நாம் முன் குறிக்கப்பட்டு இருந்தால் கடவுள் தம்முடைய சித்தத்தை நம் வாழ்க்கையில் நிச்சயம் நிறைவேற்றுவார்.
தயக்கத்துடன் தன்னுடைய இயலாமையை சுட்டிக்காட்டி தேவனுடைய அழைப்பைநிராகரித்த தேவனால் முன் குறிக்கப்பட்ட நபர்கள் யார் என்றால் மோசே மற்றும் கிதியோன் .
இவர்களும் எரேமியாவை போல இயலாமையை அறிக்கையிட்டார்கள்
கிதியோன் தான் மனாசே கோத்திரத்தில் வலு குறைந்த குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் சிறியவனாயிருக்கிறேன் என்று சொல்லி தான் எப்படி இஸ்ரயேலரைக் காப்பாற்ற முடியும்?” என்று கேட்டார்.
நியாயாதிபதிகள் 6:15.
உலகத்தை படைத்த தேவன் அவரை பலசாலி என்று அழைத்த பிறகும், இருக்கிற பலத்தோடு செல் என்று தேவன் கட்டளை பிறப்பித்த பின்னும்
யெகோவா, “நான் உன்னுடனே இருப்பேன்; மீதியானியர் எல்லோரையும் ஒரு மனிதனை முறியடிப்பதுபோலவே நீ முறியடிப்பாய்” என்று சொன்ன பிறகும் தேவனிடத்தில் அடையாளங்களை கேட்டார்.
*தேவன் தான் தெரிந்து கொண்ட மக்களை எப்படியும் ஊழியத்திற்கு அழைத்து* *தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவார்* ஏன்று சொல்லும் கால்வின் உபதேசம் கிதியோன் வாழ்க்கையில் பரிபூரணமாக நிறைவேறியது.
தேவன் தான் முன் குறித்த மக்களை எப்படியும் தன்னுடைய வழிக்குள் கொண்டு வந்து உலக தோற்றத்திற்கு முன்பாக தான் தெரிந்து கொண்ட நோக்கத்தை நிறைவேற்றுவார்.
It is not our ability but our availability.
Gods *commandments are God's enablements*
*தேவனுடைய அழைப்பே நம்முடைய ஊழியத்தை சாத்தியமாக்கும் முக்கிய ஆயுதம் ஆகும்.*
மீதியானியர்களை தோற்கடிப்பதற்கு ஏதாவது தன்னிடமும் ஒரு பலம் வேண்டுமென்று கிதியோன் நினைத்தார். அது தவறு என்றும் வெற்றியை தருகிறவர் கடவுள் மட்டுமே என்பது உணர்த்துவதற்காக தான் *வெறுமனே முந்நூறு பேரைக் கொண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் படை வீரர்கள் கொண்ட மீதியானவர்களை* *கிதியோனைக் கொண்டு கர்த்தர் தோற்கடித்தார்.*
*ஒட்டகங்களை கொண்ட மாபெரும் படையை தீபந்தங்கள், பானை, எக்காளம்* *என்று போர்க்களத்தில் ஆயுதங்களாக பயன்படுத்த* *முடியாததை கொண்டு தேவன் வெற்றி கண்டார்.*
நியா 8:10,7:12
அதனால்தான் அந்த வெற்றியை பற்றி சங்கீதத்திலும், ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்திலும் சொல்லப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம்
சங்கீ 83:12, ஏசாயா 9;4,10:26.
.
. “Give me a hundred men
who fear nothing but sin and love nothing but God,
and I will shake the gates of hell!”. John Wesley
*பாவத்தை தவிர வேறு எதற்கும் பயப்படாத மற்றும் தேவனைத் தவிர வேறு யாரையும் அதிகமாக நேசிக்காத 100 பேரை என்னிடம் தாருங்கள் அவர்களைக் கொண்டு சாத்தானின் வாசல்களை அசைப்பேன்.John Wesley.*
எசேக்கியல் சண்முகவேல்