நமக்குத் தேவை ஒரு நன்றியுள்ள இருதயம்.
படிக்க நியா 8:,35
கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலுக்குச் செய்த சகல நன்மைக்குந்தக்க தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.
நியாயாதிபதிகள் 8:35
ஒரு மனிதன் எந்த அளவுக்கு தேவன் தனக்கு அளித்த ஆவிக்குரிய நன்மைகளுக்காக ஆண்டவரிடத்தில் உண்மையாக, அன்பாக, விசுவாசமாக இருக்கிறானோ *அந்த அளவுக்கு அந்த ஆசீ ர்வாதங்களை தனக்கு வழங்க காரணமானவர்களையும் அந்த ஆசீர்வாதங்களை தனக்கு கொடுப்பதற்காக தேவன் பயன்படுத்திய மனிதர்களையும் என்றென்றைக்கும் நினைவு கூர்ந்து நன்றி உள்ளவனாக இருப்பான்.*
தேவனுக்கு உண்மையாக இருக்கிறேன் என்று சொல்லுகிறவன் மனிதனுக்கும் உண்மையாக இருப்பான்.
.நான் தேவனுக்கு மட்டும் விசுவாசமாக, நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்று சொல்லி மனிதர்கள் தங்களுக்கு செய்த ஆவிக்குரிய நன்மைகளை மறக்கிறவன் உண்மையான விசுவாசியாக இருக்க முடியாது.
எந்த ஒரு ஆவிக்குரிய நன்மையும் இறைவன் வானத்திலிருந்து நேராக கொடுப்பதில்லை. அவற்றைக் கொடுப்பதற்கு ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு கருவியை ஒரு மனிதனை பாத்திரமாக பயன்படுத்தி தான் நமக்கு கொடுப்பார் .
அப்படி இருக்கும் பொழுது தேவன் பயன்படுத்திய அந்தப் பாத்திரத்தையும் நாம் நன்றி உள்ளவர்வர்களாக நினைவு கூற வேண்டும். அதுதான் வேதம் போதிக்கின்ற காரியம்.
மேலே குறிப்பிட்ட அந்த வசனங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை எதிரிகளிடமி ருந்து காப்பாற்றிய தேவனை மறந்து நினையாமல் போனார்கள் .
அதேபோல் கிதியோன் அந்த தேசத்திற்கு செய்த நன்மைகளை மறந்து அவன் வீட்டிற்கு நன்மைகளை திருப்பி செய்ய மனமில்லாமல் போனார்கள்.
*நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு சிறு உதவியை செய்தவர்களைக்* *கூட நாம் ஒருநாளும் மறந்து விடக்கூடாது. நமக்கு* *எப்பொழுதும் ஒரு நன்றியுள்ள இரு தயம் வேண்டும்.*
இன்றைக்கு நாம் எவ்வளவோ ஆவிக்குள்ளாக வளர்ந்து இருக்கலாம். படித்திருக்கலாம்.
ஆனால் ஆரம்ப காலங்களில் நமக்கு இந்த ஆவிக்குரிய சத்தியங்களை, அனுபவங்களை சொல்லிக் கொடுத்தவர்களை நாம் மறக்கக்கூடாது.
என்னதான் நாம் உயர்கல்வி படித்தாலும் நமக்கு ஆரம்ப நாட்களில் ஆனா ஆவன்னா கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை மறக்க முடியுமா? அது போலதான் *நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஆவிக்குரிய ஆனா ஆவன்னா பாடத்தை கற்றுக் கொடுத்த உறவுகளை என்றென்றைக்கும் நாம் மனதில் நிறுத்தி அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.*
இன்றைக்கு வளர்ந்து விட்டோம் என்பதற்காக அவர்களை அற்பமாக, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று புறந்தள்ள கூடாது. ஆண்டவர் எல்லாவற்றையும் கவனிக்கிறார்.
எசேக்கியல் சண்முகவேல்