகர்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்றது.
இப்போது உள்ள போதகர்கள் வேதத்தில் சொல்லப்படும்
அடிப்படையான சத்தியங்களை கூட விசுவாசிகள் தெரிந்துகொள்ள விடாமல் வளரவிடாமல் தங்கள் போதகத்தை மட்டும் கேட்டால் போதும் என்று கூறி அவைகளைப் படிக்க விடாமல் தடுத்து விடுகிறார்கள்
. *இவர்கள் Tyndale காலத்து போதகர்களை விட வித்தியாசமானவர்களோ மாறுபட்டவர்களோ* *அல்ல. சபைகளில் இந்த சூழ்நிலை மாற நாம்* *பாரத்தோடு ஜெபிக்க வேண்டும். .* விசுவாசிகளும் கர்த்தருடைய சரீரமாகிய சபையில் உறுப்பினர்கள் என்கிற சிந்தனை வரவேண்டும்
சண்முகவேல் எசேக்கியேல்