Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஆரோனை போல்
"ஆரோனை போல்” அழைக்கப்பட்டு ஊழியத்திற்கு வந்திருக்கிறேன் என்று* *புதிய ஏற்பாட்டு முழு நேர ஊழியர்கள் அல்லது மேய்ப்பர்கள் சொல்லலாமா?*

பல போதகர்கள்  நான் “ஆரோனை போல்” அழைக்கப்பட்டு ஊழியத்திற்கு வந்திருக்கிறேன் என்று சொல்வார்கள்.

*இந்த வார்த்தை வேதத்தின்படி சரியில்லை*


புதிய ஏற்பாட்டில்  அப்படிப்பட்ட ஆரோன் வழி அழைப்பு என்பதெல்லாம் கிடையாது .
*No Levitical priesthood in New Testament.*

The Levitical priesthood   என்கிற வார்த்தை புதிய ஏற்பாட்டில்   காலாவதியான  வார்த்தை.

மறுபடியும் பிறந்த எல்லோரும் மெல்கிசேதேக்கின்  முறைமையின்படியான  ஆசாரியர்களே .

பழைய ஏற்பாட்டில் லேவியர்கள் 30 முதல் 50 வயது வரைதான் அவர்கள் நேராக ஆசரிப்புக் கூடாரத்துக்குள் வேலை செய்ய முடியும். ( எண்ணா  4:3, 8:24-26)
  *50வயதில் அவர்களுக்கு ஓய்வு  கொடுக்கப்பட்ட* பிறகு ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைசெய்யாமல் திருப்பணி சேனையை விட்டு,ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக் காக்கிறதற்குத் தங்கள் சகோதரரோடே ஊழியஞ்செய்வதேயன்றி, வேறொரு சேவகமும் செய்யவேண்டியதில்லை.

*ஆரோன் வழிப்படி  ஊழியத்திற்கு   வந்தவர்கள் என்று சொல்பவர்கள்  இந்த 50 வயது கால வரண்முறைக்குள்*  *வருவார்களா* ?  

மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான ஆசாரியத்துவம்  அப்படியல்ல. மறுபடியும் பிறந்த எவரும் ஆசாரியரே.
மறுபடியும் பிறந்த நாள் முதல் ஆண்டவர் எடுத்துக்கொள்ளும் நாள் வரை ஆசாரியப் பணியைத் தொடரலாம்.

*பழைய ஏற்பாட்டில் எல்லா ஆசாரியர்களும்  லேவியர்களே.*
*ஆனால் எல்லா  லேவியர்களும்  ஆசாரியர்கள்  அல்ல. இதைபுரிந்து கொள்ள வேண்டும்*
பழைய ஏற்பாட்டில் யூதர்களின் சிறப்பு  அவர்களின் ஆரோன் வழி ஆசாரியத்துவம்.

  ஆனால்புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களின் மேன்மையே மெல்கிசேதேக்கின்  முறைமையின்படியான ஆசாரியத்துவம்தான்.

*ஆரோன் வழி ஆசாரியத்துவம் மாற்றப்பட்டுவிட்டது.*
ஆனால் மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான ஆசாரியத்துவம் இன்றும் உயிருடன் இருக்கிறது.
அது முதன்மையானது, நிரந்தரமானது

*ஆரோன் வழி ஆசாரியத்துவம் வாரிசு வழி  ஊழியத்தை அடிப்படையாகக்கொண்டது*
ஆரோன் வழி ஆசாரியத்துவத்தை  போதிப்பவர்கள் வாரிசு வழி ஊழியத்தைப் வலியுறுத்தி சொல்பவர்களாக இருப்பார்கள். அது வேதத்தின்படி சரியல்ல

எனவே *போதகர்கள்  “ஆரோனை போல்” அழைக்கப்பட்டு வந்திருக்கிறேன் என்று* *சொல்வதை விட்டுவிட்டு மெல்கிசேதேக்கின்* *முறைமையின்படி  அழைக்கப்பட்டு ஊழியத்திற்கு வந்திருக்கிறேன்* என்று சொன்னால்அதுவே புதிய ஏற்பாட்டு சத்தியத்திற்கு உகந்ததாக இருக்கும்.

யாரையும் குற்றம்  சொல்வதற்காக  சொல்லவில்லை.
இயேசு கிறிஸ்து, எப்படி  மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான  நம்முடைய பிரதான ஆசாரியராக இருக்கிறார் எனகிற சத்தியத்தை நீர்த்துப்போக  பண்ணுகிற எந்த வார்த்தையும் ,உபதேசத்தையும் நாம் கட்டாயம் எதிர்க்க வெண்டும்.

எசேக்கியேல் சண்முகவேல்